லண்டனில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இலங்கையர்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

லண்டனில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இலங்கையர்
லண்டனில் ஓடும் ரயிலில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரியிடமே குறித்த இலங்கையர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தான் தியானத்தில் இருந்ததாக குறித்த இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குலண்டனில் உள்ள Enfield மற்றும் Stratford இடையேயான பரபரப்பான ரயில் ஒன்றில், 33 வயதான உப்புல் கத்துலந்த என்ற இலங்கையர், பெண் ஒருவரின்பின்னால் நின்று அவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது, ரயில் பயணித்துகொண்டிருக்கும் போது குறித்த நபர் முதலில்தனது கையை பிடித்ததாக, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த உப்புல், நான் அவ்வாறான எண்ணங்களை கொண்டதில்லை. நான் பௌத்தத்தை எப்போதும் தியானிக்கும் ஒருவராகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கு குறித்த இலங்கையர் மூன்று நாட்களாக முயற்சிகளைமேற்கொண்டுள்ளார்.குறித்த இலங்கையர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார் என அவர் தரப்பில் ஆஜராகிய சட்டதரணி Brian Reece தெரிவித்துள்ளார்.
அது வேண்டும் என்றே நடந்த ஒன்றல்ல, அது ஒரு விபத்து எனவும், அதனை அந்த பெண் பாலியல் ரீதியாக சிந்தித்துள்ளார் எனவும், சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ரயிலில் பயணித்தமற்றுமொரு நபர் இந்த பெண்ணிற்கு உதவியுள்ளார் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் எனது தந்தைகுறித்து மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறான நிலையில் எனக்கு இப்படி ஒரு சிந்தனை எவ்வாறு வரும். அன்று ரயிலில் மிகவும் கூட்டமாக காணப்பட்டது. மக்கள் நெருக்கமாக இருந்தனர். நானும் சிரமத்துடனே பயணித்தேன். எனது கை மற்றவர்கள் மீது படாதவாறு தான் பார்த்துக்கொண்டேன்என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த முறைப்பாட்டாளர் “நீங்கள் என்னை முறையாக பயணிக்க விடவில்லை” என சத்தமாக கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கையர் வடக்கு Middlesex வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உதவும் பணியும்வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் 2011ஆம் ஆண்டு கிறீம் போன்ற பொருட்கள்விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியில் சேர்ந்து தற்போது வரை பணி செய்து வருகின்றார்.
Enfield, பகுதியில் விகாரை ஒன்றை நடத்தி செல்லும் Thabassee Panamare என்ற பிக்கு, “எனக்கு 10 வருடங்களாக உப்புலை தெரியும். அவர் தினமும்விகாரைக்கு வருவார். அவர் தியானம் செய்வார். அவர் ஒரு தனி மனிதன் அத்துடன் எனக்கும் நிறைய உதவிகள் செய்வார். இவ்வாறான நிலையில் அவருக்குஎதிராக குற்றச்சாட்டுகளை நம்ப கடினமாக உள்ளது” என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த குற்றசாட்டிலிருந்து உப்புல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்: ப...
முதலிரவு அறையில் பிளேடால் மனைவியை வெட்...
வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்ற...
ஆண் என கூறி மூன்று பெண்களை திருமணம் செ...
காதலுக்காக நயன்தாராவின் தியாகம் ..! வ...
என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி...
காதலில் விழுந்த பிக் பாஸ் ஜோடி ..! டு...
பந்து வீச ஓடி வரும் போது மயக்கம் போட்ட...
நள்ளிரவில் நடிகர் அஜித்-தை அழ வைத்த மன...
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடித்த ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares