இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

“இன்றைய  பஞ்சாங்கம்”
19-01-2018, தை 06, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 12.22 வரை பின்புவளர்பிறை திரிதியை. அவிட்டம்நட்சத்திரம் பின்இரவு 03.28 வரை பின்புசதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. அம்மன் வழிபாடுநல்லது. சுபமுகூர்த்த நாள். சகலசுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எமகண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன்காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
1/19/2018
இன்றைய ராசிபலன்
“மேஷம்”
மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியா
பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 
“ரிஷபம்”
ரிஷபம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப்  பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 
“மிதுனம்”
மிதுனம்: மதியம் 1.27 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும்.  சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில்  எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்
“கடகம்”
கடகம்:  குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 1.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.  
“சிம்மம்”
சிம்மம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில  சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.  
“கன்னி”
கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.  கனவு நனவாகும் நாள்.
“துலாம்”
துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில்  மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
“விருச்சிகம்”
விருச்சிகம்: குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
“தனுசு”
தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
“மகரம்”
மகரம்: மதியம் 1.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். கணவன் -மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து  நீங்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது  நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
“கும்பம்”
கும்பம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும்.  வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 1.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம்  தேவைப்படும் நாள். 
“மீனம்”
மீனம்: பெரியோரின் ஆசி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜா இவ்வளவு கேவலமானவரா?
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
இலங்கை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்ப...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்...!
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
இதை செய்யாவிட்டால் நடிகை அமலா பாலுக்கு...
என்னை எரிச்சல் பட வைப்பது ஜூலி தான் .....
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
காதலர் தினத்தில் இலங்கையில் பூத்துக் க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares