மக்களை சீரழிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்… சிதையும் வாழ்க்கை: பகீர் தகவல்..!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சென்னைப் புரசைவாக்கத்தில் துணிக்கடை நடத்தும் பாரதிதாசன் என்பவர் திடீரென்று ஒருநாள் தன் கடையை மூடுவதாகத் தெரிவித்தார். அதிர்ச்சியுடன் ” ஏன் ” என்றேன். ”

ஒரு நாளைக்கு 5000 முதல் 7000 ரூபாய் வரை என் கடையில் வியாபாரம் ஆகும். விழாக்காலங்களில் அது 15000 தொடும்.

நிம்மதியாக என் தந்தை காலம் தொட்டே வியாபாரம் செய்து வந்த நான் கடந்த சில ஆண்டுகளாக வியாபாரமின்றி கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறேன்.நான் மட்டுமல்ல புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் கடை நடத்தும் அத்தனை வியாபாரிகளின் நிலையும் இதுதான்.

என்று இங்கு சரவணா ஸ்டோர்ஸ் வந்ததோ எங்கள் வாழ்வே நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. அவர்களுடன் போட்டிப்போடுவது என்பது எங்களால் இயலாதக்காரியம். இன்று என் கடையில் நடந்த மொத்த வியாபாரம் வெறும் 800 ரூபாய். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நான் எப்படி வாடகை கொடுப்பேன். ஆட்களுக்கு சம்பளம் தருவேன். நான் 30 ஆண்டு காலம், என் தந்தையார் 30 ஆண்டுகாலம் என்று நாங்கள் கட்டிக்காத்த வியாபாரத்தை நான் நிறுத்துவதை நினைத்தால் என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. எனக்கு இப்போது 48 வயது. இனி நான் எங்கு போய் என்ன வியாபாரம் செய்வது ? ”

நண்பர் பாரதியின் நிலை நம்மை கண்கலங்க வைத்தது. கிட்டத்தட்ட மால்களால் அப்பகுதி வியாபாரங்கள் பாதிக்கப்படுவதுப்போல் சரவணா ஸ்டோர்ஸ் தனது புதிய புதிய ஆக்டோபஸ் கிளைகளால் ஒட்டு மொத்த சிறு வியாபாரிகளையும் நடுத்தெருவுக்கு அழைத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாகத்தான் புதிய மேம்பாலத்தால் போரூர் பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலைப் பெற்றனர்.

புதிய சரவணா ஸ்டோர்ஸ் திறப்பால் கடந்த இரண்டு நாட்களாக மியாட் மருத்துவமனைத் தொடங்கி பூவிருந்தவல்லிவரை, மக்கள் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகின்றனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒரே கடையில் காய்கறி தொடங்கி தங்கம்வரை விற்பனை செய்யும்போது , அதுவும் குறைந்த விலையில் விற்பனை செய்யும்போது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விடுகின்றனர்.

தரம் குறித்தெல்லாம் நம் மக்கள் கவலை கொள்வதில்லை.குறைந்த விலை மட்டுமே அவர்களது நோக்கம்.

எல்லாம் சரி ஒரு தனி முதலாளியால் , வியாபார முதலையால் சிறிய வியாபாரிகள் முதல் அப்பக்கம் போகும் வரும் மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா ?

போரூர் போன்ற நெருக்கடிப்பகுதிகளில் மாநகராட்சி எப்படி 10 லட்சம் சதுரடி கடைக்கு அனுமதி வழங்குகிறது ? அதே பகுதியில் நிகழ்ந்த முகளிவாக்கம் விபத்து அரசுக்கு மறந்துவிட்டதா ?

சரவணா ஸ்டோர்ஸ் சகோதரர்களின் வியாபாரப்போட்டியால் அவர்களும் நடிகர்கள் ஸ்நேகாவும், சூர்யாவும் இன்னும் பல நடிகர்களும் கொடிக்கட்டிப்பறக்கிறார்கள். ஆனால், இவர்களால் பாதிப்படைவர்களின் நிலை பற்றி யார் கவலைப்படுவது ? அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதுகுறித்து போரூர் வியாபார சங்கத்தைச் சேர்ந்த கண்ணபிரான் நம்மிடம் பேசும்போது …”

சார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிகள் கடுமையாக உழைத்து மேலே வந்தவர்கள். எப்போது அவர்கள் குடும்பத்தில் பாகப்பிரிவினை நிகழ்ந்து ஆளாளுக்கு போட்டிப்போட்டுக் கடை திறக்கத் தொடங்கினார்களோ , எங்களைப்போன்ற சிறு வியாபாரிகளின் நிலை அதோ கதிதான்.

முன்பெல்லாம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு சரவணா ஸ்டோர்ஸில் வேலைவாய்ப்பு உத்திரவாதம் உண்டு.

அடிமைப்போல் அவர்கள் நடத்தப்பட்டாலும் அவர்கள் வாழ்வு ஓடியது. இன்று நீங்கள் எந்த சரவணா ஸ்டோர்ஸில் நுழைந்தாலும் பெரும்பாலும் வட இந்தியப்பணியாளர்களே அங்கு நிற்பார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அவர்கள் இந்தி கலந்த தமிழில் நம்மை வரவேற்றுக் கொல்கின்றனர். எங்களைப்போன்ற சிறு வியாபாரிகளை மட்டுமல்ல தமிழர்களின் வேலை வாய்ப்பையும் சரவணா ஸ்டோர்ஸ் அழித்து வருகிறது. இது குறித்து எவரும் வாய்திறப்பதில்லை.

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்கப்படுவதில்லை. பெரும்பாலும் வட இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களே விற்கப்படுகின்றன.

ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை என்பதே கிடைக்காது.

இந்த அழகில் மொழி தெரியாத அந்த வட இந்தியத் தொழிலாளர்களால் மக்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பல கடைகளில் அந்த வட இந்திய வாலிபர்கள் நம் தமிழ்ப் பெண் ஊழியர்களை சீண்டுவதாகவும் புகார் வருகிறது.

நேற்று போரூரில் திறக்கப்பட்ட கடை அரண்மனை போல் இருக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனால், அது வழக்கமான அடுக்குமாடி சரவணா ஸ்டோர்ஸ்தான். எத்தனைப் பித்தலாட்டம் பாருங்கள். தமிழன் வியாபாரத்தில் வெல்வது மகிழ்ச்சிதான். ஆனால் , அவர்களால் பாதிக்கப்படுவதும் தமிழர்களே.

கண்ணபிரான் கருத்தில் உண்மை உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் எத்தனைக்கடைகளை வேண்டுமானாலும் திறந்துகொள்ளட்டும். ஆனால் அதில் வட இந்தியர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்தட்டும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மாவட்டம்தோறும் கடைகளைத் திறந்துக்கொள்ளட்டும். 5 கிலோ மீட்டருக்கு ஒரு கடை திறந்து சிறு வியாபாரிகளை அழிப்பதை நிறுத்திக்கொள்ளட்டும்.

வியாபாரம் என்பது போட்டிகள் நிறைந்ததுதான். ஆனால் , ஒருவர் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் மற்றவரெல்லாம் சாக வேண்டும் என்பது வியாபாரம் அல்ல….கொலை !!

இதையும் படிக்கலாமே
ஓவியாவின் அடுத்தடுத்து வரும் பேய் படங்...
பிக் பாஸ் பார்வையாளருக்கு ஒரு வேண்டுகோ...
சன்னிலியோனின் இடத்தில் இவரா மகிழ்சியில...
அனைவரும் படிக்கவும் இது தவறான பதிவு அல...
பிரபல நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி ...
மதிப்பெண் ஆசைக்காட்டி 40 மாணவர்களை உல்...
முகநூலில் போலியாக கணக்கு தொடங்குபவர்கள...
டென்ஷன்,டென்ஷன், டென்ஷன்..! கவலையை விட...
தொகுப்பாளினி டிடி-யின் விவாகரத்துக்கு ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
நிர்வாணமாக நின்றால் தேர்தலில் சீட் தரு...
சைக்கில் ஓட்டுவதால் ஆண்மை பாதிக்கப் ப...