நான்காம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.5K
 •  
 •  
 •  
 • 148
 •  
 •  
 •  
 •  
 •  
  2.7K
  Shares

தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!!
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
பாகம் 01
பாகம் 02 
பாகம் 03 இனி மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக………… இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் சம்பவங்களின் அடிப்படையில் தற்போது சிறையில் உள்ள போராளிகள்; மற்றும் இச் சம்வத்தோடு தொடர்புடைய பொது மக்களின் பெயர்கள் யாவும் மாற்றப்படுகின்றது. இப் பதிவில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் ஒரு சிலரின் பெயரினை மாத்திரம் நீங்கள் நிஜப் பெயர்களூடாக அல்லது சிறப்புப் பெயரினூடாகத் தரிசிக்கலாம். ஏனையோரின் பெயர்களை இங்கே மாற்றியிருக்கிறேன்.
இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மல்லாவிப் பகுதியினைச் சேர்ந்த ஊமக் கந்தையர் எனும் பெயரால் அழைக்கப்படும் கந்தசாமியின் மகன் தான் சத்தியவரதன். 1990ம் ஆண்டு வரை புளொட் அமைப்பில் சேர்ந்திருந்த சத்திய வரதன். (நிஜப் பெயர்) இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த மாற்று இயக்கங்களைப் புலிகள் மன்னிப்புக் கொடுத்து வாழ விடுகின்றோம் என்று ஆசை காட்டி அழைத்த காலப் பகுதியில்; ரெலோ இயக்க அமைப்பினர் பலர் உயிரோடு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட போது, தனக்கும் இதே நிலமை வரும் என உணர்ந்து புலிகளால் தனக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்பதனை அறிந்து இராணுவத்தோடு சேர்ந்து புலிகளையும், புலிகளுக்கு ஆதரவானோரையும் தேடி அளிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்ட நபர் தான் இவர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

புலிகளின் தேடியளிக்கும் பட்டியலில் நீண்ட காலமாக இருந்த தமிழ்ப் புலனாய்வாளரான இவர் தன் புத்தி சாதுரியத்தால் புலிகளுக்கு தண்ணி காட்டி இன்று வரை வேப்பங்குளம்,  ஜோசேப் முகாம், மற்றும் வவுனியா மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவில் அதி உச்ச விசுவாசத்தோடு கடமையாற்றும் ஒரு முதன் நிலை அதிகாரியாக விளங்குகின்றார். இறுதியாக வன்னியிலிருந்து வந்த அகதிகளைத் தடுத்து வைத்திருந்த வவுனியாத் தடுப்பு முகாமிலும் சத்தியனின் பிரசன்னம் இடம் பெற்றிருந்தது. இந்தச் சத்தியவரதன் தன்னால் இயன்ற வரை வவுனியாவில் புலிகளின் நடவடிக்கையினை கட்டுப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் செயற்படத் தொடங்கினார். இதன் பிரகாரம் சிவகரனின் கடைக்கு பாண் விநியோகம் செய்யும் பேக்கரி உரிமையாளரான இஸ்லாமிய காக்காவினை ஒழுங்கு செய்தார்.

பெருமளவு பணம் கொடுத்து தன் திட்டத்தினை விளக்கிக் கூறினார் சத்தியன். வவுனியாவில் திவீரமான புலிகளின் தாக்குதல்களின் பின்னணியில் நெருப்பு எனும் பெயர் கொண்ட புலிப் போராளி பல இடங்களில் தனித்து நின்று தாக்குதல் செய்து தனித்துவமான திறமை நிறைந்த சண்டைக்காரனாக விளங்கியதை இராணுவம் அறிந்து கொள்கின்றது. நெருப்பு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவைப் பூர்வீகமாகக் கொண்டவர். புலிகளைத் தேடியளிக்கும் சத்தியனுக்கு அச்சமூட்டும் ஒரேயொரு நபராக, வவுனியாவில் உள்ள இராணுவத்தினருக்கு அச்சமூட்டும் நபராக நெருப்பு எனும் நபர் விளங்குகிறார். இதற்கான காரணம் சத்தியன் வேப்பங்குள முகாமை விட்டு வெளியேறி ஜோசேப் முகாம் எனப்படும் வன்னிப் படை நடவடிக்கைக்கான கட்டளைத் தலமையகத்தினை நோக்கிச் செல்லும் போது இரண்டு தடவைகள் நெருப்பு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களிருந்து உயிர் தப்பியமையே ஆகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த நேரத்தில் புலிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த வழியேதுமின்றி ஆத்திரம் கொண்ட இராணுவத்தினர் மகா இறம்பைக்குளம், ஈரற் பெரிய குளம், குருமன்காடு, தேக்கவத்தை,(இங்கே சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்தார்கள்) நெளுக்குளம், சின்னப் புதுக்குளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள இளம் பெண்கள் மீது கண் வைக்கத் தொடங்கியதாக மக்கள் மத்தியில் கதைகள் உலாவத் தொடங்குகின்றது. (Please Notify, I’m Clarifying those sentences Very Clearly. This is not my opinion Or Not my quotation.) இராணுவச் சீருடையணிந்தோர், முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியோர், பகலில் அழகிய பெண்கள் உள்ள வீடுகளைக் இனங்கண்டு நோட் பண்ணி வைத்து இரவில் அவ் வீடுகளுக்குள் நுழைந்து பெண்களைக் கடத்திச் சென்று தம் இச்சையினை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். ஒத்துழைத்த பெண்களுக்கு உயிர்ப் பிச்சையளித்து மறு நாள் அதிகாலை (இருள் விலக முன்)அவர்களின் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்கள்.

சீருடையணிந்தோரின் செயல்களுக்கு ஒத்துழைக்காது முரண்டு பிடிக்கும் பெண்களை உயிரோடு கொன்று புணர்ந்து தம் இச்சையினை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். மக்கள் மத்தியில் இது இராணுவம் தான் எனப் பேச்சு பரவலாக வந்து கொள்கின்றது. நெருப்பு சினங் கொண்டெழுந்தான். தனியே தேக்கவத்தைப் பகுதியினுள் இராணுவத்தினரின் வருகைக்காக காத்திருந்தான். இராணுவ வாகனம் வெள்ளை வானில் தோணிக்கல் வீதியூடாக ரயில்வே தண்டவாளத்தினைக் கடந்து வருவதனை அறிந்து தாக்குதல் நடத்தியும், கிரேனட் எறிந்தும் தன் வீரத்தினை நிலை நாட்டி விட்டு கூமாங்குளத்திற்கு வந்து சேர்கிறான்.

வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த பல இளைஞர்கள் இந் நேரத்தில் தாமாக விரும்பிப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தினை பொறுப்பாளர்கள் அமலனிடமும், விமலனிடமும் சொல்லுகிறார்கள். இந்த இளைஞர்களின் விருப்பத்தினை அறிந்து கொண்ட அமலனும், விமலனும் பல இளைஞர்களை ஒன்று திரட்டி வன்னிப் பகுதியில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குப் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பறையனாலங்குளம் வீதியூடாக அனுப்பி வைக்கின்றார்கள். அண்ணளவாக இந் நேரத்தில் 150 இளைஞர்கள் மற்றும் பெண்கள் வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

இதுவும் இராணுவத்தினருக்குப் பெருந் தலையிடியாக மாறியது. வீடு வீடாகச் சோதனை செய்து குடும்ப அங்கத்தவர்களின் விபரங்களைத் திரட்டி யார் யார் புலிகள் அமைப்பில் இணைந்தார்களோ,அவர்களின் குடும்பத்தினர்களை அச்சுறுத்தத் தொடங்கினார்கள். இந் நேரத்தில் இரவில் பெண்களைச் சுவைப்பதற்காகவும், கப்பம் கோரி மக்களைக் கடத்துவதற்காகவும் வெள்ளை வேனில் வருவோரின் உதடுகளுக்கு அச்சமூட்டும் ஒரு பெயராக நெருப்பு எனும் பெயர் ஒலிகக்த் தொடங்கியது. வவுனியாவில் புலிகள் பல்வேறு முனைகளில் உள்ளிருந்து தம் ஊடுருவித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினார்கள். நெருப்பு பட்டப் பகலில் ஒரு நாள் தன்னுடைய சினைப்பர் துப்பாக்கியோடு; மறு நாள் ஏ.கே 47 துப்பாக்கியோடு, அடுத்த நாள் 50 கலிபர் துப்பாக்கியோடு பொது மக்கள் முன் தான் யார் என்று இனங் காட்டுவது போல சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளும் பவனி வரத் தொடங்கினான்.

யார் இந்த நெருப்பு: ஈழத் தமிழர்களின் வரலாற்றில் வீரத்திற்குப் பெயர் போன -காக்கை வன்னியர்களின் துரோகத்தினால் கவிழ்க்கப்பட்டவனும்; வெள்ளையரை எதிர்த்த முதல் தமிழ் மன்னன் எனும் பெயர் என்றதும் எமக்கெல்லாம் நினைவிற்கு வருகின்ற பெயருக்குச் சொந்தக்காரனுமான பண்டார வன்னியனிற்குச் தனிச் சிலை உள்ள முல்லைத் தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்/ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியிற்கு அண்மையாக உள்ள ஊரான கற்சிலை மடுவில் பிறந்தவன் தான் இந்த நெருப்பு. இலங்கை இராணுவத்தினரால் 26 மாதங்கள் கடும் போரின் பின்னர் கைப்பற்றப்பட்ட வன்னி மண்ணின் பெரும் பரப்பளவு நிலத்தினை வெறும் ஆறு நாட்களுக்குள் மீட்ட ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் அம்பகாமத்தில் ஆட்டிலறிகளைக் கைப்பற்றிய புலியணியினருக்கு உப கட்டளைப் பொறுப்பாளராக இருந்தவன் தான் இந்த நெருப்பு.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தீச்சுவாலை முறியடிப்புச் சமர், கரிப்பட்ட முறிப்பு முகாம் மீதான ஆட்டிலறி அழிப்புத் தாக்குதலிற்கான பின் தள வழி நடத்துதல், ஓயாத அலைகள் நான்கில் குடாரப்புத் தரையிறக்கம் ஊடாகச் சென்று வெற்றிலைக் கேணி முகாம் தாக்கியழிப்பு நடவடிக்கை, யாழ் குடாநாடு மீதான முற்றுகை எனப் பல களம் கண்ட ஒரு சிறந்த வீரன் எனப் புலிகளால் அப்போது போற்றப்பட்டவன் தான் நெருப்பு. ”கொட்டி கிந்தர” (நெருப்பு புலி) எனும் சிங்களச் சொல்லினைப் உச்சரிக்கும் இராணுவத்தினருக்கு டவுசருடன் மூத்திரம் போகுமளவிற்கு வவுனியாவில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஒப்பற்ற வீரன் தான் நெருப்பு. வன்னி முற்றுகைக்காக ஆட்டிலறிகளை, பல்குழல் பீரங்கிகளை, ராக்கட் லோஞ்சர்களை, ஆயுத தளபாடங்களை வவுனியாவை விட்டு நகர்த்துவதற்கு அச்சம் கொண்டிருந்தார்கள் இராணுவத்தினர்.

வவுனியா ஓமந்தை வீதியில் எந் நேரமும் புலிகளின் வழிமறிப்புத் தாக்குதல்கள் இடம் பெறலாம் என்பதே இதற்கான பிரதான காரணமாகும். இந் நேரத்தில் தான் வவுனியாவில் தம் முற்றுகையினை விரிவுபடுத்த முடியாதிருந்த இராணுவத்தினருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. தமிழர்களை அழிப்பதற்கு உலக நாடுகள் உதவினாலும், தமிழர்களிடமிருந்து பணத்தினைப் பெருமளவில் பெற்று அதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தேவைகளுக்காகவும்;தமிழருக்கு எதிரானோருக்கும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார்கள் இராணுவத்தினர்.இதன் பிரகாரம் மட்டக்களப்பில் இருந்த கருணா குழுவினரின் செயற்பாடுகளை வவுனியா நோக்கி விரிவுபடுத்தினார்கள் இராணுவத்தினர்.

இனி வவுனியாவில் கருணா குழு எனும் பெயரால் இடம் பெற்ற விபரீதங்கள் என மக்கள் மத்தியில் பரவிய கதைகள் என்ன? வவுனியா மாவட்ட நீதிபதி திரு. இளஞ்செழியன் அவர்கள் கருணா குழு பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் நிகழ்த்திய செயற்பாடுகள் எவை? நெருப்புச் செய்த ஒரு விபரீத நிகழ்வால் வவுனியாவில் இடம் பெற்ற புலிகளின் நடமாட்டங்கள் எவ்வாறு திசைமாறத் தொடங்கின? வன்னி முற்றுகையினை இராணுவத்தினர் எவ்வாறு இலகுவாக ஆரம்பித்தார்கள்? இதற்கான பதில்களை அறிய வேண்டுமா? அது வரை அடுத்த பாகத்திற்காக காத்திருங்கள்! புரட்சி வானொலிக்காக கமலேஷ் .மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
Mersal Movie Audio Launch Stills
Ilaiyarajah Golden Hitz
ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்பட...
Bigg Boss Title Winner is Ganesh?
Shivalinga Movie Comedy Scenes
கவர்ச்சி மழையில் காஜல் அகர்வால் சமூக வ...
நடிகர் விஜய்யின் மக்கள் கட்சியில் இருந...
கமலஹாசன் அதற்கு துளியும் தகுதியற்றவர்....
மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திரு...
தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி துலங்கு...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.5K
 •  
 •  
 •  
 • 148
 •  
 •  
 •  
 •  
 •  
  2.7K
  Shares