பெண்களை காதலிக்க வேண்டும் என ஆசையா? இதோ உங்களுக்கான வழி..!

மனிதகுலம் தோன்றிய முதல் காதல் இருக்கிறது. காதல் மனிதனுக்கு மட்டுமல்ல , எல்லா உயிரினத்துக்குள்ளேயும் காதல் இருக்கிறது. மென்மையான காமம் தான் காதல். காதலில் ஒரு விதமான காமம் இழையோடிக் கொண்டிருக்கிறது. காமம் இல்லாமல் காதல் இல்லை. காமம் இல்லாத காதல் என்பது அன்பு. காதல் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை எதிர்பார்ப்பது . அன்பு எதிர் பார்ப்பற்றது. அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் செலுத்தலாம் . காதலுக்கு வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. அன்புக்கு வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

 

  ஆண் பெண்ணிடமோ , பெண் ஆணிடமோ அன்பு செலுத்தினால் அது காதலாக மாறும் . காதல் அன்பாக மாறாது. காதல் என்பது உணர்வுகளின் உச்சக்கட்டம் . கால் முறிந்தால் கூட சரியாக்கலாம் ஆனால் காதல் முறிந்தால் ஒன்றும் செய்ய இயலாது. அன்புக்கு காரணம் சொல்லலாம் , காதலுக்கு காரணம் சொல்ல முடியாது. அன்பும் காதலும் வேறு வேறு , பிரித்தறிய தெரிய வேண்டும். அன்புக்கு வரையறையுன்டு . காதல் அப்படியல்ல,அன்பை விட ஒருபடி மேலே,உயிருடன் உயிராய் உடலுடன் உடலாய், அப்படிபட்ட மேலான காதலை வெற்றி பெறச்செய்வது எப்படி?
காதலில் வெற்றி பெறுவது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான், இருந்தாலும் காதல் செய்துவிட்டு அதிலிருந்து வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் . ஒரு சில பேரே காதலில் வெற்றி பெறுகிறார்கள். கடைசிவரை சந்தோசமாக வாழ்கிறார்கள் .

காதல் செய்வதற்கு முன் நாம் வாழும் சமுதாய அமைப்பை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் .உணர்ச்சி வசப்படக்கூடாது. காதலை வெளிப்படுத்தாமல் காதலிக்கக்கூடாது. காதலை வெளிப்படுத்துவதற்கு முன் காதலரைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
காதலரின் நண்பர் மூலமாக அவரைப்பற்றி தெரிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வெளித்தொற்றம் கண்டு எடை போடக்கூடாது. அவரது பெற்றோர் மற்றும் சொந்த ஊர் முதலியன தெரிந்து கொள்வது நல்லது. பெற்றோர்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர் பெற்றோரை எதிர்த்து துணிச்சலோடு கல்யாணம் செய்து கொள்வாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை எதிர்த்து வர முடியாதவராய் இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் . காதலர் கடைசி நேரத்தில் காலை வாரிவிடடால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் .

கண்டபடி சுற்றுவதை தவிர்க்க வேண்டும் . வரம்பு மீறி நடப்பதை தவிர்க்க வேண்டும் . அளவோடு சந்தித்து அளவோடு பேச வேண்டும் . அன்றாடம் குடும்பத்தில் நடந்த விசயங்களைப் பேசுவதை தவிர்க்க வேண்டும் . அறிவுப்பூர்வமன விசயங்களைப் பேச வேண்டும் . பொதுவான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் .
காதலர் கல்யாணம் பற்றி பேசும் போது என்ன நினைக்கிறார். அவரில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்று கவனிக்க வேண்டும் . காதலை வெளியிட்டவுடன், கல்யாணத்துக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . அதிக காலம் கடத்தக் கூடாது. காலம் கடத்தும் காதலரை உற்று நோக்க வேண்டும் . உள் மனதை ஆராய வேண்டும். காலம் கடத்துவது நியாயமானது தானா என்று ஆராய வேண்டும் . காதலர் ஏமாற்றிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பாதிக்கிணறு தாண்டும் போது அம்மா அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்று சொல்வார்கள் .அப்படிப்பட்ட காதலர் அம்மா அப்பாவை எதிர்த்து துணிச்சலாக கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார். பெற்றோரை காரணம் காட்டிக் கொண்டே இருப்பார். இப்படிப்பட்டவரின் காதல் தோல்வியில் போய் முடியும். அதனால்தான் காதலை வெளிப்படுத்தியவுடன் காலம் கடத்தக் கூடாது. பெற்றோருக்கு விருப்பமில்லை என்று காலம் கடந்து தெரியவரும் போது வருத்தமாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியாது , பிரச்னைகள் தலையெடுக்கும், உடனே திருமணப் பேச்சை தொடங்க வேண்டும். காதலிப்பது மூண்றாம் நபருக்கு தெரியக்கூடாது என்று மறைக்கக்கூடாது. அவ்வாறு மறைப்பது தமக்கு தாமே குழிபறித்துக் கொள்வது ஆகும்.

காதலை வெளியிட்டவுடன் , இருவர் மனமும் ஒத்துப் போனவுடன், தாங்கள் காதலர்கள் என்று இவ்வுலகம் அறிய வேண்டும். அப்போதுதான், உடனடி எதிர்ப்புகள் சமாளிக்கப்பட்டு, சமாதானப்படுத்தப்பட்டு, காதல் கல்யாணத்தில் போய் முடியும். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணத்தை தள்ளிப்போடும் காதலரைவிட்டு உடனடியாக தள்ளிப் போய்விடுவது நல்லது.இல்லையென்றால் இறுதியில் ஒன்றும் செய்யமுடியாமல் காதலில் தோல்வி கண்டு துவண்டு விழ நேரிடும். அல்லது காதலரை கட்டாயப் படுத்தி கல்யானத்துக்கு உடனடியாக சம்மதிக்க வைத்து கல்யாணத்தை முடித்து விட வேண்டும். இது இரு பாலருக்கும் பொதுவானது.

சிலர், பெற்றேர்ருக்கு சம்மதமில்லை வரதட்சனை எதிர்பார்க்கிறார்கள் , வரதட்சனை கொடுத்தால் சம்மதிப்பார்களாம் என்று சொல்லும் காதலனைவிட்டு உடனடியாக விலகிவிடுவது நல்லது. வரதட்சனை கொடுத்தபின்பும் பெற்றோரின் கொடுமை தொடர்ந்தால் என்ன செய்வது . இவையெல்லாம் முன்கூட்டியே அறிய வேண்டும். வாய் சொல் வீரனா?செயல் வீரனா என்று அறிந்து காதல் செய்ய வேண்டும். காதலர்கள் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளு முன் பெற்றோர்களின் சம்மதத்தை கேட்டுக்கொள்வது நல்லது, குடும்பச்சூழ்நிலை, பொருளாதாரம், பாரம்பரியம், முதலியவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு காதலித்தால் இனிமை கூடும்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

காதலில் என்றும் உடல் நாட்டம் இருக்க கூடாது. காதல் மனம் சார்ந்ததாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும் . உயர்வானதாக இருக்க வேண்டும் .உத்தமமாக இருக்க வேண்டும் . வாழப்போகும் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்க வேண்டும் காதல். காதல் இவ்வாறாக இருந்தால் வெற்றி பெறும் . இன்றைய சமுதாயத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் அதிகமாக காதல் செய்கிறார்கள் . அவர்களின் காதலில்தான் ஆயிரம் பிரச்னைகள் . எத்தனையோ விசயங்களை அலசி ஆராயும் இவர்கள் சொந்த விசயங்களில் சோடை போய் விடுகிறார்கள்.
கட்டுப்பாடில்லாமல் வரம்பு மீறி நடந்துவிட்டு, பின் காதலென்று சொல்லி காலம் கடத்துபவர் ஏராளமானோர்.

இதையும் படிக்கலாமே
பொடுகுத் தொல்லைக்கு புளித்தத் தயிர்
சருமத்தை வெள்ளையாக மாற்ற
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்ற...
முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைக...
பழஞ்சோறு யாரெல்லாம் சாப்பிடுவீர்கள்
உங்கள் காதலியிடம் இந்த குணங்கள் இருக்க...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பிரபல பா...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...
அதிகமாக பகிருங்கள் .வீட்டில் நிறைவான ச...
கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ...
மோசமான பழக்கத்தை கைவிட தலையை இரும்பால்...