அதிகமாக பகிருங்கள்: நரை முடியால் பிரச்சனையா 10 ரூபாயில் உங்களுக்கான தீர்வு!

இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டைகளைப் பயன்படுத்தியும் எப்போதும் கருமை நிறக்கேசத்தைப் பெறலாம்

நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் இயற்கை முறையை பயன்படுத்தி நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மருதாணி பேக் :

மருதாணி செடிகளில் இருந்து மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக விழுதாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் காபி தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்திடுங்கள். இந்த பேக்கை தலை முடியில் தடவி காய விடுங்கள். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள்.

ப்ளாக் டீ :

2 ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் அடர்த்தியாக வரும் வரை கொதிக்க விட்டு பின்பு ஆற வைக்கவும். ஆறிய பின் தலையில் இந்த கலவையை தடவவும். சிறிது நேரம் கழித்து நீரால் தலையை அலசவும். டீத்தூள் பயன்படுத்தும்போது ஷாம்பூவால் தலையை அலசக்கூடாது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மருதாணி – நெல்லிக்காய் பேக் :

மருதாணி இலை – கைப்பிடி அளவு
நெல்லிக்காய் – 2
காபிக் கொட்டை – சிறிதளவு
கொட்டைப் பாக்குப் பொடி – 3 டீஸ்பூன்.

அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.

இஞ்சி
நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

செம்பருத்தி
வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும்

தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கறிவேப்பிலை
நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும்.

இதையும் படிக்கலாமே
ஆண் அழகு குறிப்புகள்...!
தமிழ் பெண்களின் அழகு ரகசியம்!
ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
30 நாடகளில் கூந்தல் அடர்த்தியாக கருகரு...
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக...
பெண்களுக்குகுளிர்காலத்திற்கு ஏற்ப சரும...
தேங்காய் சிரட்டையை (ஓடு) தூக்கி எறியாத...
உங்களுக்கு பெண் தோழி இல்லை என்ற கவலையா...
அதிகமாக பகிருங்கள்: 7 நாட்களில் முகம் ...
ஒரு சில நிமிடங்களில் உங்களை வசிகரிக்கு...
பெண்கள் அழகு நிலையம் செல்லாமல் வீட்டில...