அதிகமாக பகிருங்கள்: மருத்துவர்கள் தேவைப்படாத மருத்துவம் நடைப்பயிற்சி

இன்றைய நவீன உலகில், ஓடிஓடி வேலை செய்தாலும் அவ்வப்போது நம்மை சோம்பலும், மறதியும் மற்றும் நோய் தாக்குதலும் சூழ்ந்து கொண்டுவிடுகிறது. அதில் இருந்து தப்பிக்க ஒரே வழி நடை பயிற்சியே சிறந்தது.

உடல் உழைப்பு, விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாதவர்களுக்கு அற்புதமான வாய்ப்புதான் நடை பயிற்சி. நமக்கு, கராத்தே, யோகா, உடற் பயிற்சிகள், ஓட்டம், பல்வேறு விளையாட்டுக்கள் போன்றவைகளை விட நடை பயிற்சி மிகவும் எளிது.

நல்ல நடை பயிற்சி, மன இறுக்கம், மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதிற்கு மகிழ்ச்சி தரும், நலம் தரும் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். உடல் செயல்பாடுகள் மேம்படும். நன்றாகப் பசி எடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

உடல் சோர்வை குறைத்து, வலிமை தருகிறது. யாரும் எங்கும் நடக்கலாம், எந்த வயதிலும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.

குறிப்பாக, பெண்கள் மற்றும் நோய் தாக்குதலில் மீண்டு வருபவர்களுக்கு மிகவும் எளிமையானது.

தினசரி நடை பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ…

உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது,முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது, கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும், நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும், அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது, அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது, மூட்டுகளை இலகுவாக்குகிறது.எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது. நல்ல தூக்கம் வர உதவுகிறது.‘கொலஸ்ட்ரால்’ அளவைக் குறைக்கிறது.
மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

1. நீரிழிவு நோய் கட்டுப்படும்

உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரம் புதுடெல்லி என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் வருடந்தோறும் நீரிழிவு நோயாளிகள் கூடிக்கொண்டே போகிறார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது. நீரிழிவு நோயாளிகளுடைய தசைகளில் சோம்பலுடன் சுருண்டு கிடக்கும் மெல்லிய ரத்தக் குழாய்கள், நடைப்பயிற்சியின்போது பல கிலோ மீட்டர் அளவுக்கு விரிந்து கொடுக்கின்றன;அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

புதிய ரத்தக் குழாய்கள் ஏராளமாகத் தோன்றுகின்றன. இதனால், தசைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையைப் பயன்படுத்த இப்போது அதிக இடம் கிடைக்கிறது. இதன் மூலம் ரத்தச் சர்க்கரை குறைகிறது.

அடுத்து, டைப் டூ சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது. அப்படியே சுரந்தாலும், அது முழுவதுமாக வேலை செய்யாது. இன்சுலினை ஏற்று சர்க்கரையைப் பயன்படுத்திச் சக்தி தருவதற்கு, இவர்கள் உடலில் ‘இன்சுலின் ஏற்பான்கள்’ (Insulin receptors) தயாரில்லை. அதே வேளையில், ‘இன்சுலின் ஏற்பான்கள்’ முழு ஒத்துழைப்பு கொடுத்தால், இந்த நிலைமையைச் சரி செய்துவிடலாம். இதற்கு நடைப்பயிற்சிதான் உதவ முடியும்.

எப்படி என்றால், தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது, உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் ஏற்பான்கள் தூண்டப்படுவதால், மீண்டும் அவை புத்துயிர் பெற்றுச் செயல்படத் தொடங்குகின்றன. இதனால், இதுவரை பயன்படாமல் இருந்த இன்சுலின், இந்த ஏற்பான்களுடன் இணைந்து, ரத்தச் சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

2. மாரடைப்பு தடுக்கப்படும்

நாற்பது வயதைக் கடந்த பெரும்பாலோருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ரத்தக் கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகம். இவர்கள் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம். நடைப்பயிற்சி ரத்தக் குழாய்களின் மீள்திறனை அதிகப்படுத்துவதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.

வேகமாக நடக்கும்போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால், இதயத் திசுக்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; மேலும் நடைப்பயிற்சியானது இதயத்துக்குத் தீமை செய்கின்ற எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்துக்கு நன்மை செய்கின்ற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. இதனால், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை தாக்கும் விகிதம் குறையும்.

3. உடல் பருமன் குறையும்

ஒரு மணி நேரம் வேகமாக நடக்கும்போது உடலில் 300 கலோரி வரை சக்தி செலவாகிறது. இந்தச் சக்தியைத் தருவது கொழுப்பு. இதன் பலனாக, உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது; ரத்த கொலஸ்ட்ரால், உடல்பருமன் ஆகிய பாதிப்புகளும் குறைகின்றன.

4. சுவாச நோய்கள் குறையும்

நடைப்பயிற்சி என்பது காற்றை உள்வாங்கிக் கொள்ளும் ‘ஏரோபிக் பயிற்சி’ என்பதால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் பெற்று, சுவாச மண்டலமும் இதய ரத்தநாள மண்டலமும், அதை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் இதய இயக்கம் வலிமை பெறுகிறது. நுரையீரலின் சுவாசத் திறன் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாச நோய்கள் கட்டுப்படுகின்றன.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

5. மன அழுத்தம் மறையும்

தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு ‘எண்டார்பின்’ எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு வழி வகுக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பதற்கு இது உதவும்.

6. முழங்கால் வலி தடுக்கப்படும்

வழக்கமாக 40 வயது ஆகிவிட்டாலே முழங்கால் வலி தொடங்கிவிடும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம்தான் இதற்குக் காரணம், 20 வயதிலிருந்தே நடைப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது அல்லது தள்ளிப்போகிறது. இதற்குக் காரணம், நடைப்பயிற்சியானது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. எலும்புகளையும் தசை நாண்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது.

நடைப்பயிற்சியால் எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலுவடைகின்றன. முழங்கால் மூட்டுகள் உடல் எடையைத் தாங்குவதற்குச் சிரமப்படும்போதெல்லாம், அந்த எடையைக் கால் தசைகள் தாங்கிக் கொள்கின்றன. இதன் பலனாக, முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. மேலும் இது முதுமையில் வருகின்ற ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புச் சிதைவு நோயைத் தடுக்கிறது.

இவை தவிர, உணவு நன்றாகச் செரிமானம் ஆகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நன்றாக உறங்க முடிகிறது. நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்பட முடிகிறது. தன்னம்பிக்கை பெருகுகிறது. ஆக்கப்பூர்வ மனப்பான்மை வளர்கிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

7. இரண்டாவது இதயம்!

தினமும் முறையாக நடைப்பயிற்சி செய்கிறவர்களுக்குக் கால் தசைகள் இரண்டாவது இதயம் போல் செயல்படுகின்றன. வேகமாக நடக்கும்போது, கால்களில் ரத்தக்குழாய்களுக்குப் பக்கத்தில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு, இதயம் செயல்படுவதுபோல் வலுவான அழுத்தத்துடன் ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகின்றன. எல்லா உடல் உறுப்புகளும் சீராகப் பணி செய்து ஆரோக்கியம் காக்கின்றன. ஆகவே, நடைப்பயிற்சி செய்பவர்கள் இரண்டு இதயங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவதால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.

எப்படி நடக்க வேண்டும்?

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், அதிகபட்சமாக 1 மணி நேரம் நடக்க வேண்டும். நடக்கின்ற தூரம்தான் அளவு என்றால், தினமும் 3-லிருந்து 5 கி.மீ. தூரம் வரை நடக்க வேண்டும். தினமும் நடக்க முடியாதவர்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடங்கள் நடந்தாலும் நன்மைதான்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கை கால்களை வீசி, விரல்களை விரித்து, முழங்கையை மடக்கி நீட்டிப் பயிற்சி செய்துகொண்டே நடக்கலாம். இதற்கு ‘டைனமிக் வாக்கிங்’ என்று பெயர். ‘பிரிஸ்க் வாக்கிங்’ என்று சொல்லக்கூடிய கை, கால்களுக்கு வேகம் கொடுத்து நடக்கும் பாணியையும் பின்பற்றலாம். இளைஞர்கள்/இளம்பெண்கள் ஜாகிங் செல்லலாம்.

முக்கியமான விஷயம், சாப்பிட்டதும் நடக்கக் கூடாது; உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நெஞ்சு வலி இருப்பவர்கள், அடிக்கடி மயக்கம் வருபவர்கள், முழங்கால் மூட்டு வலி, குதிகால் வலி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுத்தான் நடக்க வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மற்ற எல்லா உடற் பயிற்சிகளையும் விட, நடை பயிற்சியே மிகவும் எளிமையானது சிறந்தது. டாக்டர்களின் மருந்து, மாத்திரை, காசு செலவில்லாதது நடை பயிற்சி. நடை பயிற்சி முடிந்து, வியர்வை அடங்கிய பிறகு, சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடை பயிற்சி முடிந்து, அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு குறையும். தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்காமல், உடம்பில் மட்டும் படுமாறு குளித்தால், உடலின் சூடு முழுவதும், தலைக்கு சென்று ஏதேனும் நோய் வரலாம். நடை பயிற்சியின் போது, உடலிலுள்ள 72 ஆயிரம் நாடி நரம்புகளுக்கும் ரத்தம் பாய்ந்து, சுறுசுறுப்பு அடைகிறது.

நடை பயிற்சி செய்யாதவர்களுக்கு எல்லாம், மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையை தட்டிப் போடுகிறது என்பதை மறவாதீர்கள். சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரிவிகித உணவு, நடை பயிற்சி, சரியான ஓய்வு, இவை ஆறும், உங்களிடம் காசு வாங்காத டாக்டர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தினமும் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும். ஆரோக்கியம் நம்முடன் எப்போதும் இருக்கும். விரட்டினால்கூட போகாது. அந்த அளவு நன்மை தருகிறது நடைபயிற்சி.

எனவே, இன்றை தொடங்கலாம் நடைபயிற்சியை. ஏற்கனவே, தொடங்கி பயிற்சி மேற்கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு இன்னும் சில நிமிடங்கள் அதிகப்படுத்தலாம். இயற்கை கொடுத்துள்ள அற்புத வரம் தான் நடை பயிற்சி.

மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
கராம்பின் மருத்துவ குணம்
பிறக்க போகும் குழந்தை ஆணா? என்று தெரிந...
முகப் பருவால் கவலையா? கவலையை விடுங்கள்...
பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள் பற்ற...
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இப்படி...
வெறும் வயிற்றில் உண்ணக் கூடாத உணவுகளை ...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 10 ரூபாய் ...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதம் க...
இளமையில் இதை சாப்பிடுங்கள் முதுமையிலு...
ச(ஜ)வ்வரிசி பிரியரா நீங்கள் .? இதை கொஞ...
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சர...