ஜெயலலிதா மகள் என கூறும் அம்ருதா பற்றி வெளிவந்த திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் .! இதெல்லாம் உண்மையா .?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.9K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    2.4K
    Shares

ஜெயலலிதாவின் வாரிசு என கூறும் அம்ருதா பற்றி வெளி வந்த அதிர்ச்சி தகவல்கள்…!
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும் ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் தெரிவித்துள்ளார். அம்ருதா ஏற்கனவே இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.
கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார். சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார். பெங்களூருவில் பணியாற்றி வந்த சைலஜா-சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. 1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார். நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால் ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும் அரசியலுக்கும், சினிமாவுக்கும் வரவேண்டாம் என என்னை எச்சரித்திருந்தார். ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது. இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார். நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என் தாயாரை பராமரித்துள்ளனர்.
அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும். என் தாய் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ., சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும். இறப்பின் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். என் தாய், அவர் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மஞ்சுளா கூறியுள்ளார்..என் தாய் ஜெயலலிதா என் தந்தை சோபன்பாபு.இது உறுதி இதற்கு சட்டப்படி எல்லாவிடயங்களையும் ஆராயுங்கள் நான் தயார் . அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம்...
இந்த கருவிகள் இருந்தால் பெண்களுக்கு ஆண...
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்...
சூப்பர் ஸ்டார் ரஜினி-யால் விஷம் அருந்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
நான்கு வயது குழந்தையின் உடலில் வெடிகுண...
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடி...
அடிக்கடி மேல் வயிறு வலி வருகிறதா. ? ந...
ஆஸ்திரேலியாவில் அப்பாவி கணவனின் உயிரை ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.9K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    2.4K
    Shares