ஆபாச பதிவு அல்ல: முதலிரவு அறையில் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கான காரணம் இதுதானாம்..!

ஆண் பெண் இல்லற பந்தத்தில் முதலிரவு என்பது புனிதமிக்க ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். வெளிப்படையற்று இருந்த இருமனம் ஒன்றாகும் அற்புதமிக்க தருணமாகும்.

உடலும் மனமும் ஒன்றாகச் சங்கமிக்கும் அந்த நாளானது புதிய அனுபவம், புதிய புரிந்துணர்வு, புதிய உறவுமுறை என்பனவற்றை நடைமுறையில் தோற்றுவிக்கும் ஒரு நாளாகும்.

கல்யாண இணையர் இருவரும் பலப்பல எதிர்பார்ப்புக்களையும் எண்ணங்களையும் மனதில் சுமந்தவாறே முதலிரவைச் சந்திக்கின்றனர்.

சிலரது இல்லற வாழ்வின் தொடக்கத்தையே இரசனை மிக்க ஒன்றாக மாற்றுவதும் அல்லது கசப்புமிக்க ஒன்றாக மாற்றுவதும் முதலிரவின் அனுபவத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இதனைக் கருத்திற்கொண்டு தம்பதியினர் இருவரும் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். முதற்கோணல் முற்றும் கோணல் என்ற நிலையினை முதலிரவு தந்துவிடக்கூடாது என்பதை கணவனும் மனைவியும் கண்ணிலே எண்ணெயை ஊற்றி கவனித்துக்கொள்ளவேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

முதலிரவு என்றால் பலருக்கும் பாலியல் நடவடிக்கைதான் மனக் கண்ணுக்கு வந்துபோகும். உண்மையிலேயே முதலிரவு என்பது பாலியல் நடத்தைக்கானது மட்டுமானதுதானா?

இவ்வாறான எண்ணம்தான் குடும்பத்தின் முதற்கோணலாகின்றது. பாலியல் நடத்தையை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல முதலிரவு.

கணவன் மனைவி இருவரும் தம்மிடையே சரியான புரிந்துணர்வினைக் கட்டியெழுப்ப மங்கலான வெளிச்சத்தில் மனம் விட்டுப் பேசவேண்டும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மங்கலான வெளிச்சத்தை மின்சாரத்தில் ஒளிரும் சிறிய விளக்குகளும் மெழுகுவர்த்தி போன்ற எரி விளக்குகளும் தரலாம். இதிலும் மெழுகுவர்த்தி போன்ற எரி விளக்குகள்தான் இன்னும் அற்புதமானது என்று சொல்லப்படுகிறது.

மெழுகுவர்த்தியின் ஒளியானது இருண்ட அறையில் மனித முகத்தில் புதுவித அழகு நயத்தினைத் தூண்டக்கூடியது. கணவனும் மனைவியும் எதிர் எதிர் அமர்ந்து பேசுகின்றபோது இந்த மெழுகுவர்த்தி ஒளியானது ஒருவருக்கொருவர் அழகியல் உணர்வினைத் தூண்டி பரஸ்பர அன்பினையும் ஆசையினையும் தூண்டவல்லது.

மெழுகுவர்த்தியும் மின்குமிழும் ஏறத்தாள ஒரே ஒளியினைத் தந்தாலும் இயற்கை எரிவொளியான மெழுகுவர்த்திக்கு வித்தியாசமான ஒரு பண்பு இருக்கின்றது. அதுதான் அதன் சுடர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மெழுகுவர்த்தியின் சுடரானது மெல்லிய காற்றில் ஆடியசைகின்றபோது அதன் ஒளியினைப் பருகும் மனித முகங்கள் புதுப்பொலிவு பெறுகின்றன. இதன் காரணத்தாலேயே முதலிரவன்று முதலிரவு அறையில் மெல்லிய மங்கள் ஒளியினைத் தரவல்ல மெழுவர்த்தியை ஏற்றுமாறு உளவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இவ்வாறு இன்பமாய் அமையும் முதலிரவானது மண வாழ்க்கையின் அற்புதமிக்க தருணமாக அமையும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை எனலாம்!

இதையும் படிக்கலாமே
வீட்டுக்குறிப்புக்கள்! கிச்சன் டிப்ஸ் ...
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள...
ஜியோவின் அதிரவைக்கும் அடுத்த மெகா ஆப்ப...
முன்கூட்டியே மாதவிடாய் வரனுமா? இயற்கைய...
மனிதனை மனிதனே சாப்பிடும் மக்கள் வாழும்...
பிரான்சில் இனி யாரும் சட்டவிரோதமாக குட...
நான்கு மனைவிகள் கணவருக்கு செய்த செயல் ...
பெற்றோர் வேண்டாம் என கதற கதற இறந்த காத...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...
லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ...
வெறும் 19 வயதில் அனைவரையும் அசத்தும் த...
தமிழின அழிப்பின் கொடூரம்...! தமிழினி ம...