உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வயது மாணவி கொடூரமாக கற்பழித்து கொலை..! நிரூபயா வை தொடர்ந்து இன்னுமொரு மிருக செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 752
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.1K
    Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்…!
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிரூபயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளி மகள் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த தொழிலாளிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் மூத்தவர் தான் இந்த மாணவி. 15 வயது நிரம்பிய அவர் திடீரென 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவர் அந்த ஊரைச்சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. எனவே அவர் மீது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தையல் தொழிலாளி போலீசில் புகார் கொடுத்தார். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் அந்த மாணவி பிணமாக மிதந்தார்.இதுபற்றி அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும், ஒரு கும்பலால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்த மாணவியை கற்பழித்து கொன்றது மட்டுமல்லாமல் மிக கொடூரமாகவும் நடத்தியிருந்தனர். அவரது உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தப்பட்ட நிலையில் இருந்தது. நுரையீரல் பகுதி முற்றிலும் சிதைந்து இருந்தது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்டோர் அவரை கற்பழித்து கொடூரமாக கொன்றது தெரியவந்தது. அவரை அழைத்து சென்ற வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவருக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. அந்த வாலிபர் மாணவியுடன் சென்றபோது மர்ம கும்பல்கள் மாணவியை மட்டும் இழுத்துச்சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி உடலை பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
-நன்றி: maalaimalar
இந்த செய்தியும் உங்களுக்காக

பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே .

இதையும் படிக்கலாமே
நயன்தாராவுடன் நடித்து கொண்டிருக்கும் ஜ...
Oviya Helan's New Gorgeous Photoshoot
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
தியேட்டரில் அலறிய ரசிகர்கள் : லைட்டை ப...
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
கொடூரம் - 12 வயதில் கடத்தப்பட்டு திரும...
அத்துமீறி நடந்துகொண்ட விஜய்.! அசிங்க...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
அஜித் படங்களில் நடிக்க மாட்டேன் ..! நட...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...
ஓடும் இரயில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...
சக்கரை நோயில் இருந்து தப்பிக்க இதை மட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 752
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.1K
    Shares