எச்,ஐ,வி,எயிட்ஸ் நோயின் அறிகுறிகளும்,தடுப்பு முறைகளும்..! இது விழிப்புணர்வு பதிவு.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

எச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்: அறிகுறிகள் மற்றும் சிகிச்சைம்எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் என்றால் என்ன? அவற்றின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் எப்படிப் பரவுகிறது, அதற்கானக் காரணங்கள் என்ன? எப்படிப் பரிசோதனை செய்வது? தடுப்பு முறைகள் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையினை இந்தக் கட்டுரையில் காணலாம்.”எச்.ஐ.வி என்றால் என்ன?எச்.ஐ.வி (ஹெச்ஐவி ‍ HIV) (தமிழில்: “மனித நோயெதிர்த்திறனழித் தீ நுண்மம்” எனலாம்) என்பது மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனைத் தாக்கி அழிக்கும் தீ நுண்மம்(வைரசு) ஆகும். இந்த எச்.ஐ.வி வைரஸ் நமது உடலின் இயற்கையான பாதுகாப்புக்கு எதிரானது. இந்த வைரஸ் நோய் தடுப்பு மண்டலத்தில் உள்ள “டி – உதவி செல்” என்று அழைக்கப்படும் ஒருவகையான வெள்ளை இரத்த அணுக்களை அழித்து உள்ளேயே தன்னை நகலெடுத்துக் கொள்கிறது. “டி– உதவி செல்கள்” (T helper cells) சிடி4 செல்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

எச்.ஐ.வி மேலும் சிடி4 உயிரணுக்களை அழித்து அதிகமான அளவில் தன்னுடைய நகல்களை உருவாக்குகின்றன. இவ்வாறு ஏற்படுவதன் மூலம் படிப்படியாக ஒரு நபரின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறை செயலிழக்கிறது. சிகிச்சை பெறாமல், எச்.ஐ.வி தீ நுண்மத்துடன் (வைரஸ்)  வாழும் ஒருவர் தொற்று நோய்களையும் பிற நோய்களையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகும் என்பதே இதன் பொருள்.இத்தகைய எச்.ஐ.வி தீ நுண்மம் (வைரஸ்) உடலில் இருந்து சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை மிகவும் கடுமையாகப் பதிக்கப்படலாம். அதற்குமேல் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. எனினும் எச்.ஐ.வி வைரஸின் முன்னேற்றத்தின் வேகம் பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் உடல்நலம் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.”எச்.ஐ.வி பற்றிய அடிப்படை உண்மைகள்:”எச்.ஐ.வி என்பது “மனிதநோயெதிர்த்திறனழித் தீ நுண்மம்”(Human immunodeficiency virus) எனப்படும்.இதற்குப் பயனுள்ள ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை முறை (Antiretroviral therapy) உள்ள்து. இதன்மூலம் எச்.ஐ.வியினால் பதிக்கப்பட்டவர்கள் இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்ம்.முன்னரே எச்.ஐ.வி நோய் கண்டறியப்பட்டால் விரைவில் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.விந்து, இரத்தம், யோனி திரவங்கள் மற்றும் மார்பகப் பால் ஆகியவற்றில் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எச்.ஐ.வி வியர்வை, உமிழ்நீர்அல்லது சிறுநீர் மூலம் பரவாது.உடலுறவின் போது ஆணுறை அல்லது பென் குறியுறை உபயோகிப்பது எச்.ஐ.வி தீ நுண்மம் (வைரசு) மற்றும் பிற பாலியல் தொற்று நோய்கள் பரவுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.நீங்கள் ஊசி போட்டுக் கொள்ளும் போது சுத்தமான ஊசியினை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஒரு போதும் ஊசியினை மற்றாவருடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவர் கர்ப்பமாக இருந்தால் இரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி வைரஸ் குழந்தைப் பெற்றப் பிறகு பாலூட்டுவதின் மூலம் குழந்தைக்குச் செல்லலாம். இதனால் எச்.ஐ.வி சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்வது இத்தகைய ஆபத்தைக் குறைக்கிறது.”எயிட்ஸ் என்றால் என்ன?எயிட்ஸ் (எயிட்சு) என்பது ஒரு வைரஸ் (தீ நுண்மம்) அல்ல. ஆனால் எச்.ஐ.வி தீ நுண்மம் (வைரஸ்) காரணமாக ஏற்படும் அறிகுறிகள் அல்லது குறைபாடுகளின் தொகுப்பு ஆகும். ஒரு நபருக்கு எயிட்ஸ் இருப்பதாகக் கூறப்படுவது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான திறன் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதாகும்.மேலும் இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பது சில வரையறுக்கப்பட்ட நோய்களின் அற்குறிகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன. இந்நிலை தான் எச்.ஐ.வி யின் கடைசிக் கட்டமாகும். எச்.ஐ.வியின் தொற்று மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி மேலும் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் மரணத்திற்கு இட்டுச் செல்கிறது.”எயிட்ஸ் பற்றிய அடிப்படை “:எயிட்ஸ் (எயிட்சு ‍- Acquired Immune Deficiency Syndrome) என்பது “நோயெதிர்ப்புக் குறைபாடு அறிகுறி” ஆகும். “பெறப்பட்ட மனித நோய்யெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறி குறி” அல்லது “பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறி குறி” எனவும் கூறலாம்.எயிட்ஸ் எச்.ஐ.வி நோய்த் தொற்று அல்லது எச்.ஐ.வியின் கடைசி நிலை என்றும் குறிப்பிடப்படுகிறது.மேம்படுத்தப்பட்ட எச்.ஐ.வி வைரஸ் (ஹெச்ஐவி தீ நுண்மம்) தொற்றின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் அழிக்கப்படுவதன் விளைவாக நோய்க்கான அறிகுறிகள் அல்லது நோய்களின் தொகுப்பினை உருவாக்குகிறது. இதுவே எயிட்சு (எயிட்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.எச்.ஐ.வி வைரஸின் நோய்த் தொற்றுக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை பெருமளவில் குறைக்கிறாது. எனினும் குறைவான மக்களுக்கு எயிட்ஸ் உருவாகி விடுகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் சரியான சிகிச்சை மற்றும் ஆதரவுடன் எச்.ஐ.விக்கு சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். இதைச் செய்வதற்கு குறிப்பாகச் சரியான சிகிச்சை முறையைக் கையள்வது மிகவும் முக்கியமானதாகும். அதோடு கூடப் பக்க விளைவுகளையும் சமாளிக்க வேண்டும்.எச்.ஐ.வி வைரஸ் பரவுவதற்கானக் காரணங்கள்:எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவரின் நோய்த் தொற்றுடைய‌ இரத்தம், விந்து மற்றும் யோனி சுரப்பிகள் உங்கள் உடலில் நுழைய வேண்டும். இவ்வாறு யாருடைய உடலில் நுழைகிறதோ அவர்களும் எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவார். இதைத் தவிர்த்து எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் கொண்ட நபருடன் சாதாரணமாகத் தொடர்பு கொள்ளுவதால் (அதாவது கட்டிப்பித்தல், முத்தம் கொடுத்தல், கை குலுக்குதல் மற்றும் நடனமாடுதல்) மற்றவருக்கு நோய்த் தொற்று ஏற்படாது. காற்று, நீர் மற்றும் பூச்சி கடித்தல் போன்றவற்றால் எச்.ஐ.வி நோய்த் தொற்று ஏற்படாது.கீழ்வரும் வழிகளின் எச்.ஐ.வி தோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1) உடலுறவு:எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தம், விந்து மற்றும் யோனிச் சுரப்புகளுடன் நீங்கள் உடலுறவு அல்லது வாய்வழி உடலுறவு வைத்திருந்தால் எச்.ஐ.வி நோய்த் தொற்று உங்கள் இரத்தத்திலும் கலந்து விடுகிறது. இதனால் எயிட்சு நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த வைரஸ் உங்கள் உடலை வாய்ப்புண்கள் அல்லது கண்ணீரின் மூலம் கூட வந்தடைகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் தொடர்பு கொள்ளும் போது மலக்குடலிலோ அல்லது கற்பப்பை வாயிலிலோ இந்து வைரஸ் தொற்று ஏற்படுகிறது.2) இரத்தமேற்றுதல்:சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் இரத்தத்தினை மற்றும் போது இரத்தம் வழியாகவும் பரவுகிறது. அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் தற்போது எச்.ஐ.வி ஆன்டிபாடிகளுக்கு இரத்தம் வழங்குவதைக் தடைசெய்கின்றன. எனவே இரத்த மாற்றத்தின் மூலம் ஏற்படும் ஆபத்து மிகவும் சிறியது.

3) ஊசிகள்:எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் உள்ள அசுத்தமான ஊசிகளின் மூலமும் எச்.ஐ.வி நோய்த் தொற்றுப் பரவுகிறது. உடலிற்கு உள்ளே உட்செலுத்துகின்ற மருந்து அல்லது போதைப் பொருளைப் பகிர்ந்து கொள்வதினால் எச்.ஐ.வி மற்றும் பிற தொற்று நோய்களான ஹெபைட்டிஸ் போன்ற அதிக ஆபத்து நிறைந்த நோய்களுக்கு உங்களை உட்படுத்துகின்றன.4) கர்ப்பகாலம் ‍- தாய்ப்பால்:எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மூலம் கூடக் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படலாம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் தாய்ப்பால் மூலம் கூட நோய்த் தொற்றுப் பரவுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கான சிகிச்சையைப் பெறுவதன் மூலம், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி நோய்த் தொற்று ஏற்படுவதற்காகான ஆபத்தினைப் பெருமளவில் குறைக்கிறார்கள்.“எச்.ஐ.வி தொற்றுக்கான அறிகுறிகள்:”எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் மாதம் அல்லது இரண்டாவது மாதத்தில் தான் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வைரஸ் விரைவாக மரு உருவாக்கத்தைத் தடுத்து எதிர்வினையாக மாற்றுகிறது. இந்த ஆரம்ப கட்டம் கடுமையான நிலை என்று அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் ஒரு சில நாட்களிலிருந்து பல வாரங்களாக நீடிக்கும் காய்ச்சல் போன்றவை ஆகும். அவை பின்வருமாறு.

காய்ச்சல்நிணநீர் சுரப்பிகளின் வீக்கம்.பொதுவான வலிகள்தொற்று நோய் ஏற்பட்டது முதல் சில மாதங்கள் எச்.ஐ.விக்கான சோதனை தவறான எதிர்மறை முடிவை வழங்கலாம். ஏனென்றால் நோய் எதிர்ப்பு மண்டலம் இரத்தப் பரிசோதனையில் நோய்த் தொற்றினை கண்டறியப்படுவதற்கான போதிய ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. நீண்ட நாட்களாக மருத்துவ முறையில் கண்டுபிடிக்க முடியாத எச்.ஐ.வி தொற்று நிலை சில ஆண்டுகள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் வைரஸ் தனது நகல்களைக் குறைந்த அளவிலேயே பிரதி எடுக்கிறது. சிலருக்கு ஏதேனும் அறிகுறிகள் தோன்றலாம். ஆன்டிரெட்ரோவைரல் இல்லை என்றால் இந்தக் கட்டத்தை நீங்கள் வேகமாகக் கடந்து செல்லலாம்.”முற்றிய நிலை எச்.ஐ.வி நோய்த்தொற்றினால் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:நிணநீர் சுரப்பிகளின் வீக்கம்எடை குறைவுதொடர்ந்த காய்ச்சல்தோல் வடுக்கள்சோர்வுவாய்வழி ஈஸ்ட் தொற்று அல்லது பிற நோய்த் தொற்றுகள்குடைச்சலும் வலிகளும்குமட்டல், வாந்திவயிற்றுப் போக்குகுளிர் நடுக்கம்

இத்தகைய அறிகுறிகள் வரலாம், வந்தபின் விரைவாக குணமாகலாம் அல்லது நாள்பட இருக்கலாம். உங்களுக்கு எந்த அறிகுறிகளும்ம் இல்லை எனினும் உங்களின் மூலம் வைரஸ் (தீ நுண்மம்)  தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.”எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள்:”கீழ்வரும் அறிகுறிகள் எயிட்ஸ் (எயிட்சு) நோய்க்கான அறிகுறிகளாக அறியப்படுகிறது.தொடர்ந்த காய்ச்சல்நாள்பட்ட நிணநீர் சுரப்பிகளின் வீக்கம். குறிப்பாகக் கைகள், கழுத்து மற்றும் இடுப்புப்பகுதியில் உள்ள நிணநீர் சுரப்பிகள்.நாள்பட்ட சோர்வுஇரவு வியர்வைசருமத்தின் அடியில் அல்லது கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் உட்புறம் கரும்பிளவுகள் உண்டாகுவது.வாய், நாக்கு, பிறப்புறுப்பு மற்றும் மலக்குடல் போன்றவற்றில் ஏற்படும் புள்ளிகள், புண்கள் மற்றும் தடிப்புகள் போன்றவை.தோலில் ஏற்படும் புடைப்புகள், புண்கள் அல்லது தடிப்புகள் போன்றவை.மீண்டும் மீண்டும் ஏற்படும் வயிற்றுப் போக்கு அல்லது நீண்டகால வயிற்றுப்போக்கு.விரைவான எடை இழப்புநரம்பு தொடர்புடைய பிரச்சினைகளான கவனிக்கும் திறனில் சிரமம், நினைவக இழப்பு மற்றும் குழப்பம் போன்றவை.கவலை மற்றும் மன அழுத்தம்.

இதனால் நீங்கள் பலவீனமான, சேதமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டு இருப்பதனால் நிமோனியா மற்றும் பிற சந்தர்ப்பவாத நோய்த்தாக்கங்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.ஆன்டி ரெட்ரோ வைரல் சிகிச்சைப் பயன்பாட்டின் மூலம் எச்.ஐ.வி வைரஸினால் பாதிக்கப்பட்டவர் பத்தாண்டுகளுக்கு மேலாக வாழ முடியும். எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கான முறையான சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றால் எய்ட்ஸ் நோயின் தாக்கம் விரைவாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம் சற்று சேதமடைந்து நோய் மற்றும் நோய்த் தொற்றுடன் போராடுவதற்கான கடினமான நேரமாக உள்ளது.எய்ட்ஸ் நோயினால் ஏற்படும் பிற சிக்கல்கள்:பின்வரும் நோய்கள் எயிட்ஸினாலோ அல்லது தனிப்பட்ட விதத்தினாலோ வந்து தாக்குதல் செய்து மனிதனைக் கூடுதல் சிரமத்திற்கு உள்ளாக்கின்றன.பூஞ்சை நோய் ‍- கேண்டிடியாசிஸ் (Candidiasis)காச நோய் (Tuberculosis)சைட்டோமெகலோ தீ நுண்மம் (வைரஸ்) (Cytomegalovirus)டோக்ஸோபிளஸ்மோசிஸ் (Toxoplasmosis) இது ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்று.கிரிப்டோஸ்போரிடியோசிஸ் (Cryptosporidiosis) இது குடல் சார்ந்த ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு வகையான தொற்று ஆகும்.புற்றுநோய், கபோசி சார்கோமா (Kaposi’s sarcoma) மற்றும் லிம்போமா (Lymphoma) உட்பட வைரசுக்கு எதிரானத் தடுப்பு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். மற்ற நோய்த்தாக்கங்கள் மற்றும் எயிட்ஸ் நோயின் சிக்கல்களுக்கான சிகிச்சை உங்களின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப அமையும்.

எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ்க்கு இடையே உள்ள தொடர்பு:உங்களுக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட நீங்கள் எச்.ஐ.வி வைரஸினால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எச்.ஐ.வி வைரஸினால் பாதிக்கப்பட்டவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இரத்தம் மற்றும் விந்து போன்ற உடல் திரவங்களின் மூலம் எச்.ஐ.வி ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்குப் பரவுகிறது. ஒரு முறை எச்.ஐ.வி வைரஸ் உங்கள் உடலில் நுழைந்து விட்டால் அந்த வைரஸ் முதலில் உங்கள் உடலின் சிடி4 என்ற செல்களை அழிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடலை நோய்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும்.எச்.ஐ.வி தொற்றின் மூன்று நிலைகள் பின்வருமாறு:எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதிலிருந்து அதன் தாக்கத்தைக் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். அதாவது…

தீவிர நிலை, வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் சில வாரங்களுக்குப் பிறகு,மருத்துவ செயலற்ற நிலை அல்லது நீண்ட கால நிலைஎயிட்சின் கடைசி நிலைஎச்.ஐ.வி தீ நுண்மம் உடலின் சிடி4 செல்களை அழித்து நோய் எதிர்ப்பு அமைப்பினை பலவீனப் படுத்துகிறது. ஒரு சாதாரண வயது கொண்ட மனிதருடைய உடலில் சிடி4 செல்களின் எண்ணிக்கை 800 முதல் 1000 கியூபிக் மில்லி மீட்டர் வரை இருக்க வேண்டும். ஆனால் எச்.ஐ.வி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவருடைய உடலில் 200 க்கும் குறைவான சிடி4 செல்கள் இருந்தால் இந்நிலை எயிட்ஸ் என்று கருதப் படுகிறது.எச்.ஐ.வி தீ நுண்மம் நோய்த் தொற்றின் நீண்ட நாள்பட்ட நிலையில் எச்.ஐ.வி வைரஸின் விரைவான முன்னேற்றம், வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரிலிருந்து மற்றொருவர் வேறுபடுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு மேல் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், எயிட்ஸ் நோயின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிகிச்சை பெற்றுக் கொண்டால் எச்.ஐ.வி நோய்த் தொற்று கால வரையின்றி நீடிக்கும். எச்.ஐ.வி வைரைஸ் தொற்றினை முற்றிலுமாகக் குணப்படுத்த எந்தவொரு சிகிச்சையும் இல்லை. ஆனால் எச்.ஐ.வி நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சைகள் உள்ளன. எச்.ஐ.வி நோய் தொற்றினை உடையவர்கள் உடனடியாக வைரஸ் தடுப்பு சிகிச்சையை மேற்கொள்ளுவதன் மூலம் சாதாரணமான ஆயுளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் எயிட்ஸ் நோய்க்கும் எந்தவொரு சிகிச்சையும் இல்லை. ஆனால் எயிட்ஸ் நோயின் மூலம் ஏற்படும் தனிப்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் கொடிய நோய்களுக்குப் பெரும்பாலும் சிகிச்சையளிக்கப்படுகின்றன.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றைக் குழப்பிக் கொள்வது எளிது. எச்.ஐ.வி என்பது ஒருவகை தீ நுண்மம் (வைரஸ்) ஆகும். அந்தத் தீ நுண்மம் தொற்றின் கடைசி நிலை தான் எயிட்ஸ் (எயிட்சு) என்று அழைக்கப்படுகிறது.வரலாற்றில் ஒரு காலத்தில் எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோயினைக் கண்டறிவது ஒரு மரண தண்டனை என்று கருதப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகள் வளர்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் இன்று எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்கள் சராசரி ஆயுட்காலம் உயிர் பெற்று வாழ்கின்றனர்.எயிட்ஸ் இல்லாத எச்.ஐ.வி:எச்.ஐ.வி என்பது “தீ நுண்மம்” (ஆங்கிலத்தில் வைரஸ்) ஆகும். இந்தத் தீ நுண்மம் தொற்றினால் ஏற்படுவதுதான் எயிட்ஸ் (எயிட்சு). எயிட்ஸ் நோய் இல்லாத எச்.ஐ.வி தொற்றினை மட்டும் பெற வாய்ப்புகள் உள்ளது. உண்மையில் எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகாமல் பல ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெப்போதையும் விட நீண்ட காலம் வாழலாம். எயிட்ஸ் இல்லாமல் ஒரு எச்.ஐ.வி தொற்று இருக்க முடியும் ஆனால் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்கனவே எச்.ஐ.வி இருந்து எயிட்சு உருவாகிறது என்றாலும், எச்.ஐ.வி நோய்த்தாக்கம் எப்பொழுதும் குணமாகாது.

எச்.ஐ.வி முழுமையாகக் குணமாவதற்கு எந்தவொரு சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. எச்.ஐ.வி என்பது ஒரு தீ நுண்மம் (வைரஸ்). இது மற்ற தீ நுண்மங்களைப் போலவே மக்களுக்கு இடையில் பரவுகிறது.எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோயினைக் கண்டறியும் முறைகள்:உங்களுக்கு எச்.ஐ.வி நோய்த் தொற்று ஏற்படும் போது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வைரசுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. உங்களின் உமிழ்நீர் மற்றும் இரத்தத்தைப் பரிசோதனை செய்து அவற்றில் உள்ள ஆன்டிபாடிகளின் மூலம் நீங்கள் எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கண்டறியலாம். இத்தகைய சோதனை தொற்று ஏற்பட்ட பல வாரங்களுக்குப் பிறகு மட்டுமே பயனுள்ளதாக அமைகிறது. வைரஸ் மூலம் உருவாக்கப்படும் புரதங்கள் மற்றும் ஆன்டிசென்களுக்கான இன்னொரு சோதனை உள்ளது. இந்தச் சோதனையின் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு கண்டறிய முடியும். மேற்கூறிய இரண்டு சோதனைகளின் மூலமும் துல்லியமான மற்றும் நிர்வகிக்க எளிதான முறையில் எச்.ஐ.வி நோய்த் தொற்றினைக் கண்டறிய முடியும். ஆனால் எயிட்ஸ் நோயைக் கண்டறிவது மிகவும் சிக்கலானது. எச்.ஐ.வி நோய்த் தொற்றின் கடைசி நிலை தான் எயிட்ஸ் ஆகும்.

எச்.ஐ.வி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் எச்.ஐ.வியின் இறுதி நிலையான எயிட்ஸ் வரை சென்றுள்ளார் என்பதைக் கண்டறிவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஒரு சில காரணிகள் உள்ளன. ஏனெனில் எச்.ஐ.வி வைரஸ் நோய்த் தடுப்பு செல்கள் என்று அழைக்கப்பட்ம் சிடி4 என்ற செல்களை அழிக்கிறது. எனவே எயிட்ஸ் நோய்கான கண்டறிதலின் ஒரு பகுதி சிடி4 செல்களின் எண்ணிக்கையைக் கண்டுபிடிப்பது ஆகும்.எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்படாத ஒரு நபர் 500 முதல் 1200 சிடி4 செல்கள் வரை கொண்டிருக்க முடியும். ஆனால் சிடி4 செல்களின் எண்ணிக்கை எப்பொழுது 200க்கு குறைவாககச் செல்கிறதோ எச்.ஐ.வி தொற்றுடைய அந்நபர் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகி இருப்பதை அறியலாம். எயிட்ஸ் நோயைக் கண்டறிவதற்கான மற்றுமொரு காரணி, சந்தர்ப்பவாத நோய்கள் தாக்குவதன் முன்னிலையாகும். சந்தர்ப்பவாதத் தொற்றுகளான, வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் நோய்கள் பூஞ்சை அல்லது பாக்டீரியா மூலம் ஏற்படுகின்ற நோய்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நோயால் பாதிப்படைய விடுவதில்லை. இந்த இரண்டு காரணிகளும் எயிட்ஸ் நோய்க்கான‌ கண்டறிதலைத் தீர்மானிக்க உதவுகின்றன.

எச்.ஐ.வி தொற்றுக்கான சிகிச்சை முறைகள்:எச்.ஐ.வி நோய்த் தொற்று கண்டறியப்பட்டப் பிறகு அதற்கான சிகிச்சையை முடிந்தவரை மிகவிரைவில் தொடங்க வேண்டும். எச்.ஐ.விக்கான முக்கிய சிகிச்சை ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி (Antiretroviral therapy – ART) ஆகும். இந்தச் சிகிச்சை முறையில் தினசரி மருந்துகளின் கலவையைக் கொண்டு எச்.ஐ.வி வைரஸின் இனப்பெருக்கத்தினைத் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு தீ நுண்மத்தின் (வைரஸின்) இனப்பெருக்கத்தைத் தடைசெய்வதன் மூலம் பாத்க்கப்பட்டவரின் உடலில் உள்ள சிடி4 செல்கள் பாதுகாக்கப் படுகிறது. இதனால் மற்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவான நிலையில் இருக்கும்.எச்.ஐ.வி நோய்த் தொற்று எயிட்ஸ் ஆக மாறுவதை ஆன்டி ரெட்ரோ வைரல் சிகிச்சை தடைசெய்கிறது. மேலும் ஒருவரிலிருந்து மற்றவருக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்தையும் இந்தச் சிகிச்சையின் மூலம் குறைக்கலாம். இந்த எச்.ஐ.வி தொற்றுக்கு சிகிச்சையளிக்க 25க்கும் மேற்பட்ட மருந்துகள் 6 மருந்து வகைகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. எச்.ஐ.வி நோய்க்குக் குறைந்தபட்சம் இரண்டு மருந்து வகைகளிலிருந்து மூன்று மருந்துகள் பயன்படுத்தலாமெனஅமெரிக்க சுகாதார மற்றும் மனிதவள துறைகள் பரிந்துரை செய்கின்றன.

எச்.ஐ.வி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் அவரின் மருத்துவர் அவருக்கான திட்டத்தினைத் தேர்ந்தெடுப்பார். இந்த மருந்துகளை நிச்சயமாகவும், சரியாகவும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிகிச்சைக்கான வழிக்காட்டுதல்களில் தோல்வி அடைந்தால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அடிப்படையில் பக்கவிளைவுகள் ஏற்படும். இவற்றில் தலைவலி மற்றும் மயக்கம் போன்றவை அடங்கும். நாக்கு மற்றும் வாய்ப்ப்பகுதிகளின் வீக்கம், கல்லீரல் சேதமடைவது போன்றவை கடுமையானப் பக்க விளைவுகளில் அடங்கும். சிலர் உடலில் எச்.ஐ.வி மருந்துக்கான எதிர்ப்புப் பொருள்கள் உருவாக்கப் படுகின்றன. எச்.ஐ.விக்கான மருந்துகளின் மூலம் உங்களுக்குத் தீவிரமானப் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து மருந்துகளைச் சரிசெய்து கொள்ளலாம்.உங்கள் மருத்துவர் பின்வரும் நோய்களுக்குத் தடுப்பூசியினைப் பரிந்துரைக்கலாம்:

ஹெப்படைட்டிஸ் பிசளிக் காய்ச்சல் (Influenza)நுரையீரல் அழற்சி (நிமோனியா)உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பலப்படுத்த ஆரோக்கியமான உணவு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் போதுமான தூக்கம் போன்றவற்றைத் தினமும் பின்பற்ற வேண்டும்.எச்.ஐ.வி தொற்றுக்கான தடுப்பு மருந்துகள்:தற்போது எச்.ஐ.வி நோய்த் தொற்றினைத் தடுக்கவோ அல்லது முற்றிலும் குணப்படுத்தவோ தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சோதனை தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கண்டுபிடிக்கப்படும் சோதனைத் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் பொது பயன்பாட்டிற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை.எச்.ஐ.வி என்பது ஒரு சிக்கலான “தீ நுண்மம்” (வைரஸ்). இந்தத் தீ நுண்மம் விரைவாக உருமாற்றம் அடைவதற்கானத் திறனையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டிபாடிகள் உருவாகுதலைத் தடுக்கும் திறனையும் பெற்றுள்ளது. எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் உடற்காப்பு ஊக்கிகளை (Antibody) நடுநிலைப்படுத்தி அவற்றின் மூலம் வைரஸினை எதிர்க்கின்றன.

இன்றுவரை எச்.ஐ.வி தீ நுண்மத்தினைத் தடுப்பதற்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நோய்க்கான தடுப்பு மருந்துகளைப் போட்டுக் கொள்ளுவதன் மூலம் எச்.ஐ.வியினால் ஏற்படும் மற்ற நோய்களிலிருந்து விடுபடலாம். நுரையீரல் அழற்சி, சளிக் காய்ச்சல் மற்றும் ஹெப்படைட்டிஸ் பி போன்ற நோய்களுக்கானத் தடுப்பூசியைனைப் போட்டுக் கொள்ளுவதன் மூலம் எச்.ஐ.வி யினால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்கு குறைக்கலாம்.எச்.ஐ.வி நோய்த் தொற்றினைத் தடுக்கும் முறைகள்:எச்.ஐ.வி வைரசினால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு தொற்று இருப்பது தெரியாமலேயே எச்.ஐ.வி வைரசினைப் பரப்புகின்றனர். எனவே பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நீங்கள் உங்களையும் மற்றவரையும் எப்பொழுதும் பாதுகாக்கலாம்.1) பாதுகாப்பான பாலியல் முறை:நீங்களும் உங்கள் துணைவரும் எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் அல்லது பாலியலால் பரவும் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படவில்லை என்று உறுதிசெய்யும் வரை ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் ஆணுறையைக் கட்டாயமாகப் பயன்படுத்துங்கள். ஏனெனில் எச்.ஐ.வி ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்குப் பரவும் காரணிகளில் முதன்மையாக இருப்பது பாலியல் தொடர்பு தான். நீங்கள் (வாய்வழி உடலுறவு உட்பட) ஓரினச்சேர்க்கை போன்ற அனைத்து பாலியல் முறைகளிலும் கவனமுடன் இருப்பது மிகவும் அவசியமானது ஆகும்.

ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாலின பங்குதாரர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அதே போல் எச்.ஐ.வி தொற்று இல்லாத உங்களுடன் மட்டும் உடலுறவு கொள்ளும் துணையுடன் மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள். இவ்வாறு உடலுறவில் ஈடுபடுவதே பாதுகாப்பானதாக் அமையும்.நீங்கள் முதன் முதலில் உடலுறவு கொள்ளுவதற்கு முன் உங்கள் துணையுடன் பேசுங்கள். இவ்வாறு பேசி உங்கள் துணைக்கு எச்.ஐ.வி தொற்றுக்கான ஆபத்து இருக்கிறதா எனக் கண்டுபிடியுங்கள். இருவரும் சோதனைப் பாருங்கள். சோதனை செய்த பிறகு 6, 12, 24 ஆம் வாரங்களில் மீண்டும் மீண்டும் இருவரும் பரிசோதனை செய்துப் பாருங்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் சோதிக்கப்படுவதினால் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா என்ப‌தைத் தெளிவாகக் கண்டறிய முடியும். அதே சமயம் உடலுறவின் போது ஆணுரையைப் பயன்படுத்துங்கள்.உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் நிறைய மது அருந்துவதோ அல்லது சட்ட விரோதமான போதை மருந்துகளை உபயோகிக்கவோ கூடாது. ஏனென்றால் இவற்றின் மூலம் உங்கள் பாதுகாப்பை இழந்து பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடலுறவின் முன் மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

2) பற்பசை அல்லது சவரக்கத்தி (Razor) போன்ற தனிப்பட்ட பொருட்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.3) யாருடனும் ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருந்தால் நீங்கள் எச்.ஐ.வி தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவரைக் கலந்தாலோசித்து ஆன்டி ரெட்ரோ வைரல் மருந்தினை எடுத்துக் கொள்ளலாம்.பாலியல் தொழிலில் ஈடுபடுவபர்கள், ஆணோடு ஆண் உடலுறவில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட துணைகளுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஆபத்தும் அதிக அள‌வில் உள்ளன.சட்ட விரோதமான போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள் மற்றும் அதற்கான‌ ஊசிகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றிற்கான வாய்ப்புகள் அதிகம்.எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் பாலியல் துணையாக இருப்பதும் நோய்த் தொற்றினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினைக் கொண்டுள்ளது.நீங்கள் ஆன்டி ரெட்ரோ வைரல் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதிலும், எச்.ஐ.வி தொற்றுக்கான ஆபத்தைக் குறைக்கப் பாதுகாப்பான பாலினச் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்துவதற்கான மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். நவீன உலகில் உடல் நலத்தோடு இருப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் ஒழுக்கமாக வாழ்க்கையைக் கடைபிடிக்கும் அனைவரும் சாதாரணமாகவே எச்.ஐ.வி மற்றும் எய்ட்சு நோய் பயம் இல்லாமல் வாழலாம். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

இதையும் படிக்கலாமே
இது BiggBoss பகுத்தறிவு ஜீவிகளுக்காக
வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லையா? தீர்...
உல்லாசமாக இருந்து விட்டு காதலியை கொன்ற...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
போட்டோவ பார்த்ததும் ஹாலிவுட் நடிகை என்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
நீங்கள் நூடில்ஸ் பிரியரா ..? அப்படியான...
பட வாய்ப்புக்காக இப்படி செய்த பிரபல 'ஹ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுக்க போ...
பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ...
கண்களால் அனைவரையும் கைது செய்த நடிகை ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares