அதிகமாக பகிருங்கள்: பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்…. உணவுக்குழாய் பத்திரம்!

இந்தக் காலத்திலோ அமர்ந்த நிலையிலே நீண்ட நேரம் மனதளவில் உழைப்பவர்கள், பீட்சாவை முக்கிய உணவாகச் சாப்பிட்டுவிட்டு, பல நோய்களுக்கு வழியமைக்கின்றனர்.

பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை அடக்குமே? நிச்சயமாக, அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து மலத்தையும் அடக்கும். மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா, நமது மரபுக்கு அந்நிய உணவுதானே!

பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொஞ்சம் புரதச்சத்து கொடுக்கும் சமச்சீரான உணவு அல்ல பீட்சா! அனைத்தையும் அளவுக்கு மீறிக் கொடுக்கும் சமச்சீரற்ற உணவு. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பிரத்யேகச் சுவையூட்டிகள், விரைவாகக் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் ரசாயனங்கள், உப்புகள், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு சேர்க்கப்படும் அசைவத் துண்டுகள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி வெளிவரும் பீட்சாவில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள், பீட்சா தயாரிக்கத் தேவைப்படும் பிளீச் செய்யப்பட்ட மாவு வகைகள்… இவை அனைத்தும் சேர்ந்து நமது உடலுக்குள் நடத்தும் களேபரத்தை உணர நீண்ட நாள்கள் காத்திருக்கவேண்டியதில்லை.

சமீபத்தில் இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பீட்ஸா, பர்கர், பிரபலமான நிறுவனத்தின் பிஸ்கட் போன்றவற்றை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பொட்டாசியம் புரோமெட், பொட்டாசியம் அயோடைட் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களை பல நிறுவனங்கள் பீட்சா, பர்கர், பிஸ்கட் பயன்படுத்தும் மாவுகளில் சேர்க்கின்றன. இந்த வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டவை என்பதால் பல நாடுகள் இதற்கு தடை விதித்திருக்கின்றன. இன்னமும், இந்த வேதிப் பொருட்களால் கண்டிப்பாக புற்றுநோய் வரும் என உலகம் முழுவதும் நடத்தப்படும் எல்லா ஆய்வுகளிலும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் மக்களின் நலன் கருதி பல நாடுகள் தடைபோட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இவற்றுக்கு தடை இல்லை.

இதனால் உடனடியாக இந்த இரண்டு வேதிப்பொருட்களையும் உணவில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு கழகம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது, இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.

இந்த இரண்டு வேதிப்பொருட்கள் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, மைதா தயாரிக்க பயன்படுத்தப்படும் அலெக்சான் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தவல்லது என மருத்துவ அறிஞர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே எப்படி பார்த்தாலும் மைதா ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே இருக்கிறது. நாம் விரும்பி சாப்பிடும் அத்தனை உணவுகளிலும் மைதாவே நிறைந்திருக்கிறது. கேக், ஸ்வீட்ஸ், சமோசா, பீட்சா, பர்கர், பிரட், நூடுல்ஸ், பரோட்டா என இப்படி எங்கெங்கும் மைதா சாம்ராஜ்யம் விரிந்து வருகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக உடற்பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணம் தவறான உணவுப் பழக்கமே என்கிறார்கள் மருத்துவர்கள்.
‘நான் சிகரெட்டே பிடிச்சதில்லை, தண்ணி பழக்கமும் இல்லை. ஆனா எனக்கு எப்படி புற்றுநோய் வந்ததுன்னு தெரியலை’ என பலர் புலம்புவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். புற்றுநோய்க்கு பின்னால் இருக்கும் முக்கியமான வில்லன் மோசமான உணவுகள் தான். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, அதிகம் சந்தைப்படுத்தப்படுகின்ற பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதியை விளைவிக்க கூடியவைதான்.

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் என மேற்கத்திய உணவுகள் மட்டுமல்ல; நம்மூர் பரோட்டாவும் கெடுதிதான். மைதாவில் இருப்பது வெறும் மாவுச்சத்து மட்டும்தான். நாம் அளவுக்கு அதிகமாக மாவுச்சத்தை சாப்பிட ஆரம்பிக்கும்போது, அது நமது உடலில் கொழுப்பாக மாறி சேகரித்து வைக்கப்படும். அடிக்கடி இந்த மோசமான மாவுச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது உடல்பருமன் எளிதில் வந்துவிடும். உடல் பருமன் வந்துவிட்டால் அழையா விருந்தாளியாக ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் பின்னாலேயே வரிசை கட்டி வந்து நிற்கும். நீண்ட நாள் உடல்பருமன் பிரச்னை இருந்தால் மெல்ல மெல்ல புற்று செல்கள் வளர ஆரம்பித்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகமாக்கும். நாம் அன்றாடம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமது வாழ்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றன. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

‘இந்திய உணவு பாதுகாப்புக் கழகம்’ பரிந்துரைக்கும் உணவுகளைத்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதே கழகம் பின்னொரு நாளில் இந்த உணவு கெடுதி என்கிறது. பிறகு மீண்டும் அதே நிறுவனத்தின் உணவை சந்தைப்படுத்த மீண்டும் அனுமதி கொடுக்கிறது. உணவுச் சந்தை மிக மிகப் பெரியது. உணவு சந்தைகளின் லாபத்துக்கு பலியாவது அப்பாவி பொது மக்கள்தான்.

அமெரிக்காவில் இருக்கும் எப்.டி.ஐ அவ்வப்போது பெரும் நிறுவனங்களாக இருந்தாலும் உணவு கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான அபராதம், தண்டனைகளை விதிக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலை தலைகீழ். அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பல பொருட்கள் இங்கே சந்தையில் சக்கைப் போடு போடுகின்றன. அதற்கு எளிய உதாரணம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகள்.

குறிப்பாக தமிழகம் மற்றும் சென்னையில் உணவு பாதுகாப்பு மையங்களின் செயல்பாடும் மிக மோசம். சந்தையில் இருக்கும் பல உணவுகள் கெடுதி விளைவிப்பவை என்பது மக்களுக்கு தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் மக்கள் ஏன் அதே உணவை நாடுவதற்கு அதன் சுவைதான் காரணம். மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும், சுண்டியிழுக்கும் சுவைக்கு பின்னால் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. சுவைக்காக சேர்க்கப்படும் பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்றவை உயிருக்கே உலை வைப்பவை. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மது, சிகரெட் போலவே இது போன்ற சுவைகளுக்கும் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். மதுவும், சிகரெட்டும் ஒழுக்கம் சார்ந்த பிரச்னையாக நம் சமூகத்தில் கருதப்படுவதால் நோய்களுக்கு பலர் அதை மட்டும் சுட்டிக்காட்டுகிறார்கள். சிகரெட் பழக்கமும், புகைப்பழக்கமும் இல்லாதவர்களுக்கும் பல நோய்கள் வருவதற்கு என்ன காரணம் என யாரும் எண்ணி பார்ப்பதில்லை.

பாலியல் வன்முறை என்றால் என்ன? விளக்கமு...
இரவில் நிர்வாணமாக தூங்குவது நல்லதா? கெ...
பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள் பற்ற...
அதிகமாக பகிருங்கள் . தொப்புள் கொடியின்...
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாய் செலவில் ப...
உங்களை உற்சாகமூட்டும் உடலுறவு பற்றிய அ...
கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்க...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
அதிகமாக பகிருங்கள்: காய்ச்சல், இருமல்,...
அதிகமாக பகிருங்கள் பயன்பெறுங்கள்: இரத்...
அதிகமாக பகிருங்கள்: இரவில் அடிக்கடி இந...