சுவிட்சர்லாந்தில் 70000 பிராங்குகளுடன் குடியேற ஆசையா?

சுவிட்சர்லாந்தின் கிராமத்தில் 10 வருடம் வசிப்போருக்கு 70,000 பிராங்க் நிதியுதவி வழங்கிட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

சுவிஸ் நாட்டின் LUEKERBAD பகுதியில் 240 பேர் கொண்ட சிறிய கிராமம் Albinen.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த அழகிய கிராமத்தில் வசித்து வந்த நிரந்தர குடிமக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் வெளியேறி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 8 குழந்தைகள் அடங்கிய மூன்று குடும்பத்தினர் வெளியேறியதன் விளைவாக பள்ளியை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கிராம சபையின் தலைவர் தலைவர் Beat Jost தெரிவித்திருந்தார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

எனவே கிராமத்தின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கவுன்சிலை வலியுறித்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் குறைந்தது 10 ஆண்டுகளாவது வசிக்க வரும் குடும்பத்தின் பெரியவர்களுக்கு தல 25000 பிராங்க், குழந்தைகளுக்கு தலா 10000 பிராங்க் என 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக 70000 பிராங்க் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர், இதுதொடர்பான வாக்கெடுப்பு வருகிற 30ம் திகதி நடைபெறவுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதற்கான விதிமுறைகள்,

குடும்ப தலைவரின் வயது அதிகபட்சம் 45ஆக இருத்தல் வேண்டும்,
குறைந்தது 10 வருடமாவது கிராமத்தில் வசித்திட வேண்டும்,
அந்த கிராமத்தில் வாங்கக்கூடிய இடத்தின் மதிப்பு குறைந்தது 200,000 பிராங்காக இருக்க வேண்டும்,


இந்த விலாசமே நிரந்தர விலாசமாக இருக்க வேண்டும்.
பத்து வருடத்திற்கு குறைவாக வசித்தால் 70,000 பிராங்கை திருப்பி அளிக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக 100000 பிராங்க் பணத்தை கிராம சபை ஒதுக்கியுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

Rhône பள்ளத்தாக்கில் இருந்து 1300 அடி உயரத்தில் இயற்கை காற்று வீசும் மலைகளுக்கு இடையேயான இந்த அழகிய கிராமத்தில் அதிக வேலைவாய்ப்புகள் இல்லை என்றாலும் Visp மற்றும் Sion நகரங்கள் இங்கிருந்து அரைமணி தொலைவே என Beat Jost தெரிவித்துள்ளார்.