இன்றைய நாளும் இன்றைய பலனும் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 521
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    821
    Shares

இன்றைய  பஞ்சாங்கம்
15-01-2018, தை 02, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.11 வரை பின்பு அமாவாசை. மூலம்நட்சத்திரம் மாலை 04.19 வரை பின்புபூராடம். சித்தயோகம் மாலை 04.19 வரைபின்பு மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடுநல்லது. மாட்டுப் பொங்கல். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
“இன்றைய ராசி பலன்”
மேஷம்:
மகிழ்ச்சியான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும், சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கு இடை யில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்:
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படு கிறது. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்:
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.
கடகம் :
தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
கன்னி:
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். உறவினர் கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
தனுசு:
அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய அன்பும் ஆசிகளும் பெறுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரக்கூடும்.
மகரம்:
உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருந்தாலும் செலவுகளும் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்:
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு உண்டு.
மீனம்:
மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்
இதையும் படிக்கலாமே.

இதையும் படிக்கலாமே
குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்...
ஒவியாவுடன் நடிக்க ஒகே சொன்ன ஆரவ் ! அடு...
மத்திய கிழக்கில் கை நிறையச் சம்பளத்துட...
19 இலங்கை இளைஞர்கள் அதிரடியாக வெளிநாட்...
பட்ட பகலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்...
தாயகத்திற்கு நாடு கடத்தப்படும் அபாயத்த...
இறந்தவர்கள் வந்து அழைப்பது போன்று கனவு...
பூட்டிய வீட்டிலிருந்து 2 நாட்களாக கதறி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு என்...
மீன் பிரியர்களுக்கு பிரியமான செய்தி..!...
அட கடவுளே அழகியாக இருந்த ரீமா சென் ஆஹ்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 521
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    821
    Shares