திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான் இருந்த ஓரே ஒரு இரவு ..! திட்டாதீர்கள் என் கதையை கேளுங்கள் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 568
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  868
  Shares

நான் அவசர அவசரமாக துணிகளை எடுத்து பையில் வைத்து கொண்டு தயார் ஆகி கொண்டிருந்தேன். ஊரில் அனைவரும் எனக்காக காத்திருப்பார்கள்.. சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்.. எனது விடுதியின் வாசலில் ஒரு ஹாரன் சத்தம்… வேகமாக ஓடி சென்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்… அவள் என் தோழி தான்.. என்னை ஊருக்கு அழைத்து செல்வதற்காக வந்திருந்தாள்… இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு, என் உடமைகளை எல்லாம் எடுத்து கொண்டு விரைந்தேன்…! என்னமா கல்யாணப் பொண்ணு… நாளைக்கு கல்யாணத்த வச்சுகிட்டு இப்போ ஊருக்கு போற? என்ன பண்ணறது? புராஜெக்ட் ஒர்க் இருந்துச்சு..
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முடிக்காம எப்படி போறது என்றேன்.. ஜன்னல் ஓரமாக வெடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன்… இடையில் அம்மா போன் செய்து, கல்யாண வேலை எல்லாம் நடந்துகிட்டே இருக்கு.. நீ எப்போ வருவ? எல்லாரும் நீ எங்க.. எங்கனு கேக்கறங்க.. சீக்கிரமா வந்துருடா செல்லம் என்றார்.. சரி அம்மா என்று போனை வைத்தேன்.. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆசிரமம் அப்போது தான் என் தோழி சுமிதா குறுக்கிட்டு, ஏய் போகும் போது கொஞ்சம் அந்த ஆசிரமம் பக்கமாக போயிட்டு, அப்படியே அங்க இருக்க விஷ்ணுவை கூட்டிட்டு போகலாம் என்றாள். சரி என்றேன்.. சுமிதா, நல்ல அறிவாளி பெண், சமூக அக்கறை அதிகம்.. உதவி என்று யார் கேட்டாலும் ஓடிச் சென்று செய்வாள்.
நாங்கள் இருவரும் ஆசிரமத்திற்கு சென்றோம். நான் இது போன்ற இடத்திற்கு சென்றது அதுவே முதல்முறையாகும். விஷ்ணு..! அமைதியான இடம்.. சின்னச்சின்ன குழந்தைகள் நிறைய பேர் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..ஒரு அலுவலக அறையினுள் ஒரு வயதான பாட்டி அமர்ந்திருந்தார். அவர் தான் அங்கு இருக்கும் நிர்வாகி.. அவரிடம் துணிகள், உணவுப் பொருட்கள் சிறிது பணம் எல்லாவற்றையும் சுமிதா கொடுத்தாள்.. விஷ்ணு எங்கே.. எதற்காக விஷ்ணு திருச்சிக்கு போகனும்? என்று கேட்டாள் சுமிதா.. அவன் திருச்சியில இருக்க ஒரு நல்ல மனிதர்கிட்ட இந்த ஆசிரமத்திற்காக உதவி கேட்க செல்கிறான்… அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
என்றார்.. நான் விஷ்ணு யார் என்று கேட்டேன்.. அவனுக்கு யாருமே இல்லை! விஷ்ணு சின்ன வயதிலேயே ஆசிரமத்தின் வாயிலில் கிடந்தான்.. அவனுக்கு யாருமே இல்லை.. அந்த சின்னஞ்சிறு வயதிலேயே அவனது அனைத்து வேலைகளையும் அவனே செய்து கொள்வான்.. அவனுக்கு நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.. சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பான்.. இங்க இருக்கவங்களுக்கு எல்லாம் பாடம் சொல்லி தருவான்… இப்போ அவனோட டாக்டர் ஆசையும் நிறைவேறிவிட்டது.. இங்க இருக்க எல்லாருக்கும் அவன் இலவசமா தான் மருத்துவம் பாக்கறான்.
இப்போ அவன் நினைச்சா, பெரிய கார், பங்களானு இருக்க முடியும் ஆனா, பழச எல்லாம் மறக்காம இங்கயே தான் இருக்கான் என்றார்… இப்படி ஒருவரை கண்டதில்லை! இது போன்ற குணங்களோடு சிலர் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் இதுவரை நான் இதுபோல் ஒருவரை கண்டதில்லை.. யார் அந்த விஷ்ணு? எப்படி இருப்பார் என்று காண வேண்டும் என்று தோன்றியது.. விஷ்ணு வந்தான்.. எனக்கு அவரை பாக்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.. அவருடன் பேச வேண்டும் என்று தோன்றியது.. அளவாக ஒரு ஹாய் மட்டும் சொன்னேன்.. நாங்கள் ஊருக்கு போக புறப்பட்டோம்.. வரும் போது என் பங்காக சில ஆயிரங்களை ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டு வந்தேன்.. பாவம் அவன்! விஷ்ணுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆறடி உயரம். மாநிறமாக இருந்தான். அளவான உடல்..
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
எனக்கு அவனுடன் பேசி அவனுடைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.. அவன் பேசமாட்டான் என்று எல்லாம் இல்லை.. அளவாக பேசினான். டாக்டர் போல் எல்லாம் இல்லாமல் சாதாரணமாக தான் இருந்தான். அவனை பற்றி கேள்விப்பட்டது எல்லாம், என் கண் முன்னே ஓடியது.. அவன் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பான் என்று தோன்றியது.. சின்ன வயதில் இருந்து அவனை அரவணைக்க ஆள் இல்லாமல், அன்பிற்காக ஏங்கி போய் இருப்பான் என்று தோன்றியது.. நான் ரொம்ப உருகி விட்டேன். அவனுடன் கழிந்த நேரங்கள்! அவன் என்னை சிரிக்க வைக்கும் படியாகவும், சிந்திக்க வைக்கும்படியாகவும் பேசினான். நாங்கள் இருவரும் காரில் வரும் போது மெல்லிய இசைகளை ஒன்றாக சேர்ந்து இரசித்தோம்.. ஒரே பாட்டிலில் தண்ணீர் குடித்தோம்..
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஒன்றாக சாப்பிட்டோம்.. எனக்கு அவனை அதிகமாக பிடித்து இருந்ததா என்று தெரியவில்லை.. ஆனால் அவனுடன் இருந்த நேரங்கள் மிகவும் அழகானதாக இருந்தது.. என்னை அறியாமல் நடந்தது! நாங்கள் செல்லும் வழியில் ஒரு பூங்கா இருந்தது.. என் தோழி அதிக தூரம் கார் ஓட்டி களைப்படைந்ததால் அங்கே சென்று விட்டு போகலாம் என்று கூறினாள்.. நாங்களும் சென்றோம்.. அங்கே பலவகையான விலங்குகள், பறவைகள் எல்லாம் இருந்தன.. ஒவ்வொரு மிருகங்களாக பார்த்துக் கொண்டு வரும் போது, நான் யானையை கண்டேன்.. அதை தொட்டுப்பார்க்க ஆசைப் பட்டேன்.. முள் போன்ற தோல் மெதுவாக குத்தியது… தீடிரென அது கத்திவிட்டது.. உடனே நான் பதறிப்போய், விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டேன்..
அந்த நிமிடம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. நிச்சயமாக ஏதோ பயத்தில் தான் கட்டிப்பிடித்தேன்.. ஏய் பயப்படாத..இதுக்கு எல்லாம் பயமா ஒன்னும் இல்ல.. என்றான்.. ஓ.. சாரி..என்று எழுந்து கொண்டேன்.. என்னுடைய கிறுக்குத்தனத்தை கண்டு எனக்கே ஒரே கூச்சமாக இருந்தது.. சாரி.. சாரி.. என்று பலமுறை கூறினேன்.. அவன் ஐயோ பரவயில்ல.. என்றான்.. கைகளை பிடித்தேன்! எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.. என் முகத்தில் என்றுமே காணாத ஒளியை அப்போது தான் கண்டேன்.. மனது மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தது.. உதட்டில் சிரிப்பு அதிகமாக இருந்தது.. காதல் பாடலுடன் எங்களது பயணம் தொடர்ந்தது..
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
எங்களது பேச்சும், சிரிப்பும் தொடர்ந்தது.. என் கண்களில் காதலும் கசிந்தது.. என்னையும் அவனுக்கு பிடித்து விட்டது போல, அது அவனது கண்களில் தெரிந்தது.. மேகங்கள் கறுத்து, மழை வந்த சமயம் அது.. ஒரு மெல்லிய பாடலின் இசையில், அவனின் கைகளை பிடித்துக் கொண்டேன்.. அவன் இதள் ஓரத்தில் சிரிப்பு தெரிந்தது.. என் மீது அவனுக்கும் காதல் உண்டாகியது தெரிந்தது.. அவன் தோள் சாய்ந்து கொண்டேன்… பிரியாவிடை! கொஞ்ச நேரத்தில் அவன் இறங்க வேண்டிய இடமும் வந்தது.. என் தோழி நாளைக்கு இந்த இடத்திற்கு வேலையை முடித்துவிட்டு வந்துவிடு என்றாள்.. சரி என்றான்..! அவன் என்னை விட்டு பிரிய மனம் இல்லாமல் சென்றான்… மீதி பயணம் எல்லாம், நான் அவனை நினைத்துக் கொண்டே பயணித்தேன்…! வீட்டை அடைந்தோம்.. வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்தனர்.. வீடு அழங்கரிப்பட்டு இருந்தது.. இதை எல்லாம் பார்த்த பின்னர் தான் எனக்கு திருமண என்ற நியாபகமே வந்தது… குழப்பமான சூழல்! எனக்கு இரவு எல்லாம் தூக்கமே வரவில்லை.. அவனது முகம் தான் நினைவில் இருந்தது.. நான் நாளை திருமணம் செய்து கொள்ள போகும் நபருடன் இதுவரை அதிகமாக பேசியதும் இல்லை பழகியதும் இல்லை..
பெண் பார்க்க வந்த அன்று பார்த்ததோடு சரி.. நான் உண்மையான காதலை விஷ்ணுவிடம் தான் உணர்ந்தேன்.. அவன் காதல் பார்வையிலேயே என்றும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. அவனை இழந்தால் வாழ்க்கையே கிடையாது என்று நிலையில் இருந்தேன். நாளை திருமணத்தை நிறுத்திவிடலாமா என்ற சிந்தனை..! திருமணம் வேண்டாம்? திருமணமேடை வரை வந்து விட்டேன்.. இதயம் படபடவென துடித்தது.. மனதில் பல எண்ணங்கள், இந்த நிமிடம் துணிந்து திருமணத்தை நிறுத்திவிட்டால், என் வாழ்க்கையில் நான் ஒரு மிகச்சிறந்த காதல் பொக்கிஷத்தை அடைந்து விடுவேன் என்று தோன்றியது.. வீட்டை பற்றியும் நினைக்க வேண்டியிருந்தது.. ஒரு திருமணத்தை பிரச்சனை இன்றி ஏற்பாடு செய்வது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான காரியம் என்று தோன்றியது.. விஷ்ணுவை போல ஒருவனை இழக்க மனமில்லை.. என் மனதில் பல குழப்பங்கள்..
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த காதல் திருமணத்திற்கு ஒருநாள் முன்னால் தான் வருனுமா? இப்போ நான் என்ன செய்ய… என்று மனம் பதறியது.. அவனும் வந்துவிட்டான்! விஷ்ணுவும் திருமணத்திற்கு வந்துவிட்டான்… அவனை பார்க்கவே எனக்கு சங்கடமாக இருந்தது.. எனது திருமணத்தை பற்றி அவனிடம் நான் வாய் திறக்கவே இல்லை.. என் மீது தவறில்லை.. உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை என்று கூற துடித்தேன்.. அவனை ஓடி சென்று கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும்.. அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துடித்தேன்.. எழுந்திரு.. எழுந்திரு என்று மனம் கூறியது.. கால்கள் துடித்தது.. என் அம்மாவை கண்டேன்.. தன் மகளுக்கு திருமணமாக போகிறது என்று சந்தோஷமாக இருந்தார்… நம் ஒருவருடைய சந்தோஷத்திற்காக அனைவரையும் அழுக வைக்க வேண்டுமா என்று தோன்றியது.. நானே சென்று என்னை திருமணம் செய்து கொள் என்றாலும், அவன் இந்த சூழலில் சரி என்று கூற மாட்டான். அவனுக்கு அனைவரையும் காயப்படுத்தும் மனம் கிடையாது… வீட்டில் பார்த்தவரையே திருமணம் செய்து கொண்டேன்….! இதயத்தில் ஒரு இடம் ஒரு அம்மாவை போல இருந்து விஷ்ணுவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தேன்…! ஆனால் நான் அவனுக்கு துரோகம் செய்து விட்டேன்.. அவனிடம் என் பக்கம் உள்ள நியாயத்தை விளக்கவும் இல்லை.. என்னை பற்றி என்ன நினைத்திருப்பான் என்றும் தெரியவில்லை..! இன்று என் கணவரை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்…! ஆனால் என்றும் இதயத்தின் ஒரத்தில் இருக்கிறது அவன் மீதான ஒரு காதல்…! நிச்சயம் பொறாமைப்படுவேன் அவனது மனைவியை பார்த்து…!

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் ஆராவின் லைவ் வீடியோ இதோ
மனிதநேயம் வென்றது
விளம்பர பட வருமானத்தில் 50 லட்சத்தை கல...
பிரபல தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை....
மழை எப்போது வரும் என்று இந்த மரத்திடம்...
88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்த க...
மனைவியை கொடுமை செய்த கணவனுக்கு நீதிபதி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
மக்களை சீரழிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்... ச...
மோசடி செய்த கணவனுக்காக போலீஸாருடன் தகர...
கனடாவில் சிறுமிக்கு மதத்தை காரணமாக்கி ...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 568
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  868
  Shares