பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உடனடி நடவடிக்கை!!!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 19.9K
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  20.2K
  Shares

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டத்தினூடாக அது பதிலீடுசெய்யப்படவேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இணை ஆணைக்குழு சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றபோதே ஐரோப்பிய ஒன்றியத்தரப்பினர் தமது எதிர்பார்ப்பை தெளிவுபடுத்தியுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடயத்தில் விரைவாக தீர்வைப் பெற்றுத்தருவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர அடிப்படைச் சட்டப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குற்றவியல் நடைமுறைக் கோவையை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி மற்றும் 2017 மார்ச் 23ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் காணப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் இருதரப்பினரும் ஆராய்ந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எஞ்சியுள்ள பொறிமுறைகளான உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கம், இழப்பீடு மற்றும் நீதி தொடர்பிலான பொறிமுறைகளை நிறுவுவது தொடர்பில் தனது அர்ப்பணிப்பை இலங்கை இதன்போது மீள உறுதிப்படுத்தியதாகவும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக ஐரோப்பிய வெளியக நடவடிக்கை சேவையின் ஆசிய பசுபிக் வலயத்திற்கு பொறுப்பான பிரதி நிர்வாகப் பணிப்பாளர் பவோலா பம்பலோனியும் இலங்கை சார்பாக வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசமும் இந்த சந்திப்பின் போது இணைத்தலைவர்களாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருட இறுதியில் பிரசல்ஸில் நடைபெறவுள்ள அடுத்த சந்திப்பிற்கு முன்பாக தொடர்ச்சியான அவதானிப்பு நடவடிக்கைகைளை மேற்கொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதி...
பெண் குழந்தையின் அன்பு
அமலா பால் இந்த விளம்பரம் உனக்கு தேவையா...
ஜியோவின் அதிரவைக்கும் அடுத்த மெகா ஆப்ப...
84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; 4ஜி, அ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடி...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
சாத்தான் வழிபாட்டால் எல்லை மீறிய பாலிய...
மத்திரை சாப்பிட தண்ணீர் கேட்ட பெண்ணுக்...
இத்தனை அழகான திருமணத்தை பார்த்ததுண்டா....
பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை .....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 19.9K
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  20.2K
  Shares