இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 528
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  828
  Shares

இன்றைய  பஞ்சாங்கம்
22-01-2018, தை 09, திங்கட்கிழமை, பஞ்சமிதிதி மாலை 04.25 வரை பின்பு வளர்பிறைசஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.06 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம்காலை 07.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுகூர்த்தநாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்றநாள்
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
1/22/2018
இன்றைய ராசிபலன்
“மேஷம்”
மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய  கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில்  தலையிட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 
“ரிஷபம்”
ரிஷபம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சுப  நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான  நாள். 
“மிதுனம்”
மிதுனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை  ஏற்பீர்கள்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள்  பலிதமாகும் நாள்.   
“கடகம்”
கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள்  கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது  அத்தியாயம் தொடங்கும் நாள்.   
“சிம்மம்”
சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சிறுசிறு  அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம்.  உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சிக்கனம் தேவைப்படும் நாள். 
“கன்னி”
கன்னி:  உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை  வெற்றியடையும்-. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 
“துலாம்”
துலாம்:  குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு  கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள். 
“விருச்சிகம்”
விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு  நனவாகும் நாள்.  
“தனுசு”
தனுசு: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது  வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள். 
“மகரம்”
மகரம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்  அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  வெற்றிக்கு வித்திடும் நாள்.  
“கும்பம்”
கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடை,  ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும்  நாள். 
“மீனம்”
மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப்  போகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால்  விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.  அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 528
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  828
  Shares