தல அஜித்-தின் மகளை வைத்து ரசிகர்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் …மக்களை போல் கண்டிப்பாக இந்த செயலை தல அஜித் வெறுப்பது உறுதி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 935
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அதிலும் அஜித்திற்கு மதுரையில் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர், அஜித் அசைந்தால் கூட போஸ்ட்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்நிலையில் அஜித்துடன் இது நின்றுவிடும் என்று நினைத்தால் இது அவரின் குழந்தைகள் வரை தொடர்கின்றது, ஆம், மதுரையில் சமீபத்தில் அடித்த போஸ்ட்டர் ஒன்று அனைவரின் மத்தியிலும் முகம் சுளிக்கும்படி உள்ளது.
அஜித்தின் மகள் புகைப்படத்தை ஜெயலலீதாவுடன் ஒப்பிட்டு இவர்கள் போஸ்ட்டர் அடித்துள்ளனர், இது பல அஜித் ரசிகர்களிடமே பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
மேலும், இதுபோன்ற செயல்களால் தான் அஜித் தன் மன்றங்களையே கலைத்தார், ஆனால், இப்படி தொடர்ந்து ரசிகர்கள் செய்து வருவது அவருக்கு மேலும், மேலும் கோபத்தை தான் ஏற்படுத்தும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

யாருக்கு வேண்டுமானாலும் வாத நோய் வரலாம்? எப்படி தடுக்கலாம்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்..?
இந்த வயதுக்குள், இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
கீல் வாத நோய் யாருக்கு ஏற்படும்?
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களினால் தான் இது பெரும்பாலும் ஏற்படுகிறது.அதிலும் குறிப்பாக 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு வகையான கிருமிகளால் இது போன்ற பாதிப்பு ஏற்படும். இந்த வயதுக்குள், இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்
இது சற்று வயது ஆகும்போது வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண்களுக்கு கால் மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்வுக்குள் இந்தத் திரவம் இருக்கும். இந்தத் திரவம் வயது ஆக ஆக குறைவாக சுரக்கும். இதனால் இரண்டு மூட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடொன்று உராயத் தொடங்கும். இதனால் உண்டாவதுதான் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்.அறிகுறிகள் :மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை, மலச்சிக்கல், நடக்கும் போது எலும்பு முறிந்தது போன்ற சடக் சடக் என்ற ஒரு வகையான ஒலி, சில சமயங்களில் காய்ச்சல், காலை நீட்டி மடக்க முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.இந்த வகை நோய் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது. பலவீனமான உடல், அதிக வேலைப்பளு, மூட்டுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் இந்நோய் வரலாம். சில பெண்களுக்கு பேறுகாலத்திற்குப் பின்னர் இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறு உண்டு.

ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ் :
வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுநோய்க்கிருமிகளால் இந்த நோய் வரலாம். தவிர, ரத்தத்தில் ருமாட்டாய்டு என்ற காரணி பாசிட்டிவ் ஆக இருக்கிறவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என அர்த்தம். கை விரல் பொருத்துகளில் வலி, வீக்கம் இருக்கும்.
விரல்களை நீட்டி மடக்க முடியாது. பெரும்பாலும் அதிகாலையில் தான் இது போல ஆகும். குளிர்ச்சியான சூழலில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகும். மணிக்கட்டுப் பகுதி மற்றும் விரல்கள் சிவந்து எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும்.
காரணங்கள் :
மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த நாளங்களில் சிதைவு ஏற்பட்டாலும் கூட இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடது பக்கம் முழுவதும், இடது பக்க மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்குவதே இந்த நோயின் தன்மை. இந்தப் பாதிப்பு பெரும்பாலும் அதிகாலையில் தான் தெரியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
உணவுப் பழக்கங்கள்:
அதிகமான கொழுப்புப் பதார்த்தங்கள் உண்பது, குடிப்பழக்கம். அதிகமாக டென்ஷன் ஆவது, அதிக ரத்த அழுத்தம் ஆகியவை இந்த நோய் உண்டாகலாம். நோயாளிகளுக்குத் தெரியாமலே அதிகாலையில் மூளையில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் மற்றும் தூக்கம் போன்றவற்றை வயதுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆப்பிள் :
ஆப்பிள் யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதை தடுக்கிறது. இது இதய நோய்களை தடுக்கிறது. புற்று நோயை தடுக்கிறது. ரத்தத்தில் கலக்கும் கொழுப்பை கரைக்கும்.
ஆர்த்ரைடிஸ் மற்றும் ஆஸ்துமா, போன்ற பெரும் வியாதிகளை தடுக்கிறது.
வெங்காயம் :
வெங்காயம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். ரத்தக் கட்டுதலை தடுக்கிறது. இதய தமனிகள் தடிமனாவதை தடுக்கிறது. முக்கியமான நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மூளையின் செயல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
செர்ரி பழங்கள் :
செர்ரிப் பழங்கள் இதய நோய்கள், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் பெற்றவை. செர்ரிப் பழங்களில் விட்டமின் ஈ, சி அதிகம் இருக்கிறது. நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும். ஆர்த்ரைடிஸிற்கு எதிரானது.
பார்லி நீர் :
டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டை யும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற் கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக் கத்தான் கீரை. இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.
பச்சடி :
வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும்.
பச்சடி :
வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும்.
புளியை தவிர்த்தல் :
அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளியை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.
திரிபலா சூரணம் :
திரிபலா சூரணத்தை பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 ஸ்பூன் வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்கி, பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தரும்
தைலம் :
பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய் களுக்குப் பயன்படுத்தலாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 935
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares