இலங்கையைச் சேர்ந்த பெண் 26 வருடங்களுக்கு பிறகு தன் தாயை தேடி வந்த அயர்லாந்தின் பிரபல பெண்மணி..!

இலங்கையில் பிறந்த பிரித்தானியாவின் பிரபல பெண் ஷெரி எசேஸன் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிப்பதற்கான DNA பரிசோதனையை மேற்கொண்டார்.

      

DNA பரிசோதனையின் அடிப்படையில் 99.99% வீதம் தாய்க்கும் மகளுக்கும் பொருத்தம் உள்ளதாக பரிசோதனையை மேற்கொண்ட பிரித்தானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் இணைந்துள்ள இலங்கை பெண், தனது தாயாரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்தார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அதற்கமைய அவர் சொந்த தாய் என கண்டுபிடித்த பெண்ணுக்கு DNA பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனை வெற்றியளித்து அவர் தனது தாயை உறுதி செய்துள்ளார்.

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த ஷெரி எசேஸனுக்கு, வீர முதியன்சலாகே நிரோஷிகா என பெயரிடப்பட்டது. அவர் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து தம்பதி ஒன்றுக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பிரித்தானியாவில் இணையம் ஊடாக வாக்களிக்கும் முறையை தயாரித்தமை உட்பட விசேட பல விடயங்களில் ஷெரி எசேஸன் பங்களிப்பு உண்டு. மேலும் பல முறை உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.