500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகளை கொடுத்து அசத்தும் தமிழர்..! எங்கு தெரியுமா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.8K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  3.3K
  Shares

500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகள்! அலைமோதும் கூட்டம்.. எங்கே தெரியுமா??
ஈரோட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து 79 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சீனாபுறத்தில் உள்ள யூபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு உணவகம் பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருக்கின்றீர்களா. இங்கு ஒரு முறை சென்று வாருங்கள் இது ஹோட்டல் சாப்பாடா இல்லை வீட்டுச் சாப்பாடா என்ற அளவிற்கு உங்களை 20 வகையான உணவு வகைகளுடன் விருந்தோம்பள் அளித்து மிரள வைத்துவிடுவார்கள். யூபிஎம் உணவகத்தைப் பொருத்த வரை அசைவ உணவு தான் சிறப்பு. அதற்காக அசைவு பிரியர்கள் மட்டும் தான் இங்குச் செல்ல வேண்டும் என்பது இல்லை. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட அளவு சாப்பாடு தினமும் தயார் செய்யப்படுகின்றது.யூபிஎம் உணவகத்தைத் தேடி வருவோரில் 99 சதவீதம் சென்னை, பெங்களுர் போன்ற நகரங்களில் இருந்து வெகுதூரம் பயணித்து வருபவர்கள் அதிகம்.
ஒரே நேரத்தில் 50 நபர்கள் இங்கு அமர்ந்துகொண்டு உணவு உன்னக்கூடிய அளவிற்கான கூறைப் போட்ட இடம் தான் இருக்கும். உணவகத்தில் தொழிலாளர்கள் என்றால் உரிமையாளர் கருணைவேல்(61) மற்றும் ஸ்வர்னலக்‌ஷ்மி (53) இருவர் மட்டுமே. வார நாட்களில் 50 நபர்கள் வரையும், வார இறுதி நாட்களில் 150 நபர்கள் வரையும் இங்குச் சாப்பிட வருகின்றார்கள். அசைவ சாப்பாட்டில் ஆட்டுக்கறி குழம்பு, ரத்தப் பொரியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல் கறி, பிராய்லர் கோழி கறி, நாட்டுக் கோழிக் கறி, மீன் குழம்பு, சாதம், ரசம், தயிர் போன்ற வகைகள் இருக்கும்.
திருமண விழாக்களில் உணவு பரிமாறப்படுவது போல 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவைச் சாப்பிடும் போது கலகலப்பாகவும் விருந்து நடக்கின்றது. அது மட்டும் இல்லாமல் 20 பேர் தங்களது வீட்டிற்குள் அமர்ந்து உணவு சாப்பிடவும் அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்காகச் சிறப்பு சிக்கன் குழம்பில் பருப்பு போன்றவற்றுடன் காரம் குறைவாகவும் உணவு தயாற் செய்கிறார்கள். யூபிஎம் உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்றால் 11 மணிக்குள் இவரைத் தொலைப்பேசி மூலம் தொடர்புக்கொன்று புக் செய்துகொள்ள வேண்டும். உங்கள் ஆர்டரை எடுத்துக்கொண்ட கருணைவேலும் அவரது மனைவி ஸ்வர்னலக்‌ஷ்மி அவரகளே சுத்தமாகச் சமைத்து உணவுகளை 12:30 மணிக்குள் தயார் செய்துவிடுவர்.
நாம் 12:30 மணி முதல் 3 மணி வரை எப்போது வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். இந்த நேரத்தில் கார்கள் இங்கு வந்து குவிந்துவிடும். இதில் சுவாரஸ்யமான உன்மை என்ன என்றால் கருணைவேலும் அவரது மனைவி ஸ்வர்னலக்‌ஷ்மியும் சைவம் மட்டுமே சாப்பிடுவார்கள். இது பற்றி இருவரிடமும் கேட்டால் நான் சுத்தமான சைவம் உணவுகளை மாட்டுமே சாப்பிடுவேன் என்றும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வதாகவும் அதுவும் காலை 5 மணிக்குத் தனது பேத்தி பரிமாற தான் சாப்பிடுவேன் என்கிறார் கருணைவேல். எனது மனைவி அசைவ சாப்பாட்டை உண்பது நிறுத்திவிட்டு 8 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் இப்போது தங்களது அனுபவத்தை வைத்து மட்டுமே சமைத்து வருவதாகவும் கூறுகின்றார்.
எங்களது குடும்பம் கிராமத்தில் விருந்தோம்பலுக்குப் பேர் பெற்ற குடும்பம். எங்களது தாத்தா பாட்டி இருவரும் வீட்டிற்கு வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்று சொல்வார்கள். எங்கள் குடும்பம் வசதியாக இல்லை, என்னால் இலவசமாகவும் உணவை அளிக்க முடியாது, அசைவ உணவுப் பொருட்கள் விலையும் அதிகம். சிறு வயது முதலே நல்ல சுவையான உணவை விரும்பி உண்பவன் நான். 1992-ம் ஆண்டு கருணைவேல் தங்களது கிரமத்தில் உள்ள ஆலை ஒன்றில் கேண்டின் துவங்கினார். 6 வருடங்களுக்குப் பிறகு உணவகத்தைத் தனது வீட்டிற்கே மாற்றினார். முதலில் முக்கிய சாலையில் எங்களது உணவகம் இருக்கும் போது அரசு அதிகாரிகள் பலர் உன்ன வருவார்கள் அவர்கள் எங்களிடம் வியாபாரம் எப்படி என்று கேட்கும் பொது நன்றாக நடக்கின்றது நிறையப் பேர் வருகின்றனர் என்று கூறுவோம்.சுவை மற்றும் நம்பக தன்மையில் ஒருபோதும் நான் சமரசம் ஆக மாட்டேன். எனவே உணவைச் சமைக்கும் போது எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருப்பேன்.
இப்போது வீட்டிலேயே உணவகத்தை நடத்துவதால் எனது மனைவி சமைப்பார், எவ்வளவு மசாலா போட வேண்டும், சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் கவனமாக இருப்போம். கறி, மீன், காய்கறி போன்றவற்றை வாங்கும் போது நான் கவனமாக பார்த்து வாங்கி வருவேன் என்றும், எனது மனைவிக்கு மசாலா எப்படி தயார் செய்ய வேண்டும் என்று ஆலோசனையும் வழங்குவேன் என்கிறார் கருணைவேல்.எங்களுடைய ஒரே குறிக்கோள் உணவு உண்ண வரும் குடும்பங்களுக்கு வீட்டுச் சாப்பாடு போன்ற எண்ணம் மாட்டுமே வர வேண்டும், குடும்பமாக உண்ணும் போது பெரிய இலையும், தனியாகவும், நண்பர்களாக வருபவர்களுக்குத் தனி தனியாகச் சிறிய இலைகளிலும் உணவு அளிப்போம் என்றும் கருனைவேல் கூறுகின்றார். இங்கு நாங்கள் இந்த உணவகத்தை நடத்த முக்கிய காரணம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, இதை ஒரு சேவையாகவே செய்ய விரும்புகின்றோம் என்கிறார் கருணைவேல்.யூபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு உணவகத்தில் வந்து சாப்பிடுபவர்களிடம் எவ்வளவு என்று விலையை இருவரும் கூறுவதில்லை. ஆனால் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை உணவு கட்டணம் பெற்றுக்கொள்கின்றனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
T. Rajendar Comedy & The Most ...
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
118 நாட்டு அழகிகளுடன் போட்டியிட்டு உலக...
அதிகமாக பகிருங்கள்: ஜீயோவிற்கு எதிராக ...
தமிழில் நடிக்க பயப்படும் பிரபல நடிகை!
என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் ...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
உடலுறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா ...
பிரபல நடிகை சரண்யாவின் கணவர் யார் என்ற...
கொடூரத்தின் உச்சகட்டம்....! 8 மாத குழந...
வரதட்சணைப் பணம் 2 லட்சம் ரூபாவிற்காக ச...
தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.8K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  3.3K
  Shares