தர்மபுரி பள்ளி மாணவி மரணம் .விசாரணையில் மனதை பதபதைக்கவைத்த திடுக்கிடும் தகவல்கள் .! அதிர்ச்சியில் மக்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

தர்மபுரி பள்ளி மாணவி மரணம் – போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!
தர்மபுரி அருகே முறை தவறிய காதலால் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி அவரது உறவினரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பெரிச்சாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வஜ்ஜிரம். இவரது மகள் லெட்சுமி (வயது 14). இவர் கம்பைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23-ந்தேதி காலை வீட்டில் இருந்து வழக்கம் போல பள்ளிக்கு லெட்சுமி புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு வரை அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தொடர்ந்து நள்ளிரவு வரை தேடினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பெருச்சாகவுண்டம்பட்டி அருகே உள்ள முள்ளனூர் நாகசத்திரம் பாலத்தின் அடியில் பள்ளி சீருடையுடன் மாணவி ஒருவர் பிணமாக கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை எரிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். ஆனால் அதற்குள் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரிமங்கலம் தாசில்தார் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் கண்ணன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி கொலை செய்யப்பட்டு அவரது உடல் அங்கு வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. லெட்சுமியின் உடலை உறவினர்களிடம் இருந்து மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்த போது மாணவியின் வயிற்றில் 8 மாத பெண் குழந்தை இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காரிமங்கலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது லெட்சுமி வீட்டிற்கு கடத்தூர் மடதஅள்ளி அருகே உள்ள பினாட்சிப்பட்டியை சேர்ந்த குப்புசாமியின் மகன் பிரதாப் (27) என்பவர் அடிக்கடி சென்று வந்தது தெரிய வந்தது. மேலும் கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தது குறித்து தெரிய வந்ததால் பிரதாப்பை போலீசார் தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த பிரதாப் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:- கல் உடைக்கும் தொழில் செய்து வந்த பிதாப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லெட்சுமிக்கு சகோதரர் உறவு முறையான பிரதாப் அடிக்கடி லெட்சுமி வீட்டிற்கு சென்று வந்தார். சகோதரர் உறவு முறை என்பதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்த முடிவு செய்த பிரதாப், லெட்சுமியிடம் காதலிப்பதாக கூறினார். இதனை அவரும் நம்பியதால் இருவரும் நெருங்கி பழகினர். மேலும் விரைவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரதாப் அவருடன் அடிக்கடி நேரில் சந்தித்து நெருங்கி பழகி வந்தார்.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அவருடன் உல்லாசம் அனுபவித்தார். இதன் எதிரொலியாக மாணவி கர்ப்பமானார். கர்ப்பம் அடைந்ததாக மாணவி கூறிய போது விரைவில் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய பிரதாப் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியானதால் வயிறு பெரிதாக தெரிந்தது. இதனால் மாணவி அடிக்கடி பிராதாப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனால் என்ன செய்து என்று தெரியாமல் விழி பிதுங்கிய பிரதாப் அவரை தீர்த்து கட்ட திட்டமிட்டார். அதன்படி கடந்த 23-ந்தேதி பள்ளிக்கு புறப்பட்டு சென்ற லெட்சுமியிடம் நைசாக பேசிய பிரதாப் பள்ளிக்கு செல்ல விடாமல் முள்ளனூர் நாகசத்திரம் பாலப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் தனது திட்டத்தை அரங்கேற்றினார். தண்ணீரில் மூழ்கடித்தும் கழுத்தை நெரித்தும் மாணவியை கொடூரமாக பிரதாப் கொலை செய்தார். பின்னர் உடலை தரதரவென இழுத்து சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் வீசி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். மாணவியையும், தன்னையும் போலீசார் தேடுவதை அறிந்ததும் பயந்து போன பிரதாப் கிருஷ்ணாபுரம் போலீசில் சரண் அடைந்து நடந்த முழு விவரத்தையும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். முறை தவறிய காதலால் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி அவரது உறவினரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கிருஷ்ணராயபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்...
ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான...
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
சுவிஸில் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
அத்துமீறி நடந்துகொண்ட விஜய்.! அசிங்க...
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
விராட் கோலி,அனுஷ்கா சார்மா திருமணம் உங...
அடக்கடவுளே.. ஜே ஜே திரைப்பட நாயகி யா இ...
குழந்தை இல்லையென சென்ற பெண்களால் பல கு...
இப்படி ஒரு கேவலமான உறவா ..!? அனைவரையும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares