இத்தாலியில் கோலாகல ஏற்பாடு டிச.15ல் கோஹ்லி-அனுஷ்கா திருமணம்?: சச்சின், யுவராஜூக்கு மட்டும் அழைப்பு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 12.5K
 •  
 •  
 •  
 • 123
 •  
 •  
 •  
 •  
 •  
  12.7K
  Shares

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கும், அவரது காதலியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கும் வரும் 15ம் தேதி இத்தாலியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்திருமணத்தில் கிரிக்கெட் வீரர்களில் சச்சின், யுவராஜூக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரரான விராத் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கடந்த 2013ல் விளம்பரத்தில் ஜோடியாக வந்த இருவரும் அப்போதிலிருந்தே காதலிக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றனர்.இவர்களின் திருமணத்தை விளையாட்டு ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா திருமணம் வரும் 15ம் தேதி நடக்க இருப்பதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு, திருமணத்திற்காகத்தான் அளிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, இத்தாலியின் துஸ்கேனி நகரில் உள்ள பண்ணை வீட்டில் பஞ்சாபிய முறைப்படி கோஹ்லி-அனுஷ்கா திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் வரும் 15ம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனுஷ்கா ஷர்மாவும், கோஹ்லியின் குடும்பத்தினரும் ஏற்கனவே இத்தாலி சென்றுள்ளனர்.
அங்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்தை அடுத்து, மும்பையில் வரும் 26ம் தேதி பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அன்றைய தினம் இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டி மும்பையில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 27ம் தேதி இரவு இந்திய அணி தென் ஆப்ரிக்கா புறப்பட்டுச் செல்கிறது. இப்பயணத்தில் கோஹ்லியுடன் அவரது மனைவியாக அனுஷ்காவும் செல்வார் என்றும் கூறப்படுகிறது. திருமணம் நடக்க உள்ள துஸ்கேனி பண்ணை வீட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெருங்கிய உறவினர்கள் சில விவிஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதால், கிரிக்கெட் வீரர்களில் சச்சின், யுவராஜூக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹரித்துவாரை சேர்ந்த மகாராஜ் ஆனந்த் பாபா திருமணத்தை நடத்தி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
பெற்ற குழந்தையை சட்டியில் வைத்து வறுத்...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
நகர்புறத்தில் பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ர...
உயிரிழந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்ய...
போதைமருந்து கொடுத்து தோழியை கொடூரமாக க...
இந்த பெண் யார் தெரியுமா ..!? என்ன ஷாக்...
நள்ளிரவில் நடிகர் அஜித்-தை அழ வைத்த மன...
ஜேர்மனி வாழ் மக்களுக்கு ஆபத்து எச்சரி...
"கமலஹாசனின்" மக்கள் நீதி மய்...
ஸ்ரீதேவியின் மகள்களை தவறாக பேசிய நபர்....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 12.5K
 •  
 •  
 •  
 • 123
 •  
 •  
 •  
 •  
 •  
  12.7K
  Shares