அதிகமாக பகிருங்கள்: முகப்பரு பிரச்சனையா? 10 ரூபாயில் நாட்டு மருந்து

முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் முகத்தை மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.

பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.

அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள்.

பருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரைக் கவலைப்பட வைப்பது இந்த வகைத் தழும்புகள்தான்.

இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாபரேஷன் (Dermabrasion), கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்கலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பருக்கள் வராமல் தடுக்க…

முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.

தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

கொழுப்பு உணவு வேண்டாம்!

முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். எப்படி? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுமல்லவா? இவை எண்ணெய்ச் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த வாய்ப்பைத் தடுக்கவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கட்டுப்படுத்த என்ன வழி?

எந்நேரமும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை விரல்களால் நோண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணியாதீர்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே
ஆண் அழகு குறிப்புகள்...!
ஆண்களின் அழகான முகத்திற்கு அழகு சேர்க்...
தமிழ் பெண்களின் அழகு ரகசியம்!
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்
ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
எப்போதும் அழகாக இருக்க வேண்டுமா? அப்பட...
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக...
அதிகமாக பகிருங்கள்: 7 நாட்களில் முகம் ...
வாழை இலை அழகான முகத்தை தரும் என்பது உங...
ஒரு சில நிமிடங்களில் உங்களை வசிகரிக்கு...
பெண்கள் அழகு நிலையம் செல்லாமல் வீட்டில...