14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக் கொன்ற தாய்..! அதிரவைக்கும் காரணம் ..!

14 வயது மகனை எரித்துக் கொன்ற தாயார்: அதிரவைக்கும் காரணம்
இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாயாரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்டாரா பகுதியை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் கடந்த 14-ம் திகதி திடீரென்று காணாமல் போனான்.இதுதொடர்பாக, அவனது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடைக்கு சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி மாயமான சிறுவன் தொடர்பில் சமூக வலைதளத்திலும் தகவல் பகிரப்பட்டு அதுவும் வைரலானது.இந்த நிலையில் மாயமான சிறுவனின் விட்டுக்கு அருகாமையில் எரிந்த நிலையில் காணப்பட்ட அவனது செருப்பும், தாயார் ஜெயாமோளின் கையில் தீக்காயமும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தமது மகனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதையும், பிணத்தை எரித்து மறைவு செய்ததையும் பொலிசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமது கணவரின் வீட்டாருடன் சிறுவன் ஜித்து நெருக்கமாக இருந்துள்ளதாகவும், இதனால் பல முறை தமது மகனை கண்டித்ததாகவும்,சம்பவத்தன்றும் தமது கணவரின் உறவினர்கள் வீட்டில் செல்ல முயன்றதாகவும், இதில் ஆத்திரம் அடைந்த தாம் தமது மகனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்து மறைவு செய்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஓவியாவுக்கு அடித்த யோகம்..... வீடியோ இ...
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
அட்லீயை கேவலமாக விமர்சித்து தயாரிப்பாள...
இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இளம் பெண்க...
எச்சரிக்கை:வலிக்கு அன்றாடம் நாம் சாப்ப...
இதுவரை நயன்தாராவை இப்படி பார்த்து இருக...
அதிகமாக பகிருங்கள்:மன அழுத்தை குறைக்க ...
வைத்தியசாலையில் பிரபல நடிகையின் செயல்....
இதை செய்யாவிட்டால் நடிகை அமலா பாலுக்கு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஐ பி எல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும்...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...