பெண்களே நீங்களும் குண்டா! கவலையை விடுங்கள், ஆண்கள் பார்வை உங்கள் பக்கம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 34.3K
  •  
  •  
  •  
  • 126
  •  
  •  
  •  
  •  
  •  
    34.4K
    Shares

ஆண்கள் மிகவும் ஒல்லியான, அல்லது குண்டான பெண்களை விட அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் அதிகம் விரும்புகின்றனர். ஒல்லியான பெண்களை இரசிப்பது போல தெரிந்தாலும், வாழ்க்கை என்று வரும் போது ஆரோக்கியமாக, அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்களாம்.திரைப்படங்களில் வரும் ஒல்லியான பெண்களை விரும்பி பார்க்கும் ஆண்கள், உறவுகொள்ள சற்று அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் விருப்புகிறார்களாம்.ஆம் ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்களை தான் விரும்புகின்றனர். ஆனால் சில பேஷன் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் எலும்பு தெரிவது போன்று ஒல்லியாக இருப்பது தான் அழகு என நம்மை நம்ப வைக்க முயலுகின்றன. சமீபத்திய ஆய்வானது, ஆண்கள் அளவான உடலமைப்பு மற்றும் வளைவு நெழிவு கொண்ட பெண்களுக்காக போட்டி போட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது ஆண்கள் ஏன் சற்று உடம்பான பெண்களை விரும்புகிறார்கள் தெரியுமா?மற்றுமொரு ஆய்வு, சற்று சதைப்பிடிப்பு உள்ள ஆரோக்கியமான சுறுசுறுப்பான பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளது.         20 முதல் 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட அனைத்து ஆய்வுகளிலும், 10 இல் 8 ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்ணைகளையே விரும்புவதாகவும் மிகவும் ஒல்லியான பெண்களை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் வெளிப்படையாக, சற்று குண்டாக இருக்கும் பெண்களை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.மற்றுமொரு கோட்பாடு, அளவான உடல்வாகு தான் இனப்பெருக்கத்திற்கு சிறந்தது என்ற கருத்தை கொண்டுள்ளனர்.அளவான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பெண்களை ஆண்கள் தங்களது மூளையில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.அளவான உடலமைப்பு கொண்ட பெண்கள் போலியாக காட்சியளிப்பதில்லை. அதிகமான ஆண்களின் விரும்பம் அளவான உடலமைப்பு கொண்ட பெண்களுடன் வாழ்வதாக உள்ளது. ஆனால் பெண்கள் அனைவருமே அழகு தான். ஆனால் ஆய்வின் முடிவுகள் எதுவும் ஒல்லியான பெண்களுக்கு பாதகமாகவும் இல்லை. எனவே உடலை குறைக்க அதிக டயட்கள் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை கொடுத்துக்கொள்ளாமல், இயற்கையான அழகுடன் ஜொலிப்பது சிறந்தது.

பெண்களின் உடல் பருமனுக்கு காரணமான கொலஸ்ட்ரால் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொலஸ்ட்ரால் காரணமாகத் தான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.பெண்களின் உடல் பருமனுக்கு காரணமான கொலஸ்ட்ரால்
பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொலஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமன் அடைவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4¾ கலோரியை மட்டுமே தரும்). கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty Acids) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது.இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச்சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப்பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.விட்டமின்கள் A, D, E- K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.விட்டமின்கள் A, D, E- K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.குடலில் விற்றமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப்படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும்.ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.துரித உணவு (Fast Food), வாரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

 

 

இதையும் படிக்கலாமே
பெண் குழந்தையின் அன்பு
உங்கள் மனைவியிடம் கேட்க கூடாத அதிர்ச்ச...
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள...
மெல்பேணில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்
மலசல கூடம் கட்டுகின்ற முறையை திருடி செ...
அமலா பால் இந்த விளம்பரம் உனக்கு தேவையா...
ஆபாச பதிவு அல்ல: முதலிரவு அறையில் மெழு...
பெற்ற குழந்தையை சட்டியில் வைத்து வறுத்...
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது பி...
இளமை தோற்றத்துடன் வலம் வரும் தல "...
இலங்கையில் பெண்களும் இனி மது அருந்தலாம...
கமல் - விக்ரம் புதிய கூட்டணி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 34.3K
  •  
  •  
  •  
  • 126
  •  
  •  
  •  
  •  
  •  
    34.4K
    Shares