இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர் தான் வீர தமிழச்சி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

“என் மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்”
பனிச்சரிவில் இறந்த ராணுவ வீரரின் மனைவி வீர தமிழச்சியின் தேசபற்றுக்கு ராயல் சல்யூட்…!
கரூர் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார் ராணுவ வீரர் மூர்த்தி. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி இறந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான நாச்சிகளத்துப்பட்டியில் கடந்த 24ம் தேதி,42 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையோடு பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜோடு வந்து தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுதியதோடு, தமிழக அரசு சார்பில் மூர்த்தி குடும்பத்துக்கு 20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
கரூர் மாவட்ட மக்கள் அத்தனை பேரும் திரண்டிருந்தார்கள். எங்கும் கண்ணீர் வெள்ளம். ‘பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெறனும்’ என்று பெண்கள் மெச்சியபடியே கண்ணீர்விட, அழுதழுது கண்கள் வீங்க கணவர் முகத்தைப் பார்த்தபடி சோகத்தோடு நின்றிருந்தார் மூர்த்தியின் மனைவி தமிழரசி. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தன் இரண்டு மகன்களையும் அணைத்தபடி நின்றிருந்த அவரிடம் பேசினோம்.
“அவரை மாதிரி ஒருத்தர் கணவரா கிடைக்கிறது அவ்வளவு கஷ்டம். என் மேலேயும் என் பசங்க சுபிக்‌ஷன், மெர்வின் மேலயும் அவருக்கு கொள்ளை பிரியம். ‘என் கண்ணுதான் இங்க வேலை பார்க்குது. மனசு முழுக்க உங்களைத்தான் நினைச்சுகிட்டு இருக்குது’ன்னு ஒவ்வொரு தடவை பேசுறப்பவும் சொல்வார். கல்யாணம் ஆன நாள்லேருந்து என்கிட்ட அவர் அதிர்ந்து பேசினதில்லை. தாட்டியமா ஒரு வார்த்தை உதிர்த்ததில்லை. மொத்த குடும்பத்து மேலேயும் அவ்வளவு பிரியமா இருந்தார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த ஊர்ல இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் அவர்னா இஷ்டம். யார்கிட்டயும் கோபமா பேசமாட்டார். உதவின்னு யார் கேட்டு வந்தாலும் கையில இருக்கிறதை கொடுப்பார்… இல்லைன்னு மட்டும் சொல்லவே மாட்டார். இத்தனைக்கும் அவர் ராணுவத்துல சேர்ற வரைக்கும் குடும்பத்துல கஷ்ட ஜீவனம்தான். பதினாலு வருஷமா ராணுவத்துல வேலை பார்த்து, கட்டுப்பெட்டியா இருந்து, அவர் அனுப்பி வைச்ச காசுலதான் எங்க குடும்பம் தலைநிமிர ஆரம்பிச்சது.
பசங்களை நல்லா படிக்க வச்சு,பெரிய வேலைக்கு அனுப்பனும்’ன்னு சொன்னார். டீச்சர் டிரைனிங் முடிச்சுட்டு நான் சும்மா வீட்டுல இருந்தத பார்த்துட்டு,’படிச்சுட்டு சும்மா இருக்கிறீயே, அப்புறம் எதுக்கு படிச்ச?. அந்த சீட்டுல வேற யாரும் உபயோகமா படிச்சுருப்பாங்கள்ல. அதனால, ஏதாவது ஸ்கூலுக்கு வேலைக்கு போ’ன்னு என்னை ஊக்கப்படுத்தி வேலைக்கு அனுப்பினார்.
இப்படிப்பட்டவர் எனக்குப் புருஷனா கிடைச்சுருக்காரே’ன்னு ஆண்டவனுக்கு அடிக்கடி நன்றி சொல்வேன். ஆனா, அதைப் பொறுக்காத ஆண்டவன் என்னை தவிக்கவிட்டுட்டு, தன்னோடு அவரைக் கொண்டு போயிட்டான். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
எங்க மேல எவ்வளவு ஆசை வச்சுருந்தாரோ, அதைவிடக் கூடுதலா ராணுவ வேலை மேல ஆசை வச்சுருந்தார். ‘எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் ஆர்மி வேலை போல வராது. ஒவ்வொரு கணமும் இந்த வேலையை விரும்பி அனுபவிச்சு செய்றேன்’ன்னு சொல்வார். ஆனா,’ஆபத்து அதிகம்ங்களே’ன்னு கேட்பேன். ‘நாட்டுக்காகச் செத்தா,சந்தோஷம்தான்’னு சொல்லி என் வாயை அடைச்சுடுவார்.
தான் சொன்னமாதிரியே நாட்டுக்காக உயிரை விட்டு, எங்களை நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டாரே. ‘எனக்கு ஏதாவது ஆனா, அப்பதான் நீ இன்னும் உறுதியா இருக்கணும். ராணுவ வீரர்களைத் திருமணம் செய்த மற்ற வீரர்களின் மனைவிகளுக்கு நீ ஒரு மோட்டிவேஷனா இருக்கணும்’ன்னு சொல்லுவார். அவர் சொன்னாப்புல இப்ப ஆயிட்டு. என் உயிரே என் கணவர்தான்அவரோட லட்சியத்தை கண்டிப்பா நிறைவேத்துவேன். என் மகன்களையும் ராணுவத்துக்காக அர்ப்பணிப்பேன்” என்றார் நெக்குருகிபோய்!.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மூர்த்தியின் நண்பரும் வழக்கறிஞருமான பிரபுவிடம் பேசினோம். “இன்னும் ஒரு வருஷம்தான் அவனுக்கு சர்வீஸ் இருக்கு. அதுக்குள்ள இப்படி ஆயிட்டு. ட்தன் சர்வீஸ் முடிஞ்சதும்,சொந்த ஊர்ல பக்கத்துல உள்ள கொசூர்ல, பெட்ரோல் பங்க் நடத்த ஏதுவா இடம் வாங்கி, எல்லாம் தயாராக வச்சுருந்தார். இப்படி பாதியில எல்லாத்தையும்; எல்லாரையும் தவிக்க விட்டுட்டுப் போவார்ன்னு நினைக்கலை. எந்த கெட்டப் பழக்கமும் அவருக்குக் கிடையாது. நண்பர்கள்ட்ட அப்படி பேசுவார். அவரோட இறுதிஊர்வலத்திற்கு முந்நூறுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்தாங்க. பனிச்சரிவில் அவர் உயிர் சரியும்ன்னு யார்தான் நினைச்சு பார்த்தா?!. இருக்கும் போதும் நல்ல வாழ்க்கை வாழந்தார். அவரோட இறப்புக்கு நாடே மெச்சுற அளவுக்கு பண்ணிட்டார்33 வயசுக்குள்ள அவரோட வாழ்க்கையை காலம் சுருக்கிடுச்சேன்னுதான் வேதனையா இருக்கு” என்றார் சோகத்துடன்.
ஜெய்ஹிந்த்

இதையும் படிக்கலாமே
Velainu Vandhutta Vellaikaaran Comedy ...
வெளியே சொன்னால் வெட்கக் கேடு - விவகாரம...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
இலங்கை சிறுமிகளை வாங்கும் சவுதி அரேபிய...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
ஜெயலலிதா ஒக்டோபர் மாதமே உயிரிழந்து விட...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
தல அஜித்-தின் மகளை வைத்து ரசிகர்கள் செ...
மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுதல்.....
அவுஸ்திரேலியா - மெல்பேர்ண் வாழும் தமிழ...
அலறும் சீனா…புலம்பும் பாகிஸ்தான்… அக்ன...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares