அழகான மற்றும் சுகபிரவசத்தில் குழந்தை பிறக்க வேண்டுமென ஆசையா? இதோ உங்களுக்கான மருத்துவ குறிப்புகள்!

குளிர்காலம் தொடங்கினாலோ அல்லது திடீரென வானிலை மாறினாலோ வைரஸ், மலேரியா போன்ற நோய்கள் குழந்தைகள் முதல் முதியோர் வரை தாக்குவது வழக்கம். தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் தானே என்று அலட்சியமாக மருந்து கடையிலோ, கம்பவுண்டர்களிடமோ அல்லது போலி டாக்டர்களிடமோ சென்று பரிசோதனை செய்வது போன்ற தவறான செயல்களை பொதுமக்கள் அறியாமையால் செய்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி யோசிப்பதே இல்லை. அதேபோல் இன்று பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவது என்பது அரிதாக உள்ளது. இன்றைய இயந்திரமய உலகால் உடலுழைப்பு குறைந்து போயுள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெறுவது என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு எல்லாம் சிறந்த தீர்வை வழங்க திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டார் மருத்துவமனையின் பெண்கள் நல மருத்துவர் பி. ஐஸ்வரியா எம்.பி.பி.எஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவை பின்வருமாறு
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

காய்ச்சல் என்பதற்கான மருத்துவ குறிப்புகள் என்ன?

எந்தவொரு காய்ச்சலும் 3 நாட்கள் மேல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். முதலில் எளிதான பரிசோதனைகளான CBC WIDAL COMPLETE URINE இதில் டைப்பாய்டு காய்ச்சலாக இருந்தால் WIDAL பாசிடிவை குறிக்கும். இதுவே டெங்கு காய்ச்சலாக இருப்பின் தட்டணுக்கள் குறையும். அதை ஒப்பிட்டு டெங்கு காய்ச்சல் பரிசோதனையை மருத்துவர் கண்டறிவார்.

பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு ANTIBIOTICS IM INJECTIONS போடக்கூடாது. இதை பற்றி அரசு பதிவு பெற்ற மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு மட்டுமே தெரியும். தட்டணுக்கள் 30000 கீழ் குறைந்தால் தட்டணுக்கள் TRANSFUSION செய்வது அவசியமாகும்.காய்ச்சல் தானே என்று அலட்சியமாக மருந்துக்கடையிலோ, கம்பவுண்டர்களிடமோ அல்லது போலி டாக்டர்களிடமோ சென்று பரிசோதனை செய்யாதீர்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சுகபிரசவத்திற்க்கு என்ன செய்ய வேண்டும்? எங்கு பார்க்க வேண்டும்?

அந்த காலத்தில் உடற்பயிற்சியாக துணி துவைப்பது, மாவு அரைப்பது, வீடு வாசல் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை பெண்கள் செய்தனர். அதற்கு ஏற்றார் போல் நல்ல உணவும் உண்பார்கள். இக்காலத்தில் இயந்திரங்களின் வருகையால் சோம்பலாக நாம் அனைவரும் மாறிவிட்டோம்.

விளைவு சிசேரியன் அறுவை சிகிச்சை என்ற LSCS OPERATION மூலம் குழந்தையை பெறுகிறோம். உடற்பயிற்சி, உணவுமுறை பழக்கம் நவீன மருத்துவ முறை இவை அனைத்தையும் சரியாக செய்தால் நிச்சியம் சுகபிரசவத்தை அடையலாம். எங்களது ஸ்டார் மருத்துவமனையில் சுகப்பிரவசத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து பல நவீன மருந்துகள் மூலமும், ஊட்டசத்து புரதச்சத்து உணவுகள் எதை சாப்பிட வேண்டும் என்பதையும் ஆராய்ந்து உடற்பயிற்சியின் அவசயத்தியையும் அடங்கி ஒரு சிடியை தருகிறோம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மேலும் எனது ஆலோசனைபடி மாதம் ஒருமுறை போடவேண்டிய தடுப்பூசிகளையும் தவறாமல் எடுத்து கொள்ளவேண்டும். 3மாதம் ஒருமுறை USG ஸ்கேன் எடுத்தல் வேண்டும். 3ம் மாதம் சர்க்கரைநோய் கண்டறியப்பட்டால் நமது மருத்துவமனையிலேயே சர்க்கரை சிறப்பு மருத்துவரின் ஆலோசனையையும் எளிதாக பெற்று சுகப்பிரவசத்தை இயன்ற அளவு முயற்சி செய்து எளிதாக்கலாம்.

அதிகமாக பகிருங்கள்: காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடிய நாட்டு மருந்து!

காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடியதும், வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டதும், வாயு பிரச்னையை குணப்படுத்த கூடியதுமான விளாம்பழத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது விளாம் பழம். இதை, யானைகள் விரும்பி சாப்பிடும். விளாம்மரத்தின் பட்டை, இலை, பழம் உள்ளிட்டவை பயனுள்ளதாக விளங்குகிறது.

விளாம் மரத்தின் பட்டையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது. விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதில் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த தேனீரை குடித்துவர வாயு பிரச்னை குணமாகும். விளாமரம் வீட்டில் வளர்க்க கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன் தருகிறது. உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும. வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அல்சரை சரிசெய்கிறது. விளாம் பழத்தை பயன்படுத்தி பசியின்மை, சுவையின்மை, நீர்வேட்கைக்கான மருந்து தயாரிக்கலாம்.

நன்றாக பழுத்த விளாம் பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு, இதய கோளாறுகள் குணமாகிறது. பித்த சமனியாக விளங்கி செரிமான கோளாறுகளை சரிசெய்யும். பசியை தூண்டக்கூடிய மருந்தாக விளங்குகிறது.

விளாம் மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால் அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி தோல் ஆரோக்கியம் பெறும். வீட்டிலிருக்கும் மஞ்சளை பயன்படுத்தி மூக்கடைப்பு, நீர்வடிதல், தும்மல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்வதால் மூக்கடைப்பு சரியாகிறது. நுரையீரல் ஆரோக்கியம் அடைகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும், நன்கு பசிக்கும்.
*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

இதையும் படிக்கலாமே
அல்சர், வயிற்றுப்புண் இவற்றில் இருந்து...
மாதவிடாய் நாட்களில் உடலுறவுகொண்டால் இத...
அதிகமாக பகிருங்கள்.சிறுநீர் அடக்குவது ...
அதிகமாக பகிருங்கள்.! வெறும் வயிற்றில் ...
பெண்கள் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிட...
இளமையில் இதை சாப்பிடுங்கள் முதுமையிலு...
அதிகமாக பகிருங்கள்:ஆண்மையை அதிகரிக்க த...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் ...
உடல் தெரிய ஆடை அணியும் பெண்களுக்கும் அ...
அதிகமாக பகிருங்கள் பயன்பெறுங்கள்: இரத்...
ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டு...