விஜய் பிடிக்குமா.? அஜித் பிடிக்குமா .? என்ற கேள்விக்கு அஜித் மகளின் அதிரடி பதில் . .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares

விஜய் சாரின் டான்ஸை பிடிக்கும். ஆனால்,…..! – என்னை அறிந்தால் பேபி அனிகா பேட்டி
என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவர் தற்போது 8ம் வகுப்பு படித்துவருகிறார்.
தமிழில் படங்கள் எதுவும் இல்லை என்றாலும் சில மலையாள படங்களில் அவர் நடித்துவருகிறார். சமீபத்தில் கூட அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்நிலையில் நேற்று அவர் பேஸ்புக் லைவில் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?’ என கேட்டதற்கு “அஜித் சார்..” என கூறினார். விஜய்யை பிடிக்காத? என மற்றொருவர் கேட்டதற்கு, “விஜய்யை பிடிக்கும்.. அவரது டான்ஸ் பிடிக்கும், பட் அஜித் சாரை அதிகம் பிடிக்கும்” என அனிகா கூறினார்.

“” ஞாபக படுத்தல் “”
மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
கோவை, சேலம் மாவட்டங்களில் போலீஸால் தடைவிதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைக்காகப் போரிட்டு மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில், தமிழகமெங்கும் ஈழ ஆதரவு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் வரும் 27ஆம் தேதியன்று மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த தமிழ்த்தேச மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, பி.யு.சி.எல் முன்னாள் தலைவர் பொன்.சந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகும் என்றும் கூறி, கூட்டம் நடத்த அனுமதிக்க போலீஸ் மறுத்துவிட்டது. அதை எதிர்த்து தமிழ்த்தேச மக்கள் கட்சியின் கோவை நிர்வாகி சிவபாலன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், போலீஸாரின் தடையை நீக்கியும் கூட்டத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். இதைப்போலவே, சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், அதே நாளில் நடத்தப்படவுள்ள மாவீரர் வீரவணக்க நிகழ்வுக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை எனக்கூறி கொளத்தூர் போலீஸ் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து தி.வி.க நகரச்செயலாளர் சி.ராமமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், தடைவிதித்ததற்கு போலீஸ் கூறிய காரணங்களை நிராகரித்து, கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares