படத்தலைப்பு வெளியான 10 நிமிடத்தில் டிரண்ட் ஆன அஜித்தின் விசுவாசம்..!

அஜித்தின் 58-வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் சாய் சித்தார்த் சற்றுமுன்பு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 58-வது படத்தின் டைட்டில் ‘விசுவாசம்’ என்று வைக்கப்பட்டுள்ளது. அதோடு ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும்தி, இத்திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில் அஜித்தின் விவேகம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தது. இந்நிலையில் அஜித் 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று வியாழக்கிழமை அஜித்தின் புதிய பட பெயர் விசுவாசம் என்று படக்குழு அறிவித்திருந்தனர். அஜித்தின் முந்தைய படங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்னும் தொடர்கிறது. அது ‘V’ ஆங்கில எழுத்தில் தொடங்குவதுதான்.

இந்த நிலையில் படத்தின் பெயர் வந்த 10 நிமிடத்தில் உலகளவில் 4வது இடத்திலும், இந்திய அளவில் 1வது இடத்திலும் விசுவாசம் டிரண்ட் ஆகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைய உள்ள திரைப்படம் பற்றியும் அதன் கதை பற்றியும் தற்போது பல தகவல்கள் உலவி வருகின்றன. சிவா அஜித்தை வைத்து முதலாவதாக இயக்கிய வீரம் படத்தை அண்ணன் தம்பிகளின் பாசம், செண்டிமெண்ட் , காதல் காமெடி கலந்து இயக்கி இருந்தார். இந்தப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக வெளிவந்த வேதாளம் படத்தில் தங்கையின் செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி மற்றும் தெறிக்கும் வசனங்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மூன்றாவதாக வந்த விவேகம், படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து அஜித்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்று காண்பித்திருந்தார் சிவா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றது.

இந்நிலையில் இன்று அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பை முன்பே வெளியிட்டு, அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்தப் படம் எப்படிப் பட்ட படம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது… அதன்படி இப்படத்தின் கதை நகைச்சுவைக் கதையாகவும், குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இசையமைப்பாளரைத் தவிர விவேகம் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தான் இப்படத்தில் வேலை செய்ய இருக்கிறார்களாம். அதோடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக கமிட் செய்ய படக்குழு முயற்சி செய்து வருவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையும் படிக்கலாமே
சினேகன் ஹரிஷ் இருவரும் கமல் எதிரிலே கே...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
தன் மகளுக்காக 22 மணி நேரம் உழைக்கும் த...
மீண்டும் கடலில் சோகம் .ஐரோப்பா நோக்கிச...
குங்க்பூ,டிராகன் மரணத்தின் காரணம் இதுவ...
இப்படியும் ஒரு நாடா? ஜப்பான் பெண்களுக்...
அதிரவைக்கும் கலாச்சாரம்.! ஒரே ஆணை திரு...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
நள்ளிரவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த க...
போதை மருந்துகொடுத்து இளம் பெண்ணுக்கு ச...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
மனைவியை நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து...