இலங்கை சிறுமிகளை வாங்கும் சவுதி அரேபியா. பாலியல் அடிமைகளாக செல்வந்த நாடுகளுக்கு விற்பனை .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சவூதி அரேபியாவிற்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படும் இலங்கைச் சிறுமிகள்!! இளவரசி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள்  சவூதியில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக  சவூதி  இளவரசியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரின் முன்னாள் மனைவி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இளவரசி அமீராவின் மேற்படி விடயம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பும் தகவல்களைக் கொண்ட பேட்டி கடந்த ஞாயிறுக்கிழமை, பிரான்ஸ் சஞ்சிகையான லீ மொண்டெவில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ரோமானியா, மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளின் அழகான அநாதைச் சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுகின்றனர்
அதிலும் வௌ்ளைத் தோல் கொண்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அங்கு பெரும் கிராக்கி காணப்படுகின்றது. அதேபோன்று பெரும் பணக்கார குடும்பங்கள் மது மற்றும் போதை மருந்துகளையும் பாவிக்கின்றனர்.
அந்தக் குடும்பங்களுக்குள்ள செல்வாக்கு காரணமாக பொலிஸாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. அத்துடன் தற்போதைக்கு சவுதியில் பல்வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து ஆடிப்பாடி மகிழும் களியாட்ட வைபவங்கள் தாராள மது பரிமாறலுடன் நடைபெறத் தொடங்கியுள்ளன.
அவற்றில் பாலியல் அடிமையாக விற்கப்படும் சிறுமிகளின் நடனம் அரங்கேற்றப்படுகின்றது.
குறித்த சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கும் நபர்களின் கட்டுப்பாட்டை விட்டு அவர்கள் வெளியில் இறங்கவே முடியாது என இளவரசி அமீரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
வைட்டமின் ஏ சர்க்கரை வள்ளி கிழங்கில் அ...
செவ்வாழைப்பழம்
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
23 மூன்று வயதான பிரபல நடிகை மர்மமான மு...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
தொகுப்பாளினி டிடி-யின் விவாகரத்துக்கு ...
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்...!
இதனால் தான் எம்,எல்,ஏ வை கன்னத்தில் அற...
ஓடும் பஸ்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares