ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணதிற்கு சுற்றுலா வந்த நபர் திடீர் மரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  730
  Shares

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம் !
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்காக சென்ற பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த 63 வயதுடைய எகேன் செபினே ( Ecken Sebienne ) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 07 ம் திகதி அவர் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வெறு இடங்களை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார் .
இந்த நிலையில் , திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணை அறிக்கையில் தெரிய
வந்துள்ளது .
இந்தநிலையில் உயிரிழந்த குறித்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 430
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  730
  Shares