குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக்க இயற்கையான எளிய வழிகள்..!

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்களுக்கு தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்கவேண்டுமென்பது ஆசை.

இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ…

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, ‘சன்ஸ்கிரீன் லோஷன்’ தடவுங்கள்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

உதவு எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க நீர்சத்து நிறைந்த காய்கறிகள்,பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

இரவில் படுக்க போகும் முன் உதட்டில் உள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து விட்டு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் படுக்க செல்லவும்.

உதட்டில் உள்ள தோலை கடிக்காதீர்கள். இது உதட்டின் அழகை கெடுத்து விடும்.

உதட்டை சிவப்பாக்க மேலும் சில மருத்துவ குறிப்புகள்!

1. பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

2. உதடு காய்ந்திருக்கிறதா என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

3. கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைகுச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

4. கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிர ந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.

5. ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

6. தெங்காய் எண்னெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.

7. கருமையான உதடு சிவப்பாக: பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

8. தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.

9. உதட்டில் அரை ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு சிவப்பாகும்.

இதையும் படிக்கலாமே
பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய ...
ஆண் அழகு குறிப்புகள்...!
தமிழ் பெண்களின் அழகு ரகசியம்!
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்
ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
முகத்தை அழகுறச் செய்யும் பேரீச்சம்பழ ப...
பெண்கள் அனைவரும் படிக்கவேண்டிய செய்தி....
பெண்களுக்குகுளிர்காலத்திற்கு ஏற்ப சரும...
தேங்காய் சிரட்டையை (ஓடு) தூக்கி எறியாத...
அதிகமாக பகிருங்கள்: நரை முடியால் பிரச்...
வாழை இலை அழகான முகத்தை தரும் என்பது உங...
ஒரு சில நிமிடங்களில் உங்களை வசிகரிக்கு...