இலங்கையில் கைதான பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்..!

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப்பயணிக்கு இலங்கை அரசாங்கம் ஐந்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனில் குணரத்ன, ஈவா வனசுந்தர மற்றும் நளீன் பெரேரா ஆகிய மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழாம், நேற்று (புதன்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நயோமி மைக்கல் கோல்மன் என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணி கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்தார்.

அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் அவரை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தனர். உரிய முறையில் சுற்றுலா விசா பெற்றுச் சென்ற அவரை, விசாரணையின் பின்னர் திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என அவர் வழக்குத் தக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த மூன்று வருட காலமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நயோமி புத்தரின் உருவத்தை பச்சைக் குத்திக்கொண்டது அவரது அடிப்படை உரிமை என்றும், அதற்காக அவரைக் கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நயோமிக்கு நட்டஈடாக ஐந்து இலட்சம் ரூபாவையும், வழக்குக்காக அவர் செலவிட்ட இரண்டு இலட்சம் ரூபாவையும் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மேலும், நயோமியை கைதுசெய்த கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் தலா ஐம்பதாயிரம் ரூபாவை நயோமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜாவின் கடிதம்
நான் தமிழ் கலாச்சரம் காப்பவன்...!
டெங்குவில் இருந்து எப்படி தப்பிப்பது?
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தல 58 படத்தில் இணையும் முக்கிய இசை பிர...
தூக்க மாத்திரை சாப்பிட்டு சாலையோரம் மய...
64 இடங்களின் மர்மமான பயங்கர சத்தம் .! ...
ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் இவர...
300 நபர்களை ஏற்றிச்சென்ற கப்பல் திடீர்...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
போதை மருந்து கொடுத்து பெண்களை சீரழிக்க...
பெண்களை இப்படியும் பாலியல் தொல்லை செய்...