எகிப்து – சூடான் இடையில் 800 சதுர மைல் இடத்திற்கு அரசனான இந்திய இளைஞன். வைரலாகும் புகைப்படங்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.9K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
எகிப்து – சூடான் இடையே, 800 சதுர மைல் இடத்துக்குத் தன்னை அரசனாக அறிவித்த இந்தியர்!இந்தியாவின் இந்தூர் நகரைச் சேர்ந்த திக்‌ஷித் என்ற இளைஞர், எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் இடத்தைத் தனது நாடு எனவும், இதற்கு நான்தான் அரசன் எனவும் தெரிவித்துள்ளார். 

எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் வரண்ட பாலைவனப் பகுதி, பிர் டவில். 800 சதுர மைல் இருக்கும் இந்தப் பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை. இங்கு மனிதர்களும் வாழ்வதில்லை. ஆள் இல்லாத இந்தப் பகுதியை இந்திய இளைஞர் ஒருவர் தனது நாடாக அறிவித்துள்ளார்.இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில், “நான் சுயாஷ் திக்‌ஷித். எனது பெயரின் அடிப்படையில் இந்தப் பகுதிக்கு, ’கிங்டம் ஆஃப் திக்‌ஷித்’ என பெயரிட்டுள்ளேன்.நான் என்னை இந்த நாட்டின் முதல் அரசனாக இந்த உலகுக்கு அறிவிக்கிறேன்” என்றார். இந்த பாலைவனப் பகுதியில் விதை ஒன்று போட்டு, அதற்கு தண்ணீர் விட்டு, இரண்டு இடங்களில் தனது கொடியையும் நட்டுள்ள அவர், இந்தப் பயணம்குறித்து விவரிக்கிறார். அதில், “எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் இந்த பகுதிக்குச் சென்றேன். 6 மணி நேரம் பயணம்செய்து, பாலைவனத்தின் நடுப்பகுதியை அடைந்தேன். அங்கு, விதைகள் தூவி, அதற்குத் தண்ணீர் அளித்தேன். இதை எனது நாடாக அறிவித்து, என்னை முதல் அரசனாகவும் இந்த உலகிற்கு அறிவித்துக்கொண்டேன். 

இந்தப் பகுதிக்கு, ஏற்கெனவே சிலர் சொந்தம் கொண்டாடி உள்ளனர். ஆனால், இது இப்போது எனது நாடு (இங்கு விதை விதைத்ததைக் காரணமாகக் கூறியுள்ளார்). அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் ” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க ஐ.நா-வுக்கு என தனியாக சில வழிமுறைகள் உள்ளது. வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில், மக்கள் நிரந்தரமாக வாழ வேண்டும் என இருக்கிறது. இந்தப் பகுதியை, இதற்கு முன்னர் வேறு சிலரும் சொந்தம் கொண்டாடியுள்ளனர். இவரது இந்தச் செயல், உலக அரங்கில் செம வைரல் ஆகியுள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.9K
  Shares