ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . விசாரணை கமிஷனில் ஜெ,யின் கைரேகை பெற்ற அப்பலோ டாக்டர் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் ..! அடக் கடவுளே

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 494
 •  
 •  
 •  
 • 230
 •  
 •  
 •  
 •  
 •  
  724
  Shares

ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஏற்கெனவே தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் ஜெயலலிதா வைத்த கைரேகை பற்றி வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த கைரேகைக்கு சான்றொப்பம் இட்டார் டாக்டர் பாலாஜி.
இந்த நிலையில் விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார். உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரை நேரில் பாரத்ததாக கூறியுள்ளார்,  ‘அவருக்கு, நான் சிகிச்சை அளிக்கவில்லை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும்தான் சிகிச்சை அளித்தனர்’ என்று கூறியுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் லண்டன் சென்று சிகிச்சை பெற ஜெயலலிதா மறுத்துவிட்டதாக ஆணைய விசாரணையில் தகவல் வெளியாக உள்ளது. இது குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா சிகிச்சைக்காக  தமிழக அரசு சார்பில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த டாக்டர்கள் குழுவிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதில், இதுவரை ஆஜரான டாக்டர்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என்றே தெரிவித்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவு அருகே ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்த அறையில் தான் அவர்கள் அமர்ந்து இருந்துள்ளனர். அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி கூட கிடையாது என்று விசாரணையில் கூறினர். ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து செல்லும் போது கூட ஸ்கிரீன் போட்டு மூடியே ஸ்டெக்சரில் கொண்டு சென்றனர் என்று தெரிவித்தனர். 
ஆனால், டாக்டர் பாலாஜி மட்டும் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார். அவர் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கும் போது சுயநினைவுடன் இருந்ததாகவும், சசிகலா உடன் இருந்ததாகவும் கூறியுள்ளார். அவர் தான் தமிழக அரசு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், சிகிச்சைக்கு வந்த லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து சென்றதாக கூறினார்.  ஜெயலலிதாவை நான் தினமும் போய் பார்த்தேன் என்றும் கூறியுள்ளாார். அவருக்கு சிகிச்சை அளிக்க வேலூர், ஹைதராபாத், பெங்களூர், மும்பையில் இருந்தும் டாக்டர்கள் வந்ததாக விசாரணையின் போது தெரிவித்தார். அனைத்து டாக்டர்களையும் ஜெயலலிதாவிடம் தாம், தான் அறிமுகப்படுத்தியதாக கூறினார். அப்போது, அவரிடம் ஜெயலலிதாவிடம் உங்களை அறிமுகப்படுத்தியது யார் என்று நீதிபதி கேட்டதற்கு டாக்டர் பதில் அளிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்ைச அளிக்கும் போது மட்டும் கண்ணாடி அறை வழியாக தான் பார்த்தேன் என்றும் தெரிவித்தார். 
லண்டன் டாக்டர் சிகிச்சை அளிக்க வந்திருந்தார். அப்போது, அவர் ஜெயலலிதாவிடம் சிகிச்சைக்கு லண்டன் வருமாறு அழைத்ததாகவும், அங்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைப்பதாகவும் கூறினார். ஆனால், ஜெயலலிதா லண்டன் வர மறுத்துவிட்டதாக பாலாஜி தெரிவித்தார்.
தினமும் ஜெயலலிதா அறைக்கு சசிகலா மட்டும் தான் செல்வார். எழுந்தவுடனேயே அவர் சசிகலாவை தான் அழைப்பார் என்றும் பாலாஜி தெரிவித்தார். டிசம்பர் 2ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை தான் எனக்கு தெரியும்’ என்று கூறியதாக ஆணைய  வட்டாங்கள் தெரிவித்தன.
சுகாதாரத்துறை செயலாளரை விசாரிக்க திட்டம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை அளிக்கும் போது, அங்கு இருந்துள்ளார்.அவரிடமும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார் என்பதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாக்டர் பாலாஜி அளித்துள்ள விளக்கம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, `ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் சங்கர் வருகின்ற 12-ம் தேதியும், தீபக்.14-ம் தேதியும், மாதவன் 15-ம் தேதியும், டாக்டர் மகேந்திரன் 19-ம் தேதியிலும் ஆஜராக உள்ளனர். தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ம் தேதியும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் 21-ம் தேதியும்ஆஜராகவும் சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை ஆணையம். மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கை. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 494
 •  
 •  
 •  
 • 230
 •  
 •  
 •  
 •  
 •  
  724
  Shares