88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி ஆசிரியர் கொடுத்த தண்டனை .! இந்தியாவில் நடந்தேறிய கொடூரம் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 172
 •  
 •  
 •  
 • 98
 •  
 •  
 •  
 •  
 •  
  270
  Shares

இடாநகர்: அருணாச்சலில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி, அவர்களை, சக மாணவர்கள் முன், நீண்ட நேரம் நிற்க வைத்து, தண்டனை கொடுத்த கொடூரம் நடந்து உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில், பபும் பாரே மாவட்டத்தில், சகாலி என்ற நகரத்தில், காந்தி பாலிகா வித்யாலயா என்ற, தங்கி படிக்கும் வசதியுடன் கூடிய தனியார் பள்ளி உள்ளது. சமீபத்தில், இந்த பள்ளியில், தலைமை ஆசிரியரையும், சில மாணவர்களையும் பற்றி, தரக்குறைவாக விமர்சித்து எழுதப்பட்டிருந்த ஒரு காகிதம், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் கிடந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் இதைப் படித்து பார்த்த தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், கடும் ஆத்திரம் அடைந்தனர்.
“கொடூர தண்டனை:”
ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் இந்த காகிதம் கிடந்ததால், அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவியர் தான், இதை எழுதியிருப்பர் என, ஆசிரியர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து, அந்த இரண்டு வகுப்புகளிலும் படிக்கும், 88 மாணவியரையும் வரவழைத்து, மற்ற மாணவியர் முன் நிறுத்தினர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அகற்றிய ஆசிரியர்கள், உள்ளாடைகளுடன், அந்த மாணவியரை நீண்ட நேரம் நிற்க வைத்தனர்.
“வழக்கு பதிவு:”
இதுகுறித்த தகவல், அங்குள்ள மாணவர் அமைப்பினருக்கு தெரிந்தது. அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், தலைமை ஆசிரியரும், மேலும் இரண்டு ஆசிரியர்களும் தான், மாணவியருக்கு இந்த கொடூர தண்டனையை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் தற்போது சாதாரணமாக நடக்க தொடங்கி இருக்கும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .ஆசிரியர்கள் மிருகமாவதை தடுக்க வேண்டும் என மாணவர் சங்கங்கள் அறிக்கை விடுத்துள்ளன.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss -20th September 2017 - Promo...
BIGG BOSS TITLE WINNER VIDEO
தீபாவளி யாரால் எதற்காக கொண்டாடப் படுகி...
விரைவில் ரஜினியின் காலா!
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
ஜிமிக்கி கம்மலில் ஷெரிலை தோற்கடித்த பி...
வடகொரியாவுக்கு ‘பொருளாதார உளவு’ பார்த்...
தன்னை தானே கலாய்த்து கொண்ட பிக் பாஸ் ஜ...
சாமியாரை உருட்டு கட்டையால் புரட்டி எடு...
ஒரு தமிழன் எப்படி டா எங்களுக்கு கவுன்ச...
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் ச...
தலைவர் பிரபாகரனும் பொட்டம்மானும் எனக்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 172
 •  
 •  
 •  
 • 98
 •  
 •  
 •  
 •  
 •  
  270
  Shares