எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்ய – வின் இன்றை நிலமை …! சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 672
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  972
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? ஒருகாலத்தில் எதிரணிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, இன்றைக்கு ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
48 வயதாகும் ஜெயசூர்யா, கடந்த சில நாட்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு விரைவில், மெல்போர்னில் அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் ஊன்றுகோல் வைத்து நடப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டரும் கேப்டனுமான ஜெயசூர்யா, ஆல்-டைம் ஒருநாள் வீரர்களில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். ஒருநாள் போட்டியில் 12,000 ரன் மற்றும் 300 விக்கெட் எடுத்த ஒரே வீரர் ஜெயசூர்யா. 1996ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் மிகவும் மதிப்புடைய வீரர் என்று பெயரிடப்பட்டவர்.
2011ம் ஆண்டு 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜெயசூர்யா, 2007ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். 110 டெஸ்ட் ஆட்டங்களில் 6973 ரன், 98 விக்கெட்; 445 ஒருநாள் ஆட்டங்களில் 13430 ரன் 323 விக்கெட்; 265 முதல்தர போட்டிகளில் 14819 ரன், 205 விக்கெட்களை எடுத்துள்ளார்
1996ம் ஆண்டு உலக அளவில் விஸ்டன் லீடிங் கிரிக்கெட் வீரர், 1997ல் விஸ்டன் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ஜெயசூர்யா போற்றப்பட்டார். 1999-2003 வரையிலான காலகட்டங்களில் 38 டெஸ்ட் மற்றும் 117 ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 2003ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணி தோல்வி அடைந்த பிறகு, தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகினார்.
ஓய்வுக்கு பிறகு, தேர்வாளர்கள் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் ஜெயசூர்யா. அவரது குழு தேர்வில், இலங்கை அணி, 2014 ஐசிசி உலக டி20 போட்டி, ஆசிய கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றது. 2015 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, ஜெயசூர்யா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் தலைவர் பொறுப்பில், அரவிந்தா டி சில்வா நியமிக்கப்பட்டார். அதன் பின், 2016ல் ஜெயசூர்யா மீண்டும் தலைவர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில், 2017ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு, மீண்டும் தலைவர் பதவியை ஜெயசூர்யா ராஜினாமா செய்தார்.
2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகமான ஜெயசூர்யா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2010ம் ஆண்டு அவர் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடி இருந்தார். ஐபிஎல்-ல் அவர் சதமும் அடித்துள்ளார்.
1998ம் ஆண்டு விமான பணிப்பெண் சுமுடு என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்த ஜெயசூர்யா, 2000ல் விமான சேவையாளர் சாண்ட்ரா டி சில்வாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2012ம் ஆண்டு சாண்ட்ராவை ஜெயசூர்யா விவாகரத்து செய்தார்.
ஐ.நா. நல்லெண்ண தூதராக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ஆவார். 2010ல் அரசியலில் நுழைந்தார் ஜெயசூர்யா. 2013ம் ஆண்டு தபால் சேவைகளின் துணை அமைச்சர் ஆனார். 2012ல் இந்தியன் பிரபலங்களின் டான்ஸ் ஷோவான ஜலக் திக்ளா ஜாவில் பங்கேற்றார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
BIGG BOSS FINAL LIVE - Part 1
பிக் பாஸ் பார்வையாளருக்கு ஒரு வேண்டுகோ...
அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும...
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
அதிகமாக பகிருங்கள் பால் பிரியர்களுக்கு...
88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி ஆசிரியர் க...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
பெண்ணை இழுத்துச் சென்று ஆடைகளை கிழித்த...
முகபுத்தகத்தில் கல்லூரி இளைஞனுக்கு கா...
வெறும் தரையில் உறங்குபவரா நீங்கள்..? இ...
கருட புராணம் கூறும் நரக தண்டனைகள் ..! ...
14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 672
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  972
  Shares