ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் விஜய் சேதுபதி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 34.5K
 •  
 •  
 •  
 • 321
 •  
 •  
 •  
 •  
 •  
  34.8K
  Shares

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைக்க இருக்கிறார். விஜய் சேதுபதி தற்போது பல படங்கள் பிசியாக நடித்து வருகிறார். இதில் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இதில் அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.படத்தை பற்றி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “எல்லா வகைகளிலும் சீதக்காதி புதுமையான, வித்தியாசமான ஒரு படம். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.தனித்துவமான கதை, கதாபாத்திரங்களை எடுத்து செய்யும் விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுக்கே இது வித்தியாசமான கதாபாத்திரம் தான். விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். அதை வெளியிட விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16ஐ விட சிறப்பான நாள் வேறென்ன இருக்க முடியும்.

டைமிங் இல்லனா கவுண்டமணிக்கு பிடிக்காது – மனம் திறந்து பேசிய செந்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில் கவுண்டமணியின் டைமிங் குறித்து மனம் திறந்து பேசினார்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமைய்யா, சரண்யா பொன்வண்ணன், ஆர்.ஜே.பாலாஜி, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.நீண்ட இடைவேளைக்கு பிறகு, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,இந்த பொங்கல் பண்டிகை இனிப்புடன் இனிதே ஆரம்பமாகட்டும் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் வந்ததில் மகிழ்ச்சி. இந்த இளைஞர் பட்டாளத்தில் நானும் ஒருவனாக நடித்ததில் நானும் இளமையாகவே உணர்ந்தேன்.வைதேகி காத்திருந்தால் படத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என்று காமெடி இடம்பெற்றிருக்கும். அதே போல தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் ஒரு காட்சியில் அதை ஞாபகப்படுத்தும்படியான ஒரு காமெடி இடம்பெற்றிருக்கிறது. கண்டிப்பாக அதை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். அந்த காலத்து காமெடிக்கும் இந்த காலத்து காமெடிக்கும் நிறைய மாறுபாடு இருக்கிறது.தற்போது இணையத்தில் மீம்ஸ் நிறைய வருகிறது. அதில் நாங்கள் நடித்த படத்தின் காமெடியை வைத்த அரசியல்வாதிகளை பயங்கரமாக கலாய்த்து கலக்குகின்றனர். தப்பு செய்பவர்களை கேள்வி கேட்கும்படியான அந்த மீம்ஸ்களை பார்த்து ரசித்தேன். கவுண்டமணி நல்ல டைமிங் கலைஞர். சரியான டைமிங்கில் வசனம் பேசாவிட்டால் ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருடன் நடிக்கும் போது, சரியாக கவனமில்லை என்றால் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருடன் சேர்ந்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார்.

இதையும் படிக்கலாமே
பூகம்பம், எரிமலை, சுனாமி ஏன் தோன்றுகின...
இலங்கையில் பெண்களும் இனி மது அருந்தலாம...
யாழ்.நகரில் வலம் வந்த புலிகளால் பெரும்...
ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு கட்ச...
வவுனியா,யாழ்,மன்னார்,கிளிநொச்சி,தேர்தல...
மாமிச துண்டுகளாக விற்கப் பட இருந்த நடி...
கூகுள் லில் நீங்களும் சம்பாதிக்கலாம்....
பிக் பாஸ் ஜூலிக்கு அறிவிக்கப்பட்ட விரு...
டி,ஆர்,பி,க்காக ரமணி அம்மாவை வைத்து பி...
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...
காதல் திருமணம் செய்து சென்ற பெண் மரணம...
நண்பனின் விந்தாணுவை குடிக்கும் பெண்.. ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 34.5K
 •  
 •  
 •  
 • 321
 •  
 •  
 •  
 •  
 •  
  34.8K
  Shares