சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு ! மற்றும் சாலினி பற்றிய அழகிய தொகுப்பு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.9K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  3.4K
  Shares

சினிமாவில் பேபி ஷாலினி என்றால் அப்போதே அனைவருக்கும் அத்துபடி. பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர். ஷாலினி குமார், ஷாலினி அஜித் என அழைக்கப்படும் இவருக்கு நவம்பர் 20 இல் பிறந்தநாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அஜித் ரசிகர்களை பொறுத்துவரை இவர் அண்ணி. இவரை பற்றிய சில சுவாரசியமான விசயங்கள் இங்கே.

பேபி ஷாலினியை அடையாளம் காட்டியது மலையாளத்தில் வந்த எண்டே மாமாட்டிகுட்டியம்மாக்கு. இதனை தொடர்ந்து 26 படங்களில் குழந்தையாகவே நடித்துள்ளார்.பின் தமிழில் 1984 ல் ஓசை படத்தில் எண்ட்ரியை தொடர்ந்து 10 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடத்தில் ஒரு படத்தில் மட்டும் தான். 4 வயதில் நடிக்க ஆரம்பித்தவர் 1983 முதல் 2001 வரை மிகவும் பிசியாகிவிட்டார்.1985 இல் பிள்ளை நிலா, விடுதலை என இரு படங்களில் மட்டுமே ஷாலினி என்ற பெயர் தான். இளையதளபதி விஜய்க்கு காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோயின். கண்ணுக்குள் நிலவு படத்திலும் இந்த ஜோடி தொடர்ந்தது.

அஜித்க்கு பிரியமான மனைவியாக இருக்கும் ஷாலினி அமர்க்களம் படத்தில் தான் அவருக்கு ஜோடியானார். பின் மாதவனோடு அலைபாயுதே, பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் படத்தில் நடித்திருந்தார்.அமர்க்களம் படத்தில் மலர்ந்த அவர்களின் காதல் இருவீட்டார் சம்மதிக்க 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷானிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.தற்போது அஜித், அனோஷ்கா, ஆத்விக் என தன் குடும்ப பணிகள் சரியாக இருக்கிறது. இதற்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ள ஷாலினிக்கு அஜித் கொடுத்த பரிசு சென்னை திருவான்மியூர் வீட்டில் ஒரு பேட்மிட்டன் ஆடுகளம். வீட்டில் அதற்கான பணிகள் முடிந்த பிறகு சமீபத்தில் தான் மீண்டும் குடியேறினார்கள்.

ஷாலினியின் புன்னைகை போல என்றும் தொடர புரட்சி வானொலியும் அவருக்கு மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.9K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  3.4K
  Shares