கன்னியாகுமரியில் நிலைகொண்டுள்ள “ஓகி” புயல்.! மக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை மையம் அறிவிப்பு .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.1K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares

ஓகி’ புயலாக கன்னியாகுமரியை நோக்கி வருகிறது காற்றழுத்தம்…!
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பகல் 2 மணி வரையிலும், தென்மாவட்டங்களில் பகல் 4மணி வரையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 4 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர புயலாக மாறி கன்னியாகுமரியை நோக்கி நெருங்கி வருகிறது.தற்போது170 கி.மீ. தொலைவில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் 20 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி மெதுவாக நகர்ந்து வரும்.புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன.

நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்ததுகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது.கனமழை எதிரொலியால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெளுத்து வாங்குகிறது. இருந்தாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
Bigg Boss பிந்து மாதவியின் பச்சோந்தி த...
MERSAL Film Teaser Review
Bigg Boss நிகழ்ச்சிக்கு விஜய் வருகை அத...
சினேகன் தோல்வியின் 5 காரணம் Vijay Tv வ...
தாயத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவம்
வாட்சப் குழுவொன்றின் அட்மினா நீங்கள்? ...
பெண்கள் காதலிப்பதை அறிவது எப்படி..!
ரூ.1 லட்சம் செலுத்தினால் வாழ்நாள் முழு...
அமெரிக்கா நிறுவன வேலையை தூக்கி எறிந்த ...
டான்ஸ் மாஸ்டர் காயத்திரியின் மூக்கை உட...
மிஸ்டுகாலால் வந்த வினை.. 16 வயது பள்ளி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.1K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares