அதிகமாக பகிருங்கள்: தூக்கம் வரவில்லை என்ற கவலையா? இதோ உங்களுக்கான தீர்வு!

பரபரப்பு, பதற்றம் இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை வரம். இன்றைக்குச் சிறுநகரம் தொடங்கி மெட்ரோ நகரங்கள் வரை அதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. நம்மை வாழ்க்கை துரத்துகிறதா, வாழ்க்கையை நாம் துரத்துகிறோமா என்பதைப் பற்றி யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பரபரப்பில் நாம் இழப்பது நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை! கம்ப்யூட்டரில் வேலை, சதா மொபைல்போனை வெறித்தபடி இருப்பது, உடற்பயிற்சியின்மை, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, அளவுக்கு அதிகமான நொறுக்குத்தீனி… என மாறிவிட்ட வாழ்வியல் முறை முக்கியமாகப் பதம் பார்ப்பது நம் தூக்கத்தைத்தான். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தூக்கம்

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே விழிப்பு வந்துவிடும்; பிறகு தூக்கம் வராது. இதன் காரணமாக பகல் பொழுதுகளில் ஓய்வுக்காக நம் உடல் ஏங்கும். இன்றைக்குப் பலரையும் தூக்கமின்மைப் பிரச்னைப் பாடாகப்படுத்துகிறது. நல்ல, நிம்மதியான தூக்கம் மட்டும்தான் நித்யஶ்ரீஅடுத்த நாள் நாம் உற்சாகமாகச் செயல்படுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும். “சில உணவுகள்கூட ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும்’’

“நிம்மதியான தூக்கத்துக்கு மெலட்டோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சீராகச் சுரக்கவேண்டியது அவசியம். அதோடு, நான்கு முக்கியமான பொருள்களும் தேவைப்படுகின்றன. அவை, ட்ரிப்டோஃபேன் (Tryptophan), மக்னீசியம் (Magnesium), கால்சியம்; வைட்டமின் பி-6. பாதியில் நம் தூக்கம் கலைகிறது என்றால், மெலட்டோனின் சரியாகச் சுரக்கவில்லை என்று அர்த்தம். இதன் உற்பத்தியை அதிகமாக்கும் உணவுகள் சில இருக்கின்றன. நமக்குச் சீரான தூக்கத்தைத் தரும் சில உணவுகள் இங்கே…

* பாலும், பால் உணவுகளும்:
தூங்குவதற்கு முன்னர் சூடாகப் பால் குடித்துவிட்டு தூங்கினால், இரவு அமைதியான, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதற்குப் பாலில் இருக்கும் கால்சியம் சத்துதான் முக்கியக் காரணம். பால் மெலட்டோனின் ஹார்மோன் மற்றும் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தும். பால் பொருள்களான சீஸ், தயிர், மோர் என அனைத்துமே உறக்கத்துக்கு மிகவும் நல்லவை. உடல்பருமனாக இருப்பவர்கள், அதிக எடையுடன் இருப்பவர்கள் லோ-ஃபேட் பால் பொருள்களைப் பயன்படுத்தலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

* கடல் உணவுகள்:
கடல் உணவுகளில் நமக்கு அதிகம் கிடைப்பது மீன்தான். மீன்களில் காலா மீன், மத்தி மீன் போன்றவை உறக்கத்துக்கு மிகவும் உதவுபவை. இதிலுள்ள வைட்டமின் டி, ஒமேகா 3 அமிலம், நல்ல கொழுப்புச்சத்து முதலியவை தூக்கத்தைத் தூண்டுபவை.

கடல் உணவுகள்

* கீரை:
அடர் பச்சை நிறத்திலுள்ள கீரைகள் அனைத்துமே தாதுப்பொருள்கள், வைட்டமின்கள், ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் நிறைந்தவை. கீரைகளில் மக்னீசியம், கால்சியம் அதிகம் இருக்கும். இரவில் கீரையை சாலட்டில் (Salad) கலந்து சாப்பிடுவது, சாறாக உட்கொள்வது போன்றவை `லேக்டுகேரியம்’ (Lactucarium) என்ற ஒருவகை பால் திரவ (Milk Fluid) உற்பத்தியைத் தூண்டக்கூடியது. இது நல்ல தூக்கம் வரச் செய்யும். சிலர் இரவில் கீரை சாப்பிட மாட்டார்கள். அவர்கள் மதிய உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

* பழங்கள்:
ஆப்பிள் அவகேடோ, வாழைப்பழம், கிவி பழம் போன்றவை உறக்கத்துக்கு உத்தரவாதம் தருபவை. இரவு வேளையில் பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், படுக்கையில் தூக்கம் வர சிரமப்படுபவர்கள்; தூக்கத்துக்கு இடையில் கண்விழிக்கிறவர்கள் உறங்கப்போவதற்கு முன்னர் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். நிம்மதியான உறக்கத்தை தரும்.

* நட்ஸ்:
பேரீச்சம் பழம், பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டுவருவது, உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டைச் சீர்செய்யும். நட்ஸின் மூலம் நல்ல கொழுப்புச்சத்து, வைட்டமின், தாதுச் சத்துகள், ஒமேகா 3 அமிலம் எனப் பல சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு 20 கிராம் என்ற விகிதத்தில் நட்ஸ் சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மேலே குறிப்பிட்ட உணவுகள் மட்டுமல்லாமல், பூசணி விதை, ஓட்ஸ் கஞ்சி, புளிப்புச் சுவை கொண்ட செர்ரி பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உறக்கத்துக்கு உதவும். அதற்காக இரவில் மட்டுமே இவற்றைச் சாப்பிடுவது தவறு. நல்ல தூக்கத்துக்கு, சரியான நேரத்தில்; சரியான உணவைச் சாப்பிடவேண்டியது மிக அவசியம்.

இதையும் படிக்கலாமே
வெறும் நூறு ரூபாயில் (Rs.100) புற்று ந...
இரவு 11 மணிக்கு மேல் கட்டிலுக்கு சொல்ப...
முடிந்தளவு பகிருங்கள்: மார்பகப் புற்று...
அதிகமாக பகிருங்கள்! காலையில் இஞ்சி... ...
குழந்தையின்மை பிரச்சனையா..? உங்களுக்கா...
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...
அதிகமாக பகிருங்கள்: 10 ரூபாய் செலவில் ...
அதிகமாக பகிருங்கள்: சுறுசுறுப்புடன் இர...
அதிகமாக பகிருங்கள்:ஆண்மையை அதிகரிக்க த...
வயிற்றை கிழித்தெடுத்து சம்பாதிக்கும் இ...
அதிகமாக பகிருங்கள்: வயிற்று புண் சரியா...
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நோ...