கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் வாழ்க்கைப் பயணம் . உங்களுக்காக.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
கண் கலங்க வைத்த இயக்குனர் முருகதாஸ் வாழ்க்கை பயணம் :இயக்குநர் #முருகதாஸ் கூறியது :தமிழ்நாட்டில் #கள்ளகுறிச்சியில் ஒரு ஏழை வீட்டில் பிறந்த நான். எனக்கு 4 அக்கா. 2 தம்பிகள்.. அரசு பள்ளியில் தான் படித்தேன். அப்பா சாதாரண பாத்திர வியாபாரி.. நான் கல்லூரி படிப்பை திருச்சியில் படித்து கொண்டிருக்கும்போதே திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக் இருந்தது. சிறு சிறு கதைகள் எழுதுவேன் . கல்லூரியை முடித்து விட்டு சென்னையில் 3 நபர்களுடன் சேர்ந்து ரூம் எடுத்து தங்கினேன். என் அப்பா எனக்காக மாதந்தோறும் 400 ரூபாய் அனுப்புவார். என் வீட்டு மொத்த செலவுக்கு 500 ரூபாய்தான் வைத்து கொள்வார். அந்த நேரத்தில் ரூம் வாடகை 100 போய்விடும்.அந்த நேரத்தில் ஒரு இட்லி யின் விலை 50 காசு. அதை சாப்பிட்டு காசை மிச்சம் வைத்து கொள்வேன்.ஒரு நாளைக்கு 10 ரூபாய் வைத்து மாதத்தின் செலவை கழிப்பேன்.கலைமணி அவர்களிடம் உதவி இயக்குனராய் சேர்ந்தேன். அவரை சந்திக்க நிறைய பேர் வருவார்கள் நான் அவர்கள் அருகில் நின்று அவர்கள் பேசுவதை குறிப்பு எடுப்பதும் அவர்களுக்கு உணவு , காபி பரிமாறுவதும் என் வேலை.. அந்த நேரத்தில் என்னுடன் படித்த அனைத்து மாணவர்களும் டாக்டர் ஆகவேண்டும் , என்ஜினீயர் ஆகவேண்டும் என்று கூறுவார்கள். நான் மட்டும் என் தந்தையிடம் இயக்குனராக வேண்டும் என்று கூறினேன்.

என் அப்பா இடத்தில்.. வேறு ஒருவர் இருந்தால் 4 அக்கா இருகிறார்கள் அவர்களை பார் என்று கூறியிருப்பார். ஆனால் என் தந்தை நீ கதை எழுது சென்னைக்கு போ என்று கூறினார்..போராடு கண்டிப்பா நீ நினச்சது நடக்கும்னு சொன்னாரு.. 60 வயசுல அவருக்கு சிறு நீரக பிரச்னை வந்தது. வேளைக்கு போக முடியாம வீட்ல இருந்தார். அப்போதான் என் குடும்பத்துல ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம கஷ்ட பட்டோம்.ஆனாலும் அவரு ஆசைப்பட்டது நான் மிக பெரிய இயக்குனர் ஆகணும் என் முதல் படத்த பாக்கணும்னு ரொம்ப ஆசைபட்டார்..அவரு இறுதி படுக்கையில் இருக்கும்போது அவர ஹாஸ்பிடல் சேர்த்தோம்.ஆனா அங்க முடியாது வீட்டுக்கு கொண்டு போக சொன்னாங்க. அந்த நேரத்தில் கார் செலவுக்கு 3000 ரூபாய் கூட இல்ல என் அப்பாவ கூப்பிட்டு போக..1997 இல் என் அப்பா இறந்து விட்டார். அவர் பிணத்தை நடுவீட்டில் இருக்கும்போது என் உறவினர் அனைவரும் என்னை கேவலமாக திட்டினர் இன்னும் சினிமா சினிமானு இப்டியே சுத்து. நீ உருப்பிட மாட்ட என்று கூறினர் .ஆனாலும் என் அப்பா என்கிட்ட கடைசியில் எழுதன கடிதம் வரை நீ பெரிய ஆளா வருவிட என்றுதான் கூறினார்.. 1997 இல் அப்பா இறந்து விட்டார். 2001 இல் தல அஜித்குமார் நடித்த தீனா படம் வெளி வந்தது. என் அப்பாக்கு என் செலவில் ஒரு டீகூட வாங்கி கொடுத்தது இல்லை..இன்று அதே ஊருக்குள் என் குடும்பத்தோட சொந்த காரில் செல்கிறேன். என் பின்னால் ஒரு கார் என் பாதுகாப்பிற்கு வருகிறது. என்னோட ஹீரோ என் அப்பா மட்டும்தான். என் அப்பா வாங்கன எல்லா கடனையும் அடைச்சேன். என் அக்கா எல்லாருக்கும் வீடு வாங்கி கொடுத்து விட்டேன். என் தம்பிங்களுக்கு கடை வச்சி கொடுத்தேன்.இன்னைக்கு என் குழந்தைங்க A.C ரூம்ல தங்குறாங்க. பெரிய கார்ல போறாங்க. அவங்க கூட போகும்போது கூட்டமா போற பஸ்ஸ காமிச்சி இதுலதாண்ட உங்க அப்பா ஒரு நாள் போய்ட்டு இருந்தேன்னு சொன்னேன் . ஆனா என் குழந்தைங்க சாதரணமா சொல்றாங்க அதுனால என்னப்பா??.. நாங்க அதுல போகலையே அப்டின்னு சொல்றாங்க..நம்ம காலத்துல பணத்துக்கு மதிப்பு இருந்தது…. ஆனா இன்றைக்கு? அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

#ARmurugadoss


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares