நள்ளிரவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…ஆண்களே ஏன் இப்படி!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிரியா போலீஸ் வேலைக்கு செல்ல ஆசைப்பட்டார். பிரியா நல்ல உயரம். அதுமட்டும் இல்லாமல் கம்பிரமான உடல்வாகை உடையவள்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், அவளுடைய உடலும் திடகாத்திரமாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என்கின்ற கனவில் பிரியா இருந்ததால்., அதற்கு ஏற்றபடி தனது உடலை வலுப்படுத்தி வைத்திருந்தாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆனால்., பிரியாவின் பெற்றோர்க்கு தங்களது பெண்ணை போலீஸ் வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. பிரியாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர்கள்., மாப்பிள்ளை தேடினார்கள்.

பிரியாவுக்கு போலீஸ் மாப்பிள்ளை அமைந்தது. தான் போலீஸ் ஆக முடியாத ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், தனது கணவர் போலீசாக இருக்கிறாரே என்று பிரியா மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்றது. பிரியாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் பருவத்தை அடைந்ததுமே, கணவரின் சம்பாத்தியம் போதாது என்பதை புரிந்துகொண்டு பிரியவும் வேலைக்கு செல்ல விரும்பினாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறுநகரத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது. காலையில் வேலைக்கு சென்றால் இரவு 9 மணிக்குதான் வீடு திரும்ப முடியும்.

இதனால்., ஸ்கூட்டி ஒன்றை பிரியா வாங்கினாள். ஸ்கூட்டியில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாள். அது தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று பிரியா நினைத்தாள்.

பிரியா போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டிருந்ததால் அவள் அடிக்கடி கணவரின் போலீஸ் சீருடையை அணிந்து அழகு பார்ப்பது உண்டு. அன்று அவளுக்கு அந்த விபரீத ஆசை ஏற்பட்டது. மதியம் வேலைக்கு கிளம்பியபோது கணவரின் சீருடைகளை எடுத்து ரகசியமாக தனது பைக்குள் வைத்துக்கொண்டாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இரவில் வீடு திரும்பும்போது அந்த உடையை அணிந்து வரவேண்டும் என்று பிரியா ஆசைப்பட்டாள். கணவருக்கு தெரியாமலே இதை செய்ய திட்டமிட்டாள். வீட்டிற்குள் நுழையும்போது கணவர் பார்த்துவிட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற தைரியம் அவளிடம்இருந்தது.

நினைத்ததுபோல் அன்று பணி முடிந்ததும் காவலர் சீருடையை அணிந்து கொண்டு பிரியா வீட்டிற்குப் புறப்பட்டாள். அவள் வரும் வழியில் ஆற்றுப்பாலம் ஒன்றை கடக்கவேண்டும்.

இருபக்கமும் மரங்கள் அடர்ந்த பகுதி அது. அவள் பாலத்தை கடந்து சென்றபோது யாரோ ஒருவர் வாகனத்தில் பின்தொடர்வது தெரிந்தது. வண்டியின் வேகத்தை பிரியா அதிகரித்தாள்.

சிறிது நேரத்தில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டு அவளை துரத்தினார்கள். அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் அந்த கும்பல், அவளை மடக்கிவிட்டது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

‘ஒற்றை பொம்பளையா எங்களை வேவு பார்க்க வந்தியா.. என்று கூவிக்கொண்டே தாக்கும் நோக்கத்துடன் ஆவேசமாக நெருங்கியது அந்த கும்பல். அப்போதுதான் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், டேய் இவள் போலீஸ் கிடையாதுடா இவளை எனக்குத் தெரியும்.. நம்ம பக்கத்து கிராமத்து பொண்ணு.. என்று கூறி, மற்றவர்களை தாக்கவிடாமல் தடுத்தான்.

பிறகு அடிக்க வந்தவர்களிடம் கைகூப்பிய பிரியா, சீருடை கணவருக்குரியது என்று கூறிவிட்டு, தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள்.

அது ஒரு மணல் கடத்தல் கும்பல். போலீஸ் சீருடையில் வந்த பிரியாவை போலீஸ் என்று நினைத்து தாக்க நினைத்துள்ளார்கள்.

அன்றுதான் பிரியா போலீஸ் சீருடை பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்ந்திருக்கிறாள். தனது மொபட்டில் போலீஸ் என்று எழுதியிருந்ததையும் அழித்துவிட்டாள்.

போலீஸ், வக்கீல், மீடியா என்றெல்லாம் வண்டியில் எழுதிக் கொண்டு சுற்றுவது பாதுகாப்பானது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்.

நயன்தாராவை போன் காலில் கலாய்த்து தள்ளிய விஜய் டிவி தீனா…! வீடியோ இணைப்பு… 100% காமெடி இலவசம்!

 

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது.

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பஹத் பாசி, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான வெற்றிப்படம் வேலைக்காரன். விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் பிரபலங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் பெற்றுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த நிலையில் உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால், 4ம் நாளில் இப்படத்தில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முன்னணி மாஸ் ஹீரோக்களின் படங்களின் வசூலையும் நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
விஜய் டிவியில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேலைக்காரன் படகுழுவினரை போன் காலில் களைத்து தள்ளிய தீனா.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?