நான்காம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 210
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 01: 2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும் எனும் தீவிர குறிக்கோளோடு செயற்பட்ட தமிழீழ புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாக்குரிமையினைப் புறக்கணிக்கச் செய்து அச் செயற்பாட்டில் வெற்றி பெற்றுக் கொள்கின்றார்கள். 2002ம் ஆண்டில் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்தான சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக; “தமிழர் தரப்பு ஏமாந்தது போதும்! இனிமேல் பலன் ஏதும் இல்லை!” எனும் நிலையினை உணர்ந்த புலிகளின் தலமைப்பீடம் சர்வதேச நாடுகள் முன்னே தான் நல்ல பிள்ளை எனும் பெயரினைத் தக்க வைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் ஊடாக சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரினை ஆரம்பிக்க வேண்டும் எனும் செயற்பாட்டில் தனது கவனத்தினைச் செலுத்தத் தொடங்குகின்றது. கேளுங்கள் புரட்சி வானொலி

2002-2005 இற்கு உட்பட்ட காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமது போராளிகளை, படையணிகளை அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுத்தியது மட்டுமல்லாது தம் படை பலத்தைப் பெருக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டார்கள். இனி ஒரு போர் தொடங்கின் புலிகளிடம் உள்ள வளங்கள், அதி நவீன போர் உபகரணங்களின் மூலம் சிங்களப் படைகள் பாரிய அழிவினைச் சந்திக்கும் என்றும், புலிகளால் இலகுவில் தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்றும் ஆத்மார்த்த ரீதியில் வன்னியில் வாழ்ந்த மக்கள் நம்பியிருந்தார்கள். மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, வல்வெட்டித் துறையில் உள்ள விளையாட்டரங்கில் ஸ்ரீலங்காப் படைத்துறைப் புலனாய்வாளார்களால் இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி பரவுகின்றது. புரட்சி வானொலிக்குச் சொந்தமான ஆக்கம், அனுமதியின்றி பிரதி செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தின் மூலம் ஆத்திரமுற்ற பொது மக்கள் இராணுவத்திற்கு எதிராக டயர் எரிப்பிலும், இராணுவ முகாம்களை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடாத்தவும் தொடங்குகின்றார்கள். இச் சம்பவத்தினைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டிலும்;ஏனைய வட கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் பொங்கியெழும் மக்கள் படை, எல்லாளன் படை, சங்கிலியன் படை, மானங் காக்கும் மறவர் படை, சீறும் படை, சிறுத்தைப் படை, என மேற் குறித்த 6 படையணிகள் மக்கள் மத்தியிலிருந்து உதயமாகின்றன எனும் அறிவிப்பு இனந் தெரியாத தமிழ் இளைஞர்களால் வெளியிடப்படுகின்றது. இந்த அமைப்பானது சமாதான காலத்தில் இலங்கை இராணுவத்தோடு இணைந்திருந்த தமிழ் இளைஞர்களினால் உருவானது என்றும் இராணுவத்திடமிருந்த ஆயுதங்களை திருட்டுத் தனமாகத் திருடி, இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தும் நோக்கில் இவ் அமைப்புக்கள் செயற்படும் எனவும் ஊடகங்களிற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டதோடு, வீதிகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுகின்றது.

இவ் அமைப்புக்களில் பொங்கியெழும் மக்கள் படையணி மாத்திரம் இராணுவத்தினர் மீதான தீவிர தாக்குதல்களைத் தொடுக்கும் என்றும், ஏனைய அமைப்பினர் எட்டப்பர் வேலை செய்வோர், இராணுவத்துடன் சேர்ந்தியங்குவோர், மற்றும் தமிழினத் துரோகிகள் எனும் பெயரால் அழைக்கப்படுவோருக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களையும் போட்டுத் தள்ளும் எனவும் குடாநாட்டிலும், ஏனைய வட கிழக்குப் பகுதிகளிலும் சில இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் (நோட்டீஸ்) ஒட்டப்பட்டிருந்தது.

யார் இந்த மக்கள் படையணி?

தமிழ் மக்களின் கலாச்சாரச் செயற்பாடுகளுக்கு விரோதமாகச் செயற்பட்ட இளைஞர்கள், யாழ் குடா நாட்டிலும், ஏனைய மாவட்டங்களிலும் ஹேங் மோதல் – கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டு சமூகத்தில் பல தீய செயல்களைச் செய்த இளைஞர்கள் எனப் பல இளைஞர்களை ஒன்று திரட்டி, சமூகத்திற்கு இந்த இளைஞர்கள் இனிமேல் தேவை இல்லை எனும் நிலையினை வெளியே சொல்லாது புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பினர் தான் இந்தப் மக்கள் படை எனும் அமைப்பாகும். ஆனால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும், வெளி உலகிற்கும் இவ் அமைப்பினர் இராணுவத்தோடு சேர்ந்திருந்த துரோகிகள், இராணுவ அராஜகம் காரணமாக இராணுவத்திற்கு எதிராக திசை திரும்பித் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்றே அறிவிக்கப்பட்டது. கேளுங்கள் புரட்சி வானொலி

புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்க நினைத்தார்கள். தமிழர்கள் வாழும் பகுதியில் இனிமேல் இந்த இளைஞர்கள் தேவை இல்லை, இவர்களால் பயனேதுமில்லை எனும் நிலையில் தம்மால் மரண தண்டனை மற்றும் சிறைத் தண்டனை வழங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களிற்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார்கள்.”உங்களுக்குரிய தண்டனைகள் யாவுமே குறைக்கப்படுகின்றன. நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள புலிகளின் கட்டளையினைக் கேட்டு, அவர்களோடு சேர்ந்து இயங்க வேண்டும். இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும். இராணுவ வாகனங்கள் மீது கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் நடாத்த வேண்டும்” உங்களுக்குரிய பணி சிறப்பாகச் செய்து முடிந்த பின்னர் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இணைந்து வாழலாம்”என புலிகளால் வழங்கப்பட்ட உறுதி மொழியினை நம்பி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் நம்பிக்கையினை அடிப்படையாக வைத்து செயற்படத் தொடங்குகின்றார்கள் பொங்கியெழும் மக்கள் படையணியினர்.

ஆனால் புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிக்க நினைத்திருந்தது அப்பாவிப் பொங்கியெழும் மக்கள் படையணியினருக்கு தெரிந்திருவில்லை. காரணம் புலிகளின் கட்டளைப் பீடத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம், இராணுவ முகாம்கள், இராணுவ நிலைகள் மீது பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்து தாக்குதல் நடாத்தும் இளைஞர்களை இனந்தெரியாதோர் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.ஒரு புறம் புலிகளும் அந்த இளைஞர்களை இனந் தெரியாத நபர்களாக சுட்டுக் கொல்லத் தொடங்க. இராணுவமும் தம் புலனாய்வுத் துறையினரின் உதவியோடு, பொங்கியெழும் மக்கள் படையணியினரைத் தேடித் தேடி வலை விரித்துப் போட்டுத் தாக்கத் தொடங்கியது.புலிகளுக்கு மிக்க மகிழ்ச்சி! காரணம் சமூகத்திற்கு பயனற்றவர்கள் மூலம் தாக்குதல் நடக்கிறது! அதே வேளை தாக்குதல் முடிந்த பின்னர் பொங்கியெழும் மக்கள் படையணியினர் கொல்லப்படுகின்றார்கள். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

மக்களோடு மக்களாக நின்ற பொங்கியெழும் மக்கள் படையணியினர் இராணுவத்தினரை வெறுப்பேத்தும் நோக்கில் சராமரியான தாக்குதல்களைத் தொடுக்கின்றார்கள். இராணுவ வாகனங்கள் மீது கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் மேற் கொள்ளல், வீதியால் நடந்து செல்லும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துதல், இராணுவ முகாம்கள் மீது கிரைனைட் (கைக் குண்டு) தாக்குதல் மேற்கொள்ளுதல் எனப் பல தாக்குதல்களை மேற் கொண்டு மகிந்தரை வலிந்திழுத்து ஒரு போரினைத் தொடங்க வேண்டும், மகிந்தர் யுத்த நிறுத்த ஒப்பந்ததை தூக்கி எறிந்து புலிகளோடு மோத வர வேண்டும் எனும் நிலையில் தீவிரமாகப் புலிகள் தம் காய்களை நகர்த்தினார்கள். இந்த வேளையில் தான் 2006ம் ஆண்டு இச் செயற்பாடுகள் அனைத்திற்கும் மகுடம் வைத்தாற் போல அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் புலிகளால் மேற் கொள்ளப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் மூலம் மீண்டும் ஓர் யுத்தம் நிகழும் என எதிர்பார்க்கப் பட்ட போதும் அரச படைகள் A 9 நெடுஞ்சாலையினை ஒரு நாள் மாத்திரம் மூடித் தாக்குதலுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் வேளையில், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து மீளவும் A 9 நெடுஞ்சாலை திறக்கப்படுகின்றது. பொன்சேகா மீதான தாக்குதலின் எதிரொலியாக ஈழத்தின் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர், மூதூர் ஆகிய புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது கிபிர் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மாவிலாறு அணைக்கட்டு விவகாரம் ஆரம்பமாகின்றது. மாவிலாறில் உரசத் தொடங்கிய சிறு நெருப்பு, சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளினுள் அத்து மீறி உள் நுழையத் தொடங்கிய இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கையினைத் தொடர்ந்து பெரு நெருப்பாக மாறிக் கொள்கின்றது.

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற இராணுவத்தினரைப் பலத்த சேதங்களோடு விரட்டி அடித்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர்.ஆனால் இது இலங்கை அரசின் யுத்த நிறுத்த மீறல் என்ற அடை மொழியோடு முடிந்து போய் விட்டது. இலங்கை அரச படைகளும், புலிகளும் தம் நிலைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில் மகிந்தர் போருக்குத் தயாராகி விட்டார் என்பதனை தம் உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட புலிகள் அதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அரச படைகள் 04ம் திகதி ஆகஸ்ட் மாதம், 2006ம் ஆண்டு ஈழத்தின் வட பகுதியில் உள்ள முகமாலை முன்னரங்க எல்லைப் பகுதியினூடாக புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் தம் ஆயுத தளபாடங்களை நகர்த்தத் தொடங்கினார்கள்.

காலை பத்து மணியளவில் இராணுவத்தினரின் நகர்வினை அறிந்த புலிகள் மதியம் ஒரு மணியளவில் முகமாலை இராணுவ நிலைகள் மீது ப்ளாஸ்ரிக் பீரங்கிச் ஷெல் அடித்து டெஸ்ட்டிங் செய்து பார்த்தார்கள். இராணுவம் பதில்த் தாக்குதல் நடத்தாதிருந்தது. இராணுவம் முன்னேறுவதற்கு முன்பதாக தாம் முன்னேறித் தாக்குதல் நடாத்த வேண்டும் எனும் நோக்கில் புலிகள் விரைந்து செயற்பட்டார்கள். 11.08.2006ம் ஆண்டு வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணி 25 நிமிடம் அளவில் வட போர் முனையில் இருந்து முகமாலைப் பகுதியூடாகப் புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பிக்கின்றன.இலங்கை இராணுவத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முகமாலையில் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த மறு கணமே, கச்சாய், கிளாலி, மற்றும் யாழ்ப்பாணத் குடாநாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மண்டை தீவு, குறிகாட்டுவான், ஆகிய தீவுப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பிக்கின்றார்கள்.

இதே வேளை திருகோணமலைத் துறை முகத்தினூடாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினருக்கு கிடைக்கும் வழங்கல்களை தடுக்கும் நோக்கிலும், அதிரடி ஆட்டிலறிப் பீரங்கித் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொள்கின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை புலிகளின் வேகமான தாக்குதல் நடவடிக்கை காரணமாக இன்னும் ஒரு வார காலத்தினுள் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் புலிகள் வசம் வீழ்ந்து விடும் என எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் இராணுவம் தன் பலத்தினை வட போர் முனையில் குறுக்கு வழியில் நிகழ்த்திக் காட்டத் தொடங்கியதோடு, புலிகளைத் திசை திருப்பத் தொடங்கினார்கள். யாழ் குடா நாட்டிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது இலங்கை அரசு.இராணுவம் புலிகள் அமைப்பினருக்குத் தண்ணி காட்டும் நோக்கோடு கிழக்கு மாகாணத்தில்…………………………………………………………………………..

அடுத்த பாகத்தை நாளைய தினம் இதே நேரம் எதிர்பாருங்கள்.  இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
புரட்சி வானொலிக்காக கமலேஷ்

மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல...
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
கமலஹாசன் அதற்கு துளியும் தகுதியற்றவர்....
தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி துலங்கு...
அங்க தான் கள்ள ஓட்டு போட்டோம் ..! ஆர் ...
ரஜினியின் அரசியல் அறிவிப்பின் அதிரடி ...
பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் பெண்..! ந...
தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடு...
தமிழின அழிப்பின் கொடூரம்...! தமிழினி ம...
இறந்த பெண்கள் பற்றிய கேள்விக்கு நடிகர்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 210
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares