பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷிகா எடுத்த திடீர் முடிவு …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 488
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  788
  Shares

ஹன்ஷிகா எடுத்த அதிரடி முடிவு – குவியும் படவாய்ப்புகள் – என்ன முடிவு தெரியுமா..?
தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஹன்ஷிகா. இவருக்கென தமிழில் இளசுகளின் ரசிகர்கள் வட்டம் உருவாகியது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார் நடிகை ஹன்ஷிகா. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
சமீபத்தில் வம்பு நடிகருடன் காதல் முறிவு , தொடர்ந்து வெளியான ஆபாச வீடியோக்கள் என அம்மணியின் பெயர் கோலிவுட்டில் பெருமளவு அடி வாங்கியது. விளைவாக, படவாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனது. தற்போது, உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார் ஹன்ஸ்.இந்நிலையில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் நடிப்பது என்ற அதிரடி முடிவுக்கு வந்துள்ளார். சம்பள விஷயத்திலும் கறார் காட்டாமல் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார். இதனால், இரண்டாம் கட்ட ஹீரோக்களான அதர்வா முரளி, ஜீ.வி.பிரகாஷ்குமார் ஆகியோரின் படங்களில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், சில படங்களின் இயகுனர்கள் ஹன்ஷிகாவை அணுகி கால்சீட் கேட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதனால், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்

“”வயிற்றில் இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு இது தான் நோய் தெரியுமா?””வயிறு வீக்கம் தொற்று பரிமாணம் கொண்டுள்ள விவகாரமாக எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், பல்வேறு மருந்துகள் மற்றும் முறையற்ற டயட் போன்றவை இந்த வயிறு வீக்கத்திற்கு காரணங்களாக இருக்கின்றன. வயிற்றில் சப்தம் மற்றும் ஏப்பம் வருவதற்கு உண்மையான காரணம் வாயு மற்றும் வயிறு முழுமையாக இருப்பதால் தான்.குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பது, அதிகளவு கார்போனேட்டட் பானங்களை அருந்துவது, அழற்சியை உண்டாக்கும் உணவுகளை உண்பது, தைராய்டு குறைபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், எரிச்சல் கொண்ட குடல் நோய், அதிகளவு காற்றை விழுங்குதல், நெஞ்செரிச்சல், அதிக அமிலச்சுரப்பு மற்றும் அடிக்கடி வயிறு முட்ட உண்பது போன்றவை வயிறு வீக்கத்தை தூண்டக்கூடியவைகளாகும்.

நாள்பட்ட வயிறு வீக்கம் பல தீவிர பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டும். அதனால் தான் சமீப காலமாக வயிறு வீங்கி காணப்பட்டால், அதை சாதாரணமாக எண்ணாமல் உடனே மருத்துவரை அணுக சொல்கிறார்கள். இக்கட்டுரையில் ஒருவரது நாள்பட்ட வயிறு வீக்கம் எந்த மாதிரியான நோய்களை எல்லாம் சுட்டிக்காட்டுகிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கருவகப் புற்றுநோய்
வயிறு சீக்கிரம் நிறைந்தது போன்ற உணர்வு, இடுப்பு வலி மற்றும் தொடர்ச்சியான வயிறு வீக்கம் போன்றவை கருவகப் புற்றுநோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலும் இந்த அபாயம் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தான் இருக்கும். மரபியல், உடல் பருமன், குழந்தைப் பெறாமல் இருப்பது, முதுமை போன்றவை இந்த வகை புற்றுநோய்க்கான இதர காரணிகளாகும்.
கருப்பை புற்றுநோய்
சிறுநீர் கழிக்கும் போது மற்றும் உடலுறவு கொள்ளும் போது வலி, இடுப்பு வலி, வெள்ளைப்படுதல், இரத்தப்போக்கு போன்றவை இந்த வகை புற்றுநோயை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், மரபியல், கதிரியக்க சிகிச்சை, டாமோக்ஸிபென் மற்றும் ஈஸ்ட்ரோஜென் மருந்துகள் போன்றவைகளும் கருப்பை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாகும்.
வயிற்று புற்றுநோய்
வயிற்றுப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று கடினமானது. இந்த புற்றுநோய் முற்றிய நிலையில் குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், செரிமான பிரச்சனை மற்றும் உடல் குறைவு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த வகை புற்றுநோய் வருவதற்கு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகளும் முக்கிய காரணங்களாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
கணைய புற்றுநோய்
மஞ்சள் காமாலையுடன் வயிறு வீங்கி இருந்தால், அது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதோடு முதுகு வலி, அடிவயிற்று வலி, பசியின்மை மற்றும் எடை குறைவு போன்றவைகளும் கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.

குடல் புற்றுநோய்
குடல் புற்றுநோய் இருந்தாலும், வயிறு வீங்கி காணப்படும். இதற்கு குடலினுள் ஏற்பட்ட அடைப்பு தான் காரணம். முக்கியமாக இந்த புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தால் வயிறு வீக்கத்துடன், மலச்சிக்கல் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படும்.
இடுப்பு அழற்சி நோய்
சில வகை பாலியல் நோய்களான கோனோரியா மற்றும் க்ளமிடியா போன்றவை இந்த நோயை உண்டாக்கும். அதிலும் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டால், அது இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்தும். இடுப்பு அழற்சி நோய் ஒருவருக்கு இருந்தால், அது இடுப்பு வலி, வயிறு வீக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறியை வெளிப்படுத்தும். அதிகளவில் வெள்ளைப்படுதலும் இந்த நோயின் அறிகுறிகளுள் ஒன்று.
கிரோன் நோய்
இந்த ஆட்டோ இம்யூன் நோயால் குடல் மற்றும் சிறு குடல் பெரிதும் பாதிக்கப்படும். இந்த நோயின் ஆரம்ப கால அறிகுறி வயிறு வீக்கம் மற்றும் முற்றிய நிலையின் போது வாந்தி எடுத்தல், குமட்டல் மற்றும் வயிறு வீக்கம் இன்னும தீவிரமாக இருக்கும்.
எடை குறைவு
எந்த ஒரு டயட் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளாமலும், உடல் எடையானது 10%-த்திற்கும் அதிகமாக எடை குறைந்தால், அது குடலில் கட்டி உள்ளதை சுட்டிக் காட்டுகிறது. மேலும் வயிறு வீங்கி இருக்கும். மேலும் சிறிது உணவை உட்கொண்டாலும், வயிறு நிறைந்துவிட்ட உணர்வை பெறக்கூடும்.
குடல் அடைப்பு
வயிறு வீக்கத்துடன், மலச்சிக்கல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை வந்தால், அது குடலில் கட்டிகளால் அடைப்பு ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த கட்டிகள் குடலை அழுத்தம் கொடுக்கும் போது, அது குடலியக்கத்தை மோசமாக்கி, கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.
கல்லீரல் நோய்
அதிகளவு மது அருந்துதல், அதிகமாக கண்ட மருந்து மாத்திரைகளை எடுத்தல் மற்றும் கல்லீரல் அழற்சி போன்றவை கல்லீரல் நோய்களை ஏற்படுத்தி, நாளடைவில் அது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும். ஒருவருக்கு கல்லீரல் நோய் இருப்பின் வயிறு வீக்கத்துடன், கண்கள் மற்றும் சருமம் மஞ்சளாக இருக்கும்.
நீர் கோர்வை
அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியில் நீர் கோர்வை ஏற்பட்டிருந்தால், அது வயிறு வீக்கத்துடன், அதிகளவு உடல் எடையை இழக்கவும் செய்யும். இப்படி ஏற்படுவதற்கு கல்லீரல் நோய்களும் ஒரு பொதுவான காரணமாகும்.
செரிமான பிரச்சனைகள்
இரைப்பைக் கோளாறு உள்ளவர்கள், வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு வீக்கத்தால் அவஸ்தைப்படுவார்கள். எனவே உங்கள் வயிறு பல நாட்களாக வீக்கத்துடன் இருந்தால், அசாதாரணமாக விடாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் .


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 488
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  788
  Shares