கோடி கோடியாய் சம்பளம் வாங்கிவிட்டு 5 ரூபாய் கொடுக்க மறுக்கும் நடிகர்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகரா..!? இப்படி எல்லாம் செய்கிறாரா.!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares

கோடியில் சம்பளம் வாங்கினாலும் மக்களை கண்டுகொள்ளாத நடிகர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர்..!!
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன கிராமம் தான் பாலமேடு. இங்கு கடந்த  மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது..
அப்போது, அங்கு வேடிக்கை பார்க்க வந்த காளிமுத்து என்பவர்  மீது  சீறிப் பாய்ந்தது ஒரு காளை,
காளிமுத்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.
இறுதிச் சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ முன் வரவில்லை..  அவரது உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூட செய்து தர யாரும்முன்வரவில்லை.
இந்த நிலையில் அதே நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு இருந்த நடிகர் அபிசரவணன் ,
இந்த செய்தியைக் அறிந்து உடனடியாக காளிமுத்துவின் இறுதிச் சடங்கிற்கான உதவியாக 5000 ரூபாயை நேரில் சென்று வழங்கினார், அதுமட்டுமின்றி அவரது இறுதி சடங்கு வரை கூடவே இருந்துள்ளார்
இறந்த காளிமுத்துவிற்கு,  பத்து வயது உள்ள தங்கை இருப்பதாகவும், காளிமுத்து தான் இதுவரை,  அந்த சிறுமியின் படிப்பை பார்த்து கொண்டுள்ளார் என்ற செய்தி இந்த இளம் நடிகருக்கு தெரிய வந்துள்ளது..
தற்போது அந்த சிறுமி தனது அண்ணன் இல்லாததால், தனது படிப்பும் பாதியிலே நிற்க போகிறது, என்று எண்ணிய நேரத்தில், இனி உன் அண்ணன் இருந்த இடத்தில் நான் இருந்து படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு படிப்பைத் தொடர உதவுவேன் என அறிவித்து நெகிழ வைத்துள்ளார் அபி சரவணன்..

இவரை பற்றி..?
இதற்குமுன் டெல்லியிலேயே நடந்த, விவசாயிகள் போராட்டத்தின்போது அவர்களுடன் போராட்டத்தில் தங்கி கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன்,
தற்கொலை செய்துகொண்ட சில விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.. அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares