இந்த 15 பொருட்களை தானமாக கொடுத்தால் கடனும்,கவலையும் நீங்கி வாழ்வு மகிழ்ச்சியாகுமாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.8K
  •  
  •  
  •  
  • 156
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares

இந்த பொருட்களை தானமாக கொடுப்பதால் வாழ்வே சுபீட்சமாகும்…!
தானம் செய்வது மிகச் சிறந்த விடயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் பொழுது இறைவனாகவே மதிக்கப்படுகிறான்.அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

“” மகள் அப்பாவிற்கு எழுதிய மடல்”” ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார்.
எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார்.
அதை எடுத்துப் பார்த்தார்.
அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.
அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
என்னை மன்னித்துவிடுங்கள்.
என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.
டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.
மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான். அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன். உங்கள் அன்பு மகள், லிண்டா..!
அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.. கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.. துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு:-
அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை. நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ்ஸில் நுழைந்த அந்த பிரபலம் இவர...
ஆரவ்வுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா??...
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் ...
இத்தனை கவர்ச்சியாக உடம்பை காட்ட முடியா...
ஜெயலலிதா மகள் என கூறும் அம்ருதா பற்றி ...
ஆபாச பதிவு அல்ல அனைவரும் படிக்கவும்: உ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவன...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
கடற்கரை மணலில் இளம் பெண் கொடூர கொலை .....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.8K
  •  
  •  
  •  
  • 156
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares