இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த முறையால் சில பொருட்களுக்கான வரி ஏற்கனவே இருந்ததை விட அதிகரித்தது. இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்கள் மத்தியிலும் விலை உயர்வு எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையடுத்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் கடந்த 10-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதில் அனைத்து வகை ஓட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 180 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 80 சதவீத பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 1-ந்தேதி 250 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத வரி தற்போது 50 பொருட்களுக்கு மட்டும் உள்ளது. சிகரெட் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் வரி உள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சாக்லெட், மரச்சாமான்கள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, மார்பிள், டைல்ஸ், டி.வி., வானொலி உள்ளிட்ட 178 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீதம் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கிரைண்டர், பீரங்கி வாகனம், பதப்படுத்தப்பட்டுள்ள பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அச்சகமை, விவசாய எந்திரம் உள்ளிட்ட 13 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடலை மிட்டாய், பொறி உருண்டை, உள்ளிட்ட 6 பொருட்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி வலைகள், ஆடைகள், கயிறு உள்ளிட்ட 8 பொருட்களுக்கான வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உலர வைக்கப்பட்ட காய்கறி, பதப்படுத்தப்பட்ட மீன் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீதம் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இவை அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட 132 நாட்களில் 213 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

நன்றி மாலை மலர்

இதையும் படிக்கலாமே
Bigg Boss சினேகனை பழிவாங்கும் ஜூலி.. எ...
பிக் பாஸ் பர பரப்பு உதடு முத்தம்!!!
மனிதநேயம் வென்றது
பெண்களின் மார்பை குறி பார்க்கும் இவர்க...
விபச்சாரத்தில் சிக்கிய தீவன நடிகை - சி...
விஜயிற்கு 152 அடி கட் அவுட் வைத்து அசத...
நீங்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடு...
அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும...
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல பிக் பாஸ...