அதிகமாக பகிருங்கள்: முட்டை சைவமா? அல்லது அசைவமா? இதோ உங்களுக்கான விடை..!

இந்த உலகில் காலம் காலமாக இருக்கும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி…!!

நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். அதே சமயம் சிலர் முட்டையை சைவம் தான் என்று உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்… உண்மையில் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைவரும் இருக்கும். இந்த பகுதியில் முட்டை சைவமா அல்லது அசைவமா என்பது பற்றி விரிவாக காணலாம்.

தெரியாத உண்மை:முட்டையை பற்றிய பல தெரியாத கருத்துக்கள் பரவி வருகின்றன. முட்டை சைவமா அல்லது அசைவமா என்ற ஒரு கேள்வி பலரிடையே உள்ளது. முட்டை ஒரு அசைவ உணவு என்று பலரும் கூறுகின்றனர். இந்த கருத்தை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அசைவு உணவு என்று சதை அல்லது உயிர் உள்ள உணவுகளை தான் கூறுகின்றனர். ஆனால் முட்டையில் எந்த ஒரு உயிரோ அல்லது சதைப்பகுதியோ இல்லாத காரணத்தால் இது சைவ உணவு தான் என்ற ஒரு கருத்து உள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கோழியில் இருந்து தானே வருகிறது?:கோழியில் இருந்து தான் முட்டை வருகிறது. ஆனால் இது கோழியை கொன்று வருவதில்லை. மிருகங்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து பொருட்களுமே அசைவ உணவு கிடையாது. உதாரணமாக பால் என்பது பசுவிடம் இருந்து தான் பெறப்படுகிறது. அதற்காக பாலை நாம் அசைவம் என்று சொல்வது கிடையாது.

முட்டையின் வெள்ளை கரு:முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டின் நிறைந்துள்ளது. ஆனால் இதில் விலங்கு செல்கள் என்பது சிறிதளவு கூட கிடையாது. இதனால் தான் முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சைவ உணவாகும். மேலும் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவுகளுமே அறிவியல் ரீதியாக சைவ உணவுகள் தான்.

மஞ்சள் கருவும் தான்.. ஆனால்?மஞ்சள் கருவின் பெரும்பகுதி கொழுப்பு, கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றின் கலவை ஆகும், ஆனால் கியூம செல்களை முழுமையாக மஞ்சள் கருவில் இருந்து பிரித்தெடுக்க முடியாது என்பதால் மஞ்சள் கரு ஒரு அசைவம் ஆகும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கோழிக்குஞ்சு?:சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலன முட்டைகள் குஞ்சு பொரிக்காத தன்மை உடையவை. எனவே இதில் இருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது.
பலன்கள்…

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை…

புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..

இதய நோய் வருமா?

`முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association – AHA) அறிவித்தது. `இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ `அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.

எத்தனை சாப்பிடலாம்?

தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களுக்கு வேறுவிதமான உணவு முறை தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.

எச்சரிக்கை!

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

எதனுடன் சாப்பிடலாம்?

அதிஅவசியம்!

முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆரோக்கியம்:முட்டை சைவமோ அசைவமோ ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிக மிக சிறந்தது என்பதில் எந்த விதமான குழப்பமும் வேண்டாம். தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.

கண்களுக்கு…:லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை கொண்டிருக்கும் முட்டை கருவிழி செயலிழப்பை தடுப்பதால், உங்களுடைய கண்களுக்கு பாதுகாப்பும், ஆரோக்கியமும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் கண்புரைகள் உருவாவதையும் தவிர்க்க முடியும்.

புரத சத்து:உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் தேவையான புரதங்கள் முட்டையில் பெருமளவு நிரம்பியுள்ளன.

கால்சிய தேவை…:நமது உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்குத் தேவையான வைட்டமின் டி வேக வைத்த முட்டையில் அதிகளவு உள்ளது. இந்த வைட்டமின் கால்சியத்தை அதிகளவில் கிரகித்துக் கொள்வதால், உடலின் உறுதியும் அதிகரிக்கிறது.

தினமும் ஒரு முட்டை:முட்டையிலுள்ள ஒற்றை செறிவூட்டப்படாத மற்றும் பல்படி செறிவூட்டப்படாத கொழுப்புகள், செறிவூட்டப்பட்ட கொழுப்புகளால் வரும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கோலைன்:முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும், மூளையைக் கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.

நல்ல கொழுப்பு:முட்டையில் நிரம்பியிருக்கும் நல்ல கொழுப்புகள், பிரச்சனைகளை உண்டாக்கும் மோசமான கொழுப்புகளை குறைக்கின்றன. மேலும், ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டாலும் வேறெந்த விளைவுகளையும் முட்டை ஏற்படுத்துவதில்லை.

வைட்டமின் டி:வைட்டமின் டி என்பது நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இயற்கையான முறையில் வைட்டமின் டி நிரம்பியுள்ள உணவுப் பொருளாக முட்டை உள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மார்பக புற்றுநோய்:முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாயப்புகளை குறைக்க முடியும். இது மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சனைகளையும் துரத்தியடிக்கும் முட்டையை உணவின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அழகு பராமரிப்பு:முடி மற்றும் நகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய ஊட்டச்சத்துக்களான கந்தகம் மற்றும் வைட்டமின் பி12 நிரம்பியுள்ள உணவாக முட்டை உள்ளது. உங்களுக்கு முடி உதிர்வடையும் பிரச்சனை அதிகமாக இருந்தால், கந்தகம் அதிகளவு உள்ள முட்டையை சாப்பிடுங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உடல் எடை குறைய..உடல் எடை குறைய சாப்பிடாமல் இருப்பது என்பது ஒரு தீர்வாக அமையாது. அதே சமயம் வழக்கத்தை விட குறைந்த கலோரிகளையே சாப்பிட வேண்டும். காலையில் ஒரு முட்டையை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. முட்டை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் காலை நேரத்தில் ஒரு முட்டையை மட்டும் சாப்பிடுவது என்பது உங்களது மற்ற உணவு தேவைகளை குறைப்பதால், உடல் எடை குறையும்.

இதையும் படிக்கலாமே
டூப்பு ஜிலேபி (தீபாவளி சிறப்பு இனிப்பு...
அசத்தலான செட்டிநாடு மீன் குழம்பு...!
சைவ பிரியர்களுக்கு சந்தோசம் பொங்க வைக்...
கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங...
மணக்க மணக்க புளியோதரை செய்யலாமா?
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
சுவையான திக் கிரீம் சாக்லட் கேக் செய்ய...
உஷார் மக்களே உஷார்! மீண்டும் சூடேற்றி...
அதிர்ச்சியூட்டும் ஓர் ஆய்வு - புரோய்லர...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
நினைத்தாலே நாவுறும் செட்டிநாடு நாட்டு ...