கனடாவில் சிறுமிக்கு மதத்தை காரணமாக்கி மர்ம நபரின் இழிவான செயல் ..! அதிர்ச்சியில் பிரதமர் உட்பட கனடா மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 423
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    723
    Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
கனடாவில் சிறுமியின் மீது மதரீதியான தாக்குதல்: பிரதமர் அதிர்ச்சி”
கனடாவில் இஸ்லாமிய மாணவி ஒருவரின் ஹிஜாப்பை மர்ம நபர் ஒருவர் வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Toronto நகரை சேர்ந்த மாணவி Khawlah Noman, தனது தம்பியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.பாதை மாறும் இடத்தில் யார் என்று தெரியாத மர்ம நபர் இருவர் சிறுமியை இழுத்து சிறுமி அணிந்திருந்த ஹிஜாப்பை வெட்டி எரிந்துள்ளார் .
தகவலறிந்து கூடிய உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் தாயிடம் சிறுமியை ஒப்படைத்தனர். குற்றவாளி தப்பிய நிலையில் தேடும் பணியில் பொலீஸார் ஈடுபட்டுள்ளனர் ..! செய்தியாளர்களிடம் பேசிய Khawlah, தான் மிகவும் பயந்து போனதாகவும் குழப்பமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் ஒருவர், உங்களைத் தாக்கிய நபருக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு “நீங்கள் செய்வது மிகவும் தவறு, நீங்கள் இப்படிச் செய்யக்கூடாது, நான் ஒரு குழந்தை அல்லவா” என்று அவள் பதிலளித்தது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் Justin Trudeau, மதத்தின் காரணமாக தாக்கப்பட்ட அந்த சிறுமியை எண்ணி தனது இதயம் கலங்குவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததோடு, கனடா நாடு இப்படிப்பட்டதுதான் என்று நீங்கள் தவறாக எண்ணி விடக்கூடாது என்று கூறினார்.
இதை ஒரு வெறுப்புக் குற்றமாகப் பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளியை அடையாளம் காண பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர். எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?

தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.

மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.

கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
ஓவியா வை காண ஒரு வாய்ப்பு !!
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
பரபப்பூட்டும் பேஸ்புக் பயனர்களுக்கான ர...
மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று தி...
கணவனுக்காக மனைவி இத்தனை விடயங்களை விட்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சவுதி கணவனுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க காத...
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
இரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் ...
வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூ...
இதை உண்ணும் குழந்தைகளுக்கு உயிர் ஆபத்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 423
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    723
    Shares